இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்குவதைத் தடுக்கும் முயற்சியில் இந்தியா |
தமிழீழப்போர் ஆரம்பித்த காலம்தொட்டு தமிழக மக்களும், தமிழக அரசியல் வாதிகள் பலரும் புலிகளுக்கு பலத்த ஆதரவளித்தனர். இதனால் இலங்கையரசு கேட்கும் அனைத்து ராணுவ மற்றும் ஆயுத உதவிகளை இந்தியாவால் முழுவதும் வழங்கமுடியாத ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஆனால் இலங்கையோ தமக்கு ஆயுத உதவியை வழங்கக்கூடிய பாகிஸ்தான், சீனா ஆகியவற்றை நாடி ஆயுதத்தைப் பெற்றுக்கொண்டது. இவ்விரு நாடுகளும் இந்தியாவுக்கு எதிரான நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட சில படுகொலைகளை புலிகள் செய்ததால் அது ஒரு பயங்கரவாத இயக்கம் என இந்தியாவின் பிறபகுதிகளிலுள்ள மக்கள் கூறத்தொடங்கியதால் இந்தியா இலங்கையை முற்றுமுழுதாக புறக்கணித்துவிடாமல் ராடார், யுத்தக் கப்பல்கள் போன்ற ஆயுதத் தளபாடங்களை வழங்கிவந்தது. புலிகளின் ஆயுதக் கடத்தலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடற்படையினரின் ரோந்தை இந்திய-இலங்கைக்கடற்பரப்பில் முடுக்கிவிட்டது இந்தியா. இலங்கையும் இதையடுத்து, பாகிஸ்தான், சீனா ஆகியவற்றிடம் 200 மில்லியன் டொலருக்கு வாங்கவிருந்த ஆயுதங்களை ரத்துச் செய்துள்ளது. புலிகளை ஒழித்துவிட்டதால் இனி ஆயுதம் தேவைப்படாது என்று கூறுகிறது இலங்கை. உண்மையில், இலங்கையிலும் இந்திய கடற்பரப்பிலும் சீனாவின் ஆதிக்கம் மேலோங்குவதால் விழிப்படைந்த இந்தியா அதை முடக்கும் வகையில் தொழிற்படுகிறது. சீனாவுக்கான எரிபொருள் விநியோகமும், சீன வர்த்தகமும் இந்திய கடலினூடாகவே செல்வதால் அவற்றுக்கு பாதுகாப்பு வழங்கும்பொருட்டு சீனா இலங்கைக்கு உதவுவதுபோல தனது கடற்கலங்களை இந்தியக் கடலில் நிலைநாட்ட முனைகிறது. இந்த நடைமுறை தடுக்கப்படவேண்டும் என்றால் இந்தியா, இலங்கைக்கு உதவி செய்து தமக்கு அச்சுறுத்தலாக உள்ள சீன ஆதிக்கத்தை தடுக்கும் எண்ணத்திலுள்ளது. இலங்கையும் சீனாவின் உதவிகளை விட்டு இந்தியாவின் கைகளைப் பற்றிக்கொள்ளும் என நம்பப்படுகிறது. http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1248352715&archive=&start_from=&ucat=2& |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com