தாய்மொழியில் படித்தவர்களுக்கே அடிப்படை அறிவு அதிகம் கிடைக்கிறது. இதனால் சாதிப்பதற்கு வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கிறது என்று சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். கோபி பிகேஆர் மகளிர் கலைக்கல்லூரி 15-ம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் மயில்சாமி அண்ணாதுரை, அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், இந்தியா 2020-க்கு முன்பே வல்லரசாக மாறும். நாளைய இந்தியா நிச்சயமாக உலக நாடுகளுக்கெல்லாம் தலைவனாக உயரப்போகிறது. அதற்கு அடையாளம்தான் தற்போது நிலவில் உலா வந்து கொண்டிருக்கும் சந்திரயான்-1 விண்கலம். 1960 மற்றும் 70-களில் நிலவில் ஆராய்ச்சி நடத்தியிருந்தாலும், தற்போது இந்தியா தன் விண்கலத்தின் மூலம் ஆராயும் இடம் இதுவரை யாரும் கால் பதிக்காத இடம். தற்போது இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவும் அந்த இடத்திற்கு படையெடுத்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com