தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை நிரந்தரமாக்க சிங்கள அரசு ஆலோசனை
பிரான்சில் நடைபெற்ற உலக அகதிகள் தினத்தில் பெருமளவு மக்கள்
கொழும்பு, ஜூலை. 4-
இலங்கையில் நடந்த போரில் சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் அகதி களாக்கப்பட்டனர். அவர்கள் 35க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் ஆடு, மாடு போல அடைத்து வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.
உறவினர்களை பிரிந்து முகாம்களில் மன அழுத்தத்துடன் இருக்கும் மக்களை விரைவில் அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூறியது. இதையடுத்து 6 மாதத்தில் முகாம்களில் உள்ள தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை கூறியது. ஆனால் தற்போது சிங்கள அரசு ஓசை இல்லாமல் வேறு ஒரு திட்டத்தை அரங்கேற்ற தொடங்கி உள்ளது.
தமிழர்கள் பகுதியில் சீரமைப்பு பணி முடிய 3 வருடமாகும் என்று சிங்கள அரசு சொல்கிறது. கண்ணி வெடிகளை அகற்ற இந்த கால அவகாசம் தேவை என்று சொல்கிறார்கள். இந்த பணி முடிய 5 ஆண்டுகள் வரை கூட ஆகலாம் என்றும் சிங்கள அதிகாரிகள் சொல்லியபடி உள்ளனர்.
இந்த நிலையில் உலக நாடுகள் எதிர்ப்பை சமாளிக்க முள்வேலிக்கு பதில் சுவர் கட்ட தொடங்கி உள்ளனர். முகாம்களில் ரகசியமாக சில கட்டுமான பணிகளும் நடக்கின்றன. இதன் மூலம் ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட சிங்கள அரசு சதி திட்டம் தீட்டி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவில் தமிழர்களை விரட்டி விட்டு, அந்த பகுதிகளை முழுமையான சிங்களர்கள் குடியிருப்புகளாக மாற்றும் சதி திட்டமாக இது கருதப்படுகிறது. எனவே அகதிகள் முகாம்களை நிரந்தர முகாம்களாக மாற்றும் முயற்சிக்கு தமிழர்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
http://www.maalaimalar.com/2009/07/04105629/CNI08040709.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com