சீனாவே எங்களுக்கு வாழ்நாள் நண்பன்: இலங்கை அறிவிப்பு
பீஜிங், ஜூலை. 4-
இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ரோகித போகல்லாகம் சீனநாட்டுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் செய்துள்ளார். பீஜிங்கில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
இலங்கை அரசுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்பட்டதோ அப்போதெல்லாம் சீனா தான் உதவியாக இருந்தது. எங்களுக்கு எல்லாவித ஒத்துழைப்பு கொடுப்பது சீனா மட்டும்தான்.
சீனா மட்டும்தான் எங்களுக்கு வாழ்நாள் நண்பனாக உள்ளது. வேறு எந்த நாடும் அப்படி இல்லை. இன்று உலகில் சீனா மிக முக்கியமான ஒரு இடத்தை வகிக்கிறது. ஆசிய மண்டலத்திலும் சீனாதான் ஆளுமை மிகுந்த நாடாக உள்ளது.
சீனா ஆதிக்கம் தற்போது மிகுந்துள்ளது. இதன்மூலம் சீனா எப்போதும் எங்களுக்கு உதவியாக இருந்து வருகிறது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு மேலும் பலப்படுத்தப்படும். அந்த நோக்கத்துடன்தான் நான் சீனாவுக்கு 5 நாள் பயணம் வந்துள்ளேன்.
இவ்வாறு இலங்கை வெளியுறவு மந்திரி ரோகித போகல்லாகம கூறினார்.
http://www.maalaimalar.com/2009/07/04111907/CNI011040709.html






























No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com