தமிழ் பொப் பாடகி மாயா (MIA) சீ.என்.என். தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியை தணிக்கை செய்து ஒளிபரப்பியது |
இன அழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியமைக்காக மாயா என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ) வழங்கிய பேட்டியை சி.என்.என் தொலைக்காட்சி தணிக்கை செய்து ஒளிபரப்பியுள்ளது. |
கடந்த 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட லொஸ் ஏஞ்சல்ஸ் சஞ்சிகையில் பேட்டி கொடுத்த மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ), சி.என்.என் ற்காக தான் கொடுத்த பேட்டியானது தணிக்கை செய்யப்பட்டுள்ளதை பகிரங்கமாகக் கூறியுள்ளார். இவர் அண்மையில் சி.என்.என் தொலைக்காட்சிக்கு ஒரு மணித்தியால நேரம் நீடித்த ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். ஆனால் ஒரு நிமிடப் பேட்டியை மட்டுமே சி.என்.என் தொலைக்காட்சி ஒளிபரப்பியதாக எம்.ஐ.ஏ கூறியுள்ளார். தணிக்கைக்கான காரணம் அவர் பயன்படுத்திய 'இன அழிப்பு' என்ற பதம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பேட்டியின்போது, கிட்டத்தட்ட 20,000 தமிழர்கள் அரச படைகளால் கடைசிக்கட்ட போரின்போது கொல்லப்பட்டதை இவர் விபரித்திருந்தார். பயங்கரவாதிகள் என்று கூறி தமிழ் மக்களையே அரசு கொல்கிறது என்றும் இறுதியில் புலிகள் எல்லோரையும் அழித்து விட்டோம் என்று ஐக்கிய நாடுகள் மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகளைச் சேர்ந்த பொய்யர்களை அழைத்துக் காண்பித்தாலும் அவை எல்லாம் அரசாங்கத்தையே ஈடுசெய்யப்போகிறது, எங்கள் தமிழ் மக்களை அல்ல என்று அப்பேட்டியில் கூறியிருந்தார். அவை எல்லாம் சி.என்.என் ஆல் தணிக்கை செய்யப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். |
http://eeladhesam.com/
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com