|
கண்ணுக்குக் குளிர்ச்சியான கணினித்திரையைப் பெற
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicVEbBK9QE6nWe-7DhbSuNx8G-HrynKr7u4ZDT16vhqCTk1ADMLSzM2j1xJ2YXM2Tvvx5edor9B34TmVlQAkLM3jnB5Q3Bs8wpJ2mEicJZdz9UoqoevtP2cY9hDbp7uFyD29e2O7-2vhQ/s400/logoflux.png)
Contrast, Brightness என்று சொல்வார்கள். அந்த விசைகளை கணினித் திரையான LCD / CRT Monitor ல் அவ்வப்போது சரிசெய்வோம்.
பல நேரங்களில் வேலையின் ஆதிக்கத்தில் மெய்மறந்து கண் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? இந்த நிரலை எப்படியாவது எழுதிவிட வேண்டுமென்று கூகிளைத் துணைக்கு அழைத்து போராட்டத்தைத் தொடர்வோம்.
இப்படி சதா சர்வகாலமும் கணினியுடன் போராடும், மிகுந்த வேலைப்பளுவில் (stress) இருப்பவர்களின் கண்களைப் பாதுகாப்பதற்கு ஒரு எளிய மென்பொருள் உள்ளது.
பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளிச்ச அமைப்பானது ஒவ்வொரு நாட்டுக்கும், நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடும். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி நேர வித்தியாசங்கள் - சூரிய உதயம் / அஸ்தமனம் இருக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மென்பொருள இயக்கி, நாம் எங்கே வசிக்கிறோம் - நமது இருப்பிடத்தின் latitude, மற்றும் longitude ஆகியவற்றின் மதிப்பைக் கொடுத்தால் தானியங்கித்தனமாக நமது கணினித் திரையின் ஒளியின் அளவை இந்த மென்பொருள் அவ்வப்போது மாற்றிவிடும். நமது கண்களையும் பாதுகாக்கும்.
இந்த மென்பொருளின் பெயர் F.lux
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhX5Zl2y-W9Lpg0o3hJSwqj4Sj_jyjsVBG2vSCEs5zCp52ToDsfkhKWUnFhW_WlfCCNQA__Ks1Ib89E3Ysvb_JHWbsnH3Z8Xah6iBXxDW4o-3vj2GFz342K6_gWc8i3Sk4ImrNAROYvJUc/s400/flux.jpg)
முதன் முதலில் இந்த பயன்பாட்டை இயக்கும்போது கண்களுக்குப் பழக்கமில்லாத ஒரு அந்நியத்தன்மை இருக்கும். ஆனால் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தால் வித்தியாசத்தை உணரலாம்.
மேலும் விபரங்களுக்கும், மென்பொருள் தரவிறக்கத்துக்கும் இந்தச் சுட்டியை அழுத்தவும் : http://www.stereopsis.com/flux/
http://www.tamilnenjam.org/2009/04/blog-post_17.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com