சென்னை: சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக சாப்ட்வேர் துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டதால் இம்முறை மருத்துவப் படிப்பில் சேர மாணவ, மாணவியர் இடையே கடும் போட்டி ஏற்படும் என்று தெரிகிறது.
கடந்த பல வருடங்களாகவே பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இடையே பிஇ, பிடெக் ஆகிய படிப்புகளுக்கு, அதிலும் குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் சேரவே கடும் போட்டி நிலவி வந்தது.
மருத்துவம், பொறியியல் இரண்டும் கிடைத்தால் மருத்துவப் படிப்பை விட்டுவிட்டு ஐடி கல்வி பயிலவே மாணவர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
ஆனால், இப்போது ஐடி துறையில் இருக்கும் வேலைகளுக்கே உத்தரவாதம் இல்லாத நிலை. புதிய வேலைவாய்ப்புகள் குதிரைக் கொம்பாகிவிட்டன. சம்பளக் குறைப்புகள் வேறு.
இந் நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு 1.5 லட்சம் விண்ணப்பங்களை வினியோகிக்க திட்டமிட்டுள்ளது.
ஆனால், பொறியியல் படிப்பில் சேருவதை விட மருத்துவப் படிப்புக்கே இம்முறை அதிக மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டுவர் என்று தெரிகிறது.
தமிழகத்தில் 15 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீதம் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கும், 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் தரப்படும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மூகாம்பிகை மருத்துவ கல்லூரி சிறுபான்மை கல்லூரியாகும். அதில் 50 சதவீதம் அரசு ஒதுக்கீடும், 50 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழும் இடங்கள் நிரப்பப்படும்.
மற்ற தனியார் மருத்துவ கல்லூரிகளில் 65 சதவீதம் அரசு ஒதுக்கீடும், 35 சதவீதம் தனியார் ஒதுக்கீட்டின் கீழும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
புதிய மருத்துவக் கல்லூரிகள் ஏதும் திறக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டு இருந்த அதே அளவு சீட்கள் தான் இந்த ஆண்டும் உள்ளன.
கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு 12,000 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இம்முறை மாணவர்கள் அதிகமாக விண்ணப்பிப்பர் என்று தெரியவந்துள்ளதால் 16,000 வரை விண்ணப்பங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டதால் பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்கவுள்ளது.
நன்றி: http://thatstamil.oneindia.in/news/2009/04/25/tn-more-students-will-opt-for-mbbs-than.html
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com