வணங்காமண் கப்பல் வன்னியை நோக்கி பயணம் – இந்திய நடவடிக்கையால் இலங்கை அரசு அனுமதி
வணங்காமண் – யாருக்கும் அடங்காமண். தனது மனித நேய உதவிப் பொருட்களுடன் 48 நாட்கள் கடலில் தத்தளித்து, இன்னும் சில தினங்களில் வன்னியில் உள்ள தமிழ் உறவுகளை நோக்கி பயணிக்கப் போகிறது.
வணங்காமண், உலகத் தமிழர்களின், குறிப்பாய் ஐரோப்பிய தமிழர்களின் கொடை மூலம் 884 மெட்ரிக் டன் எடை கொண்ட உணவுப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை சுமந்து கொழும்பு நோக்கி சென்றது. கொழும்பில் இலங்கைக் கப்பற்படை நான்கு நாட்கள் சோதனையிட்டு, உணவு மற்றும் மருந்து பொருட்கள் மட்டுமே உள்ளதாய் அறிக்கையையும் வெளியிட்டது. பின்னர் அற்ப காரணங்களை கூறி பொருட்களை இறக்க தடை விதித்து கப்பலையும் வெளியேறுமாறு கட்டளையிட்டது. இதனால் அதிர்ச்சியுற்ற லண்டனில் உள்ள மெர்ஸி மெசின் அமைப்பு, குறைந்தபட்சம் அக்கப்பலில் உள்ள பொருட்களை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் பயன்படுத்தட்டும் என எண்ணினர். தமிழகத்தை மையமாக கொண்டு இயங்கும் மனிதம் – மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குநர் அக்னி சுப்ரமணியத்திடம் இப்பணியை ஏற்றுக் கொண்டு முறையாக விநியோகிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
வணங்காமண் சென்னை கடல் பகுதியை நோக்கி கடந்த 12ம் தேதி கொண்டுவரப்பட்டது. ஆனால் வந்தது பல சோதனைகள் என்ற பெயரில் இந்திய அதிகாரிகளும் காவல் துறையினரும் மேற்கொண்டனர். மனிதம்- மனித உரிமை அமைப்பின் அங்கத்தினர்களை விசாரணை என்ற பெயரில் 9 மணி நேரத்திற்கு மேல் மனித வதை செய்தனர். அச்சுறுத்தல்களால் பயப்படுத்தினர். சென்னையில் உள்ள கப்பலின் பொருட்களை இறக்குமதி செய்யும் முகைமையாளரான இம்பிரியல் ஷிப்பிங் முகவரையும் காவல்துறை விசாரித்தது.
இதற்கிடையே தமிழக முதல்வர் கருணாநிதி அதிரடியாய் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கு கடிதம் மூலம், கப்பலில் உள்ள பொருட்களை வன்னி மக்களுக்கு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என எழுதினார். கால அவசரம் கருதி, இக்கடிதத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதத்தை எடுத்து டெல்லி சென்று, இந்திய மத்திய அமைச்சர் இராசா உடன் கிருஷ்ணாவை சந்தித்து கையளித்தார். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சரும் சாதகமான பதில் கிடைக்க செய்வேன் என உறுதியாளித்திருந்தார்.
ஆனால் இங்கு தமிழர்கிடையே உள்ள சிலர் 24 மணி நேரமும் கப்பலில் உள்ள பொருட்கள் இங்கு இறக்குமதியோ அல்லது வன்னிக்கோ செல்ல விடாமல் தடுக்க பல முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். இதற்காக பல சிரத்தைகளை எடுத்துக் கொண்டு புரளிகளை பல வகைகளில் கிளப்பி விட்டனர். இதனால் அச்சமடைந்த இந்திய கப்பற்படை அதிகாரிகள் கப்பலை சோதனையிடமலேயே, கப்பல் சந்தேகத்திற்குரியது என சென்னை துறைமுக காப்பரேசனுக்கு அறிவித்தனர். இதற்கு பயந்த துறைமுக காப்பரேச அதிகாரிகள் கப்பலை சில கடல் மைல் கப்பலை நகர்த்தி வைக்க கட்டளை பிறப்பித்தனர்.
கப்பலில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேல் ஆனதால், கப்பலில் குடிநீர் பற்றக்குறை ஏற்பட்டது. அத்தோடு சிலருக்கு உடல் நலக்குறைவும் எற்பட்டது. இச்செய்திகளை ஊடகங்களுடன் மனிதம் அமைப்பினர் பகிந்து கொண்டு ஊடகங்களில் வெளி வந்ததால், உடனடியாய் சென்னை துறைமுக காப்பரேசன் குடிதண்ணீர் ஏற்பாடு செய்தது.
இந்நிலையில் நேற்று கிருஷ்ணா இன்று இலங்கையின் மேல் மட்ட அதிகாரிகளுடன் வணங்காமண் குறித்து கலந்து கொள்ளப்படும் என அறிவித்தார்.
இன்று காலை முதலே, இந்திய ஊடகங்களில் வணங்காமண் குறித்து செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையிலிருந்து மேல் மட்ட அதிகாரிகளாக அந்நாட்டின் அதிபர் ராசபக்சேவின் இரண்டு சகோதரர்களான கோதபைய ராசபக்சே மற்றும் பசில் ராசபக்சே ஆகியோர் தலைமையில் மதியம் டெல்லி வந்து சேர்ந்தனர். இந்தியாவின் சார்பாக இந்தியாவின் பாதுகாப்புச் செயலர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, திமுகவின் மத்திய அமைச்சர் ராசா தலைமையில் இன்று மதியம் மற்ற திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து வணங்காமண் திரும்பவும் வன்னி மக்களுக்கு சேர வேண்டும் என அழுத்தம் கொடுத்தார்.
இரு நாட்டு அதிகாரிகள் கூட்டத்தில் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். கூட்டத்தின் முதலிலேயே வணங்காமண் கப்பல் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிப் பொருட்களை கொண்டு சேர்ப்பது குறித்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதற்கு இலங்கை எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. உடனடியாய் சம்மதம் தெரிவித்தது.
இந்தியாவிலிருந்து இந்திய செஞ்சிழுவை சங்கம் மூலம் பொருட்களை எடுத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொருட்களை தற்போது சென்னையிலோ அல்லது தூத்துக்குடி துறைமுகத்திலோ இறக்கப்பட்டு, சில தினங்களில் வன்னியில் உள்ள தமிழ் உறவுகளுக்கு சென்று சேர உள்ளது.http://www.nerudal.com/nerudal.8740.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com