சேகுவேரா எழுதியவர் தா. பாண்டியன்
இப்புத்தகத்தின் முதல் பதிப்பு 2005 இல் வெளி வேண்டு உள்ளது . இது வரை
மூன்று பதிப்புகள் வெளி வந்து உள்ளன . இப்புத்தகத்தை குமரன் பதிப்பகம்
வெளி இட்டு உள்ளது. விலை ரூ. 100/- .சேகுவேரா பற்றி அறிய ரொம்ப நாள்
ஆசை பட்டு கடந்த ஜனவரி மாதம் புத்தக கண் காட்சியில் வாங்கினேன். முதல்
அத்தியாத்தில் சே வின் முதாதையர் வரலாறு அவர்கள் குடும்ப பின்
புலன்கள் ஸ்பெயின் தொடர்பு என வள வள என சென்றதால் எப்போவது தூக்கம்
வரவில்லை என்றால் இந்த புத்தகத்தை எடுத்து படிப்பேன் தூக்கம் நாலு வரி
படிப்பதற்குள் வந்து விடும். அப்படி படிக்க ஜனவரி மாதம் ஆரம்பித்து
தற்போது முடித்தேன். ஆனால் முதல் சில அத்தியாங்கள் அவ்வாறு இருந்தாலும்
பின் வரும் அத்தியாங்கள் பலவற்றை ஒரே நாளில் படித்தேன். சே என்ற
ஒப்பற்ற மனிதனை இவ்வளவு நாள் முழுதும் அறியாமல் போனோமே எனும் ஆதங்கம்
உள்வந்து.
அர்ஜன்டைனாவில் பிறந்து க்யுபா நாட்டின் விடுதலை க்கு பிடரல் காஸ்ட்ரோ
உடன் இணைந்து போரிட்ட மாவீரன் என்று மட்டும் மொட்டையாக தெரியும் .
ஆனால் அவர் கம்யூனிஸ்ட் கட்சியினை சாராத கம்யூனிஸ்ட் எண்ணம் உள்ள ஒரு
மாபெரும் உலக போராளி . டாக்டர் பல்கலைகழகம் அளித்த கொவ்ரவ டாக்டர்
பட்டம் அல்ல . மருத்துவ டாக்டர். இளமை யில் கண்ட தொழுநோய்களின் துன்பம்
துன்பம் கண்டு மருத்தவம் படித்தவர் . தொழு நோய் அதிகம் பாதிக்கப்பட்ட
தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்று மருத்துவம் இலவசமாக பார்த்து உள்ளார்.
சிறு வயதிலேயே தான் உலகத்தில் உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒழிக்க
பிறந்தவன் என உணர்ந்து. உலக சுற்ற தன் நண்பனுடன் செல்ல ஆரம்பித்து
விட்டார். இவரது காதலி இதனால் இவரை விட்டு பிரிந்தார். தனது தாயின்
அன்பினை பிரிந்து பல நாடுகளுக்கு சென்றார். அவ்வாறு செல்லும் போது
காஸ்ட்ரோ வின் க்யுபா போராட்டம் அறிந்து அவருடன் இணைந்து புரட்சி படை
உருவாக்கி கொர்ரில்லாபோர் முறையில் பாடிஸ்டா ஆட்சியினை அகற்றினார்.
அந்நாட்டு நிதி மந்திரி ஆனார். ஆனால் அந்த சொகுசு வாழ்க்கையில் காலம்
தள்ளி இருந்தால் அவர் சாரசரி அரசியல் வாதியை விட சற்று உயர்ந்தவர் என்ற
எண்ணம் மட்டும் இருக்கும் ஆனால் க்யுபா வின் குடிஉரிமை துறந்து காங்கோ
விடுதலைக்காக அந்த நாட்டு காடுகளில் அலைந்து திரிந்து அவர் பட்ட
கஷ்டங்கள் அவரின் ஆஸ்துமா தொல்லையிலும் அவர் அந்நாட்டு குழுக்களை இணைத்து
போராட எடுத்து கொண்ட முயற்சி, அதன் பின் பொலிவியாவின் ஆட்சிக்கு எதிராக
அவர் நடத்திய கொரில்லா போர் . அந்த தண்ணீர் கிடைக்காத காட்டில் குதிரை
கறி சாப்பிட்டு வயிற்று போக்கினால் கஷ்டப்பட்ட போதிலும் வெளி உலக
தொடர்பு இல்லாதபோதிலும் நாற்பத்தி ஐந்து மைல் கள் கிழ்ந்த சூவுடன்
நடந்து அவர் நடத்திய போர் வாழ்க்கை சோகமாக சித்தரிக்க பட்டு உள்ளது .
கண்ணீர் வரவழைக்கும் சம்பவங்கள் அவைகள் . பொலிவிய அரசாங்கம் அமெரிக்க
கைகூலியாக செயல் பட்டு அவரை ஒரு பள்ளியில் கைகளை கட்டி சுட்டு தள்ளி
தங்களது ஏகாதிபத்திய வெறிக்கு இரை ஆக்கியது. ஆனால் விடுதலைக்கு போராடும்
அனைத்து விடுதலை படைக்கும் சே இறை வானாகி விட்டார் . தன் நாட்டு தன்
இன விடுதலைக்கு போராட மறுக்கும் மானம் கேட்ட அரசியல் வாதிகள் வாழும்
உலகில் உலக நாடுகளின் விடுதலைக்கு போரிட்ட ஓர் ஒப்பற்ற தலைவன்
சேகுவேரா என்பதால் என் உள்ளத்தை கொள்ளை கொண்டு விட்டார்.
"பிச்சுமணி" <v.pitchumani@gmail.com>
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com