இலங்கை அகதி முகாமில்    மூளை காய்ச்சலுக்கு    34 தமிழர்கள் பலி             
கொழும்பு, ஜூலை.7-
இலங்கையில் போர் பகுதியில் இருந்து வெளியேறிய 3 லட்சம் தமிழர்கள் பல்வேறு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 
  ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை. சுகாதார சீர்கேட்டால் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே நூற்றுக்கணக்கானோருக்கு சின்னம்மை நோய் பரவி இருந்தது இதில் பலருக்கு வாந்தி பேதியும் ஏற்பட்டுள்ளது. 
இப்போது மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதில் 64 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 34 பேர் உயிர் இழந்தனர். இதில் 24 பேர் இளைஞர்கள் இந்த தகவலை வவுனியா அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி மகேஸ்வரன் உமாகாந்த் தெரிவித்தார். 
மூளை காய்ச்சல் கிருமி எப்படி பரவுகிறது என்பதை கண்டுபிடிக்கும் வசதி வவுனியாவில் இல்லை. எனவே கட்டுப்படுத்த முடியாமல் நோய் பரவி வருகிறது.
http://www.maalaimalar.com/2009/07/07113751/CNI037070709.html
  


  
http://www.maalaimalar.com/2009/07/07113751/CNI037070709.html










 











 






  


No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com