தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்
There was an error in this gadget

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Thursday, July 23, 2009

♥ "எனக்குப் பின்னரும் மேலும் ஓர் நாற்பது ஆண்டுகளுக்கு இந்தப் போராட்டம் தொடரும்" -பிரபாகரன்-நக்கீரன் தொடர் ♥

எனக்குப் பின்னரும் மேலும் ஓர் நாற்பது ஆண்டுகளுக்கு இந்தப் போராட்டம் தொடரும் -பிரபாகரன்
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது. எட்டுமணி நேரம் வியர்த்துக்கொண்டே இருந்தது. துடைப்பதற்கு டவல்கூட தேடவில்லை. மேஜையில் இருந்த வெள்ளை டிஷ்யூ தாள்களை எடுத்து அவ்வப்போது நெற்றியில், கழுத்துப் பகுதியில் வழிந்துகொண்டிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டார். அவரது தேவைகளை பார்த்துக் கொள்ளவென்று ""சேவைப் பணி அணி'' ஏதும் இருக்க வில்லை. அறை மூலை யில் மண்பானையில் தண்ணீர் இருந்தது. தாகம் ஏற்பட்ட போது தானே எழுந்து சென்று எவர்சில்வர் குவளையில் தண்ணீர் எடுத்துக் குடித்தார். இவையெல் லாம் சின்ன விஷயங்கள்தான். ஆனால் போர்க் கள வெற்றிகளும், உலகத் தமிழரின் உள்ளங்களில் உயர்ந்து நின்ற தகைமையும், தன் கீழ் பல படையணிகள் -என ஆர்ப்பாட்டம் காட்டுவதற்கு அனைத்துமிருந்தும் அவர் இயல்பாயிருந்தார் என்பது மிகவும் பிடித்திருந்தது.

மிகவும் நகைச்சுவையான மனிதர்கூட 60 நிமிடம் பேசினால் 50 நிமிடம் கலகலப்பாக நகைச்சுவை ததும்பிடப் பேசும் ஆற்றல் லட்சத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும். அத்தகையோரை நமக்கு மனதாரப் பிடித்துவிடும். வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் அப்படியொரு கதையாடி. தமிழ் சினிமா பற்றி பேச்சு வந்தபோது, ""எங்கட போராளிகளுக்கு ஹாலிவுட் சினிமா காட்டுவோம். ஆனா அந்த வெள்ளைக்கார பெட்டையளுக்கு மட்டும் கிராஃபிக்ஸ்ல தமிழ் உடுப்பு போட்டு விடுவோம்'' என்றார்.

பல்கலைக்கழகம் சென்று படிக்காத அவர், தன் முயற்சியால் ஆங்கிலம் படித்திருக்கிறார். நான் அவரை சந்தித்த காலத்தில் வெளிவந்து உலக அளவில் பேசப்பட்ட புத்தகங்களைப் பற்றி தன் உரையாடலில் மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டது எனக்கு வியப்பாக இருந்தது. "புத்தகங்களெல்லாம் படிக்க எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?' என்று கேட்டேன். ""வேலை களையெல்லாம் எல்லோருக்கு மாய் பகிர்ந்து கொடுத்துவிட் டேன். எனக்கு பெரிய வேலை, காயம்பட்டு நிரந்தரமாய் படுக்கை யிலாகிவிட்ட போராளிகளை அவ்வப் போது பார்த்துக் கொள்வதும் புத்தகங்கள் படிப்பதும்தான்'' என்றார்.

என்னால் நம்ப முடியவில்லை. தலைசிறந்த நிர்வாகி தானே மாங்கு மாங்கென்று எல்லா வேலைகளையும் செய்து களைத்துப் போகிறவனல்ல. தகுதியானவர் களை அடையாளம் கண்டு -வள்ளுவர் சொன்னது போல் - "இதனை இதனால் இவன் முடிப்பான் என்றறிந்து அதனை அவன் கண் விடும் ஒப்பிலா நிர்வாகியாய் அவரை நான் கண்டேன்'.

உண்மையில் ""தலைவன் என்கிறவன் இலட்சியத்தை மேலாண்மை செய்கிறவன், தினசரி வேலைகளை நிர்வகிக்கிறவனல்ல'' என்ற புகழ்பெற்ற மேலாண்மை விதியை அவரிடத்தில் நிதர்சனமாய் பார்க்க முடிந்தது.

உணவு இடைவேளையின்போது பாட்டி ஒருவர் திடுமென உரிமையோடு உள்ளே வந்தார். பாதி பற்கள் போயிருந்த பாட்டி ஓய்வு பெற்ற ஆசிரியராம். சொத சொதவென வெற்றிலை பாக்கு சொதப்பிக்கொண்டே வந்தார். தலைவரிடம் வன்னி விளாங்குளம் பகுதி மக்களின் பிரச்சனைகள் சிலவற்றை எடுத்துக் கூறினார். தலைவன்-மக்கள் உரையாடலாய் அவர்களின் பேச்சு இருக்கவில்லை. தாய்-மகன் போல், அக்கா-தம்பிபோல், குடும்பத்தில் ஒருவர்போல் உரிமையும், நேசங்களும் தோய்ந்த அந்த உரையாடலை இப்போது நினைக்க நெஞ்சம் நிறைந்து ஒரு வகையான ஏக்க உணர்வில் அடைக்கிறது.

உரையாடல் போக்கில் பாட்டியிடம் பிரபா கரன், ""பாட்டி, உங்களிடம் எனக்கு எல்லாம் பிடிச் சிருக்கு. இந்த வெத்திலை பாக்கு பழக்கம் தவிர'' என் றார். பாட்டி பதிலெல்லாம் யோசிக்கவில்லை. பேசிக்கொண்டிருந்த அதேபோக்கில் பொலபொல வென பொரிந்தார்.

""தம்பி... இஞ்செ பாருங்கோ... உம்மகிட்டேயும் எனக்கு பல விஷயங்கள் பிடிச்சி ருக்கு. ஆனா இந்த வெத்திலெ பாக்கு விஷயத்திலெல் லாம் நீர் தலையிடறது எனக்கும் துப்புரவா பிடிக்கலெ''. ""வாழ்ந்தவர் கோடி, தாழ்ந்தவர் கோடி மக்களின் மனங்களில் நிற்பவர் யார்?'' என்ற புரட்சித் தலைவரின் பாடல் நினைவுக்கு வருகிறது.

சாமான்ய மக்கள் எவரும் வேலுப்பிள்ளை பிரபாகரனை சர்வாதிகாரியாகவோ, ஏன் போராளி இயக்கத் தலைவராகவோ கூட பார்க்கவில்லை யென்பதையும், தங்கள் தம்பியாக -அண்ணனாகவே பார்த்தார்கள் என்பதையும் வன்னியில் நான் சுற்றித் திரிந்த அந்நாட்களில் அறிய முடிந்தது.

புகழ்ச்சி எல்லோருக்கும் பிடிக்கும். தலைவர் களுக்கு ரொம்பவே பிடிக்கும். வேலுப்பிள்ளை பிர பாகரன் அவர்கள் எந்த அளவுக்கு புகழ் போதைக்கு அடிமையென்பது எனக்குத் தெரியாது. ஆனால் இதுவரை நான் நேர் கண்ட முக்கியமானவர்களில் மிகவும் நேர்மையான எளிமையோடு, தன்னுணர்வு சுயபிரக்ஞை இல்லாமல் அப்பட்டமான நேர்மை யோடு பதிலளித்த ஒரே மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்தான். ""தமிழீழ தேசியத் தலைவர் என்ற தகைமையை எவ்வாறு நீங்கள் உணர்கிறீர்கள்?'' என்ற எனது கேள்விக்கு அவர் தந்த பதில் காவியங்களைக் கடந்த வரலாற்றுப் பதிவாக நிற்குமென நினைக்கிறேன்.

இதோ பிரபாகரன் பேசுகிறார். ""பாருங்க ஃபாதர். இப்போ கனபேர் என்னைப்பற்றி கதை எழுதுறாங்கள். "பிரபாகரன் பிறப்பிலேயே வீரன், பதினைந்தாம் வயதிலேயே அவனுக்கு தமிழீழ கனவு பிறந்தது. பறவைகளை குறி தவறாது அவன் கொன்று வீழ்த்துவான். இப்படியெல்லாம் கதை எழுதுறாங்கள். உண்மையை சொல்லப்போனால் ஃபாதர் எனக்கு அந்த வயதில் தமிழீழமும் தெரி யாது, வடக்கு-கிழக்கும் தெரியாது. ஒண்ணும் பெரிதாகத் தெரியாது.

வல்வெட்டித்துறை நூலகத்தில் நாளிதழ்களும் புத்தகங்களும் படிக்கிற மாணவர்கள் நாங்கள். ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில் ""தமிழ்பெண்கள் கற்பழிப்பு'', "சிங்கள காவல்துறை அப்பாவி தமிழர் மீது தாக்குதல், சித்ரவதை என்றெல்லாம் செய்திகள் படிக்கும்போது ரத்தம் கொதிக்கும். மனம்கிடந்து தவிக்கும். எதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கும். ""சாகிறதுக்கு முன்னம் ரெண்டு சிங்கள ஆர்மிக்காரனையோ போலீசையோ சுட்டுப்போட்டு சாகணும்'' என்று தான் வீட்டை விட்டு ஊரைவிட்டு நாங்கள் புறப்பட்டோம்.

எங்கள் இலட்சியம் அன்றைக்கு மிகச் சின்னது. தமிழர் படும் துன் பங்களுக்கெல்லாம் எங்களாலான சிறிய பதில் - ஓரிரண்டு பேரை பழி தீர்ப்பது. அப்படித் தான் புறப்பட்டோம். ஆனால் பயணமும் பாதை யும் பலவற்றை எங்களுக்குக் கற்றுத் தந்தது. முக்கியமாக தமிழீழம் என்ற கனவினைத் தந்தது. தமிழருக்கென தனியொரு நாடுதான் கொடுமைகள், துன்பங்கள், யாவிற்கும் தீர்வு என்ற புரிதலைத் தந்தது. எங்கள் மக்களின் பாசத்தாலும் போராளிகளின் தியாகத்தாலும் எமது மக்களுக்கான போராட்ட இயக்கமொன்றை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை நாங்கள் கட்டி எழுப்பினோம்.

"பிறப்பால் போராளிகள் என்பதால் நாங்கள் போராட வரவில்லை. போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது' என்ற புரிதலில் நின்றுதான் எங்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாக வளர்த்தெடுத்து வருகிறோம்.

""இன்னும் ஒருபடி தெளிவாகச் சொல்வதானால், தமிழீழம் அமைத்து, அதற்குத் தலைவனாக வேண்டும் என்ற எண்ணத்தி லெல்லாம் நான் போராடவில்லை.

உண்மையில் எனது காலத்தில் தமிழீழம் வரும் என்று கருதிக்கூட நான் போராட்ட களத்தில் நிற்கவில்லை. எனக்குப் பின்னரும் மேலும் ஓர் நாற்பது ஆண்டு களுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்து நடப்பதற்கு தேவையான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையுமே நான் செய்துகொண்டி ருக்கிறேன். அந்த உணர்வோடே நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.''


அவரது பதிலை இன்று 7 ஆண்டுகளுக்குப்பின் நினைக்கிற போதும் சிந்தை சிலிர்க்கிறது. விடுதலைப் போராட்டம் பற்றி அவர் கொண்டிருந்த யதார்த்தமான புரிதல் தெளிவுகாண வியப்புணர்வொன்று விரிகிறது. அம் மாமனிதன் இன்று களமாடி நிற்கும் முல்லைத்தீவு காடுகள் நோக்கி மனக்கண்கள் திரும்புகின்றன.

கடந்த இதழைப் படித்துவிட்டு நண்பர்கள் சிலர் கவலையோடு கேட்டனர். இவற்றையெல்லாம் இப்போது சொல்வ தால் உங்களுக்கு நாளை பிரச்சனைகள் வராதா என்று. நானோ, காலங்கடந்து எழுதுகிறேன் என்ற குற்ற உணர்வில் தவிக்கிறேன். எதைப்பற்றிய அச்சமும் எனக்கு இன்று இல்லை. நான் தமிழன், எனது இனம் உலகின் மிகப்பழமையான, உயர்ந்த பண்புகளையும் விழுமியங்களையும் கொண்ட ஒப்பிலா இலக்கியங்கள் படைத்த, சுயமரியாதை கொண்ட, எட்டுகோடி உயிர்களைக்கொண்ட ஒரு மிகப்பெரிய தேசிய மக்கள் இனம் என் இனம். என் இனத்தில் ஒன்றரை லட்சம் பேரை கொன்றழித்து, இன்று மேலும் அதே எண்ணிக்கையிலான மக்களை முல்லைத்தீவில் உயிரோடு புதைத்துவரும் கிராதக சிங்கள பேரினவாதிகளோடு சேர்ந்துகொண்டு இந்திய ஆளும் வர்க்கத்தில் ஒரு பகுதியினரும், பெரும் உலக சக்திகளும் என் இனம் சார்ந்த அம்மக்களின் போராட்டத்தை "பயங்கரவாதம்' என முத்திரை குத்துவது என் இனத்தையே சிறுமைப்படுத்தும் செயலாகும். குறைந்தபட்சம் என்னால் ஆனது அச்சமில்லா எதிர்குரல். ஒலிக்கும் எது வரினும்.

"இந்தியாவை ஏன் நீங்கள் பகைத்துக்கொண்டீர்கள்?' என்ற கேள்வியைத் தொடர்ந்து "கலைஞரையும் பல தருணங்களில் நீங்கள் காயப்படுத்தினீர்களே...' என்றேன்.

""இரண்டு தலைமுறை இளைஞர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் கலைஞர். நாங்கள் எல்லோரும் கலைஞரின் உரைகள் கேட்டு தமிழுணர்வில் ஊறியவர்கள். யாழ்ப்பாணம் சென்று பாருங்கள் கலைஞரின் உரைகள் அடங்கிய கேசட்டுகள் இல்லாத கடைகளை நீங்கள் பார்க்க முடியாது. சில சூழ்நிலைகள் அவர் மனம் வருந்தும்படி அமைந்திருக்கலாம். ஆனால் அவர் மிகப்பெரிய தலைவர். நான் சொல்ல விரும்புவது ஒன்று தான்...

(நினைவுகள் சுழலும்)


நக்கீரன்

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!