விடுதலைப்புலிகளுடன் போரின்போது இலங்கை ராணுவத்தில் இருந்து தப்பிய வீரர்களுக்கு பொதுமன்னிப்பு
கொழும்பு, ஜூலை.20-
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்தது. அப்போது விடுதலைப்புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இலங்கை ராணுவ வீரர்கள் சுமார் 65 ஆயிரம் பேர் தப்பிச் சென்றதாக தெரிகிறது.
இவர்களில் 2 ஆயிரம் பேரை இலங்கை அரசு கைது செய்தது. இவர்கள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு புதிதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு மந்திரியாக பொறுப்பேற்ற மிலிந்த மொறகொடா வெலிக்கடை சிறைக்கு சென்றார்.
கைது செய்து அடைத்து வைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் தங்களை விடுதலை செய்யு மாறு அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, இலங்கை ராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற அனை வருக்கும் பொதுமன்னிப்பு வழங்க அந்நாட்டு அரசு ஆராய்ந்து வருகிறது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபய ராஜபக்சேயுடன் மந்திரி மிலிந்த மொறகொடா ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த விஷயம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தலைமையில் நடைபெறும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்ததகவலை மந்திரி மிலிந்த மொறகொடா தெரிவித்துள்ளார்.
போரின்போது தப்பிய ஓடிய ராணுவ வீரர்களில் சரணடைபவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என இலங்கை அரச பலமுறை அறிவித்தது. இருந்தும் எதிர் பார்த்த அளவுக்கு ஏராள மானவர்கள் சரணடைய வில்லை.
தப்பிச் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் தலைமறைவாக இருப்ப துடன், அரசுக்கு எதிராக உள்ள அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே பொது மன்னிப்பு வழங்குவதன் மூலம் மட்டுமே இவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுத்து நிறுத்த முடியும் என்றும் மந்திரி மிலிந்த மொறகொடா தெரிவித்துள்ளார்.
http://www.maalaimalar.com/2009/07/20110027/CNI0150200709.html
http://www.maalaimalar.com/2009/07/21121244/CNI0230210709.html
விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்படவில்லை: சிங்கள பாதுகாப்பு அதிகாரி சொல்கிறார்
http://www.maalaimalar.com/2009/07/20163137/CNI0400200709.html
http://www.maalaimalar.com/2009/07/20110027/CNI0150200709.html
இலங்கையில் போரின்போது தப்பிச்சென்ற சிங்கள ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பு, ஜூலை 21-
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் நடைபெற்றது. அப்போது விடுதலைப்புகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள், 65 ஆயிரம் பேர் ராணுவத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அவர்களை தேடும் பணியில் ராணுவத்தினரும், போலீசாரும் ஈடுபட்டனர். ஆனால், ஒரு சிலர் மட்டுமே பிடிபட்டனர். பலர் சிக்கவில்லை.
தப்பி ஓடியவர்களில் பெரும்பாலானவர்கள் தனியார் துறை நிறுவனங்களில் வேலை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே தப்பி ஓடியவர்களில் 150 பேரின் பெயர் மற்றும் முகவரியை பெறும் நோக்கில் ராணுவ உயர் அதிகாரி ரவீந்திர பிரேமரத்னா முன்னிலையில் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
http://www.maalaimalar.com/2009/07/21121244/CNI0230210709.html
விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்படவில்லை: சிங்கள பாதுகாப்பு அதிகாரி சொல்கிறார்
கொழும்பு, ஜூலை. 20-
இலங்கை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புக் வெல்ல ஒரு தனியார் தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விடுதலைப்புலிகளுடன் இலங்கை ராணுவம் நடத்தி வந்த போர் முடிந்துவிட்டது என்றாலும் விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்று குறிப்பிட்டு சொல்ல இயலாது. விடுதலைப்புலிகள் மீண்டும் எழுவதற்கு மிக, மிக குறைவான வாய்ப்புகளே உள்ளன.
எதிர் காலத்தில் இலங்கையில் எந்த குழுவும் ஆயுதம் ஏந்த முடியாதபடி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது கரையோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சூசை ஒரு தடவை கூறுகையில் உண்மையான சண்டை கடலில் உள்ளதாக குறிப்பிட்டார். அவை அனைத்தையும் முறியடித்து விட்டோம். தற்போது விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் செயல்படுகின்றனர்.
விடுதலைப்புலிகள் பலம் பொருந்தியவர்களாக இருந்தனர். விமானம் வைத்திருந்தனர். வெள்ளையர்கள் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தனர்.
அவர்கள் பலத்தை சிங்கள ராணுவம் வெற்றி கண்டுள்ளது. போர் முடிந்துவிட்டாலும் அதன் மாயை இன்னும் முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
http://www.maalaimalar.com/2009/07/20163137/CNI0400200709.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com