வன்னியில் உள்ள மக்களை மனிதாபிமான உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா அரசிடம் முன்வைப்பதற்கு அனைத்துலக சமூகம் தவறிவிட்டது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கும் விடுதலைப் புலிகள், பட்டினி போடுதலை தமிழர்களுக்கு எதிரான ஒரு போர் ஆயுதமாக அரசாங்கம் பயன்படுத்துவதாகவும், இது ஜெனீவா உடன்படிக்கையை மீறும் ஒரு செயற்பாடு எனவும் தெரிவித்திருக்கின்றது. சில நாட்களுக்கு முன்னர் வன்னியைச் சென்றடைந்திருக்க வேண்டிய மனிதாபிமான உதவிகளைத் தாங்கிய கப்பலை சிறிலங்கா அரசாங்கம் தடுத்துள்ளது. சிறிலங்கா அதிகாரிகளின் அனுமதிக்காக இந்தக் கப்பல் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நிலையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள 12 சதுர கிலோ மீட்டர் பகுதியில் சுமார் 1,25,000 மக்கள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 2 ஆம் நாளுக்குப் பின்னர் இவர்களுக்கான உணவு விநியோகங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய பட்டினிச் சாவைத் தவிர்ப்பதற்காக உடனடியாக உலர் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என ஏப்ரல் 11 ஆம் நாள் உள்ளுர் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கை இதுவரையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. வன்னியில் உள்ள மக்கள் நாளாந்தம் ஒருவேளை உணவை மட்டுமே கடந்த ஐந்து வாரங்களுக்கும் மேலாக உண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளையில், பாதுகாப்பு வலயத்தின் மீதான தாக்குதலை சிறிலங்கா படையினர் தொடங்கிய பின்னர் ஒருவேளை உணவைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாகவே வன்னியில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் உள்ளனர். |
--
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com