பாம்பு கடித்ததால் 2008 இல் கிட்டத்தட்ட 33,000 பேர் பாதிப்பு |
கடந்த 2008 இன் அறிக்கைகளின்படி இலங்கையில் கிட்டத்தட்ட 33,000 பேர் பாம்புக் கடிக்கு உள்ளானதாகத் தெரிகிறது. இதில் அநேகமானோர் பின்தங்கிய கிராமங்களிலேயே இறந்துள்ளனர். பாம்பு கடிக்கு ஆள்ளாகுவோர் சரியான மருத்துவ சிகிச்சையைப் பெறாத காரணத்தினாலேயே இறப்புகள் அதிகரிப்பதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பாம்பு கடிக்கு சிறந்த சிகிச்சை உள்ள போதும், கிராமப் புறத்தில் வசிப்பவர்கள் நாட்டு மருந்துகளை நாடுவதால் இறப்பு அதிகரிக்கிறது. அதோடு இவ்வாறு மருத்துவமனைகளுக்கு வெளியே இறப்போரின் பதிவுகளும் அரசிடம் இல்லை எனும்போது இறப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இலங்கையில் கிட்டத்தட்ட 90 வகையான விஷப் பாம்புகள் உள்ளதாகவும் இவை கடித்தால் நிச்சயம் இறப்பு நேரிடக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. உலக நாடுகளிலேயே பாம்பு கடிக்கு இறப்போர் எண்ணிக்கை இலங்கையில் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு லட்சம் மக்களில் 6 பேர் என்ற வீதத்தில் இந்த இறப்பு நிகழ்கிறது. http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1246947237&archive=&start_from=&ucat=2& |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com