டென்மார்க்கில் இடம்பெற்ற உயிர்த்தெழுவோம் நிகழ்வு |
டென்மார்க்கில் வைல நகரில் 05-07-2009 அன்று காலை 11:00 மணியளவில் உயிர்த்தெழுவோம் என்னும் எழுச்சி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டனர். |
இந்நிகழ்வு தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமானது. இதில் அகவணக்கம், கவிதைகள், எழுச்சி நடனங்கள், உரைகள் போன்றவற்றுடன் கவிஞர் காசியானந்தன் அவர்களின் சிறப்புக் கவிதை, தமிழ்ப் பற்றாளர்களாகிய திரு பழநெடுமாறன், சீமான் ஆகியோரின் சிறப்புரைகள் என்பனவும் ஒலிபரப்பப்பட்டன. இதில் கலந்துகொண்ட மக்கள் அனைவருமாக இணைந்து எழுச்சிப் பிரகடனம் ஒன்றை மேற்கொண்டனர். http://tamilwin.com/view.php?2a26QVF4b32D9ECe4d46Wn5cb0bf7GU24d3QYpD3e0dVZLucce03g2hP0cc3tj0Cde
பெங்களூரில் "உயிர்த்தெழுவோம்" "உலக தமிழ் இளைஞர் வழிகாட்டும் தளம்" என்ற அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் உயிர்த்தெழு நாள் நிகழ்ச்சி பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் நேற்று நடந்தது. இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமையை பெற்று தரும் பொறுப்பை இந்தியா ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடந்த இந்த கூட்டத்துக்கு சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தமிழ் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழுக்கு வரலாற்றில் மிகப்பெரிய நாகரீகம், பண்பாடு, கலாசாரம் உள்ளது. இதற்கு சான்றுகளும் உள்ளன. ஆனால், உலகில் தமிழன் மிகவும் தரம் தாழ்ந்த நிலையில் உள்ளான். ஏன் இந்தியாவிலேயே தமிழன் தரம் தாழ்ந்து உள்ளது. அறிவு, கலாசாரம், பண்பாடு போன்ற எல்லாவற்றிலும் நாம் தாழ்ந்து இருக்கிறோம். இதற்கு தமிழக தலைவர்கள்தான் காரணம். கர்நாடகம், ஆந்திரம், கேரளா போன்ற அனைத்து மாநிலங்களிலும் கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால் இது தமிழகத்தில் கிடையாது. மற்ற மொழி படங்களில் அரசியல் தலைவர்களை பற்றி கேலி செய்தால், அது அப்படியே வெளிவருகிறது. ஆனால் தமிழகத்தில் அரசியலை பற்றி கேலி செய்தால் அந்த படமே வெளிவராது. கருத்து உரிமை இல்லாத மாநிலம் தமிழ்நாடு. இலங்கை தமிழர் தலைவர் செல்வநாயகம் தமிழ்நாட்டுக்கு வந்து தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பெரியாரிடம் கேட்டார். அதற்கு பெரியார், `நானும் அடிமை, நீயும் அடிமை, அப்படி இருக்கும்போது எப்படி உதவி செய்ய முடியும்' என்று சொன்னார். இன்னும் நமது விடுதலையை கூட நாம் பெற முடியவில்லை. இதுபோன்ற நிலையில் மற்றவர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும். இந்த அவலத்தை போக்க தமிழர்கள் மத்தியில் சாதியை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் நமது இனம் ஒன்றுபடும். உலகில் வேறு எங்கும் சாதிகள் கிடையாது. இதை நாம் எல்லாம் சிந்திக்க வேண்டும். மிகப்பெரிய இனத்தின் எழுச்சியை கர்நாடகத்தில் தொடங்குவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. தமிழ் ஈழம் மலர வேண்டும். பல லட்சம் பிரபாகரன் வருவார்கள். அது நடக்கும். இவ்வாறு இயக்குனர் வேலு பிரபாகரன் கூறினார். இந்த கூட்டத்தில், பெங்களூர் தமிழ்ச்சங்க செயலாளர் தாமோதரன், சங்க முன்னாள் தலைவர் ராசு மாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1035&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51 நெதர்லாந்தில் எழுச்சியுடன் நடைபெற்ற உயிர்த்தெழுவோம் நெதர்லாந்தின் நாடாளுமன்ற முன்றலில் நேற்று முன்தினம் (05.07.2009) ஞாயிறன்று மிகவும் உணர்வுபூர்வமாக உயிர்த்தெழுவோம் நிகழ்வு நடைபெற்றது. நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வின் ஆரம்பத்தில் நெதர்லாந்து தேசியக்கொடியினை "இக்காட்" அமைப்பின் செயலாளர் திரு. அனாவும், தமிழீழத்தேசியக்கொடியினை தமிழ்இளையோர் அமைப்பின் தொடர்பாளர் பிரபாவும், மண்ணையும் மக்களையும் இறுதிவரைநேசித்து எதிரியுடன் தங்கள் இறுதிமூச்சுவரைபோராடி வீரச்சாவடைந்த தளபதிகள், போராளிகள், பாசிசசிங்கள அரசினால் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களிற்குமான நினைவுச்சுடரினை தமிழர் எழுச்சிக்குழுவின் இணைப்பாளர் திரு. ரூபன் அவர்களும் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து, அகவணக்கம் செலுத்தப்பட்டு இளையோர்களால் "உயிர்த்தெழுவோம்" எனும் பாடலுடன் எழுச்சிநிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. நிகழ்வுகளாக திருமதி. சாந்தி இரவீந்திரனின் மாணவர்களின் எழுச்சிநடனங்கள், கவிஞர் காசிஆனந்தனின் உயிர்த்தெழுவோம் கவிதை, திரு.சீமான் அவர்களின் ஒலிப்பதிவுசெய்யப்பட்டஉரை, இளையோர்கள் சார்பில் நெதர்லாந்து மொழியில் செல்வி சிந்துயாவின் உரை, செல்வன் வினோவின் கவிதை, "இக்காட்" அமைப்பின் செயலாளர் திரு. அனாவின் நெதர்லாந்து மொழியில் உரை, எழுச்சிக்குழு இணைப்பாளர் திரு.ரூபனின் உரைகளும் இடம்பெற்றன. மேலும், தமிழ் மக்களிற்கான அரசியல்தீர்வு தமிழீழமே, எங்கள் தலைவர் பிரபாகரன், அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் விடுவிக்கப்படவேண்டும்போன்ற கோசங்கள் ஆங்கிலமொழியில் பாடல்வடிவில் இளையோர்களால் இடைக்கிடையே மேடையில் எழுப்பப்பட்டன. இறுதியில், உயிர்த்தெழுவோம் உறுதியுரையானது மேடையில் வாசிக்கப்பட்டு, "தமிழர்களிற்கான அரசியல்தீர்வு தமிழீழத்தாயகமே" என்பது அங்குவந்திருந்த அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரகடனம் செய்யப்பட்டது. முடிவில், தேசியக்கொடிகளின் கையேற்றல்களுடன் "தமிழர் தாகம் தமிழீழத்தாயகமே" என்றஇலட்சியப்பாடலை அனைவரும் கைதட்டிப்பாடி மதியம் 2.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வானது, மாலை 5.30 மணிக்கு நிறைவுபெற்றது. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1047&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51 |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com