வேங்கைகள் விளையாடிய மண்ணில் இன்று பிணம் தின்னும் வெறி நாய் கூட்டம்!
உலக வல்லாதிக்க சக்திகள் எம்மை ஒருமித்து தாக்கி அழித்த போதும், எமது படை பலம் குன்றி நாட்திசையிலும் நாம் சுற்றி வளைக்கப்பட்ட போதும், எதிரியின் படை வளம் எல்லாம் திரட்டி எம் மீது குண்டு மாரி பொழிந்த போதும், தளரவில்லை தமிழர் படை. சிங்கள இராணுவத்திற்கு இறுதிவரை பெரும் இழப்புகளை ஏற்படுத்திகொண்டுதான் இருந்தது. ஆனால் தாய்கோழி தன் சிறகுக்குள் குஞ்சுகளை காப்பதுபோல் காத்துவந்த தமிழ் மக்களை தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் கொண்டு ஒட்டுமொத்தமாய் சிங்களவன் அழிக்க முற்பட்ட போதுதான் கலங்கி நின்றது புலிகள் சேனை. மரணத்தை கண்டே அஞ்சாத மாவீரர்கள் பிஞ்சு குழந்தைகள் தம் கண்முன்னே துடி துடித்து இறப்பது கண்டு தவித்தார்கள், மரணம் நிச்சயம் எனத்தெரிந்தும் தம் ஆயுதங்களை மௌனிகத் துணிந்தார்கள்.
குட்ட குட்ட குனிந்திருந்து, கூனியின் சந்ததிபோல் மாறியிருந்த தமிழினத்தை தலைநிமிர வைத்தது எம் புலிப்படை. யாருமில்லையா எமைகாக்க என ஒரு தேசிய இனம் பதறித் தவித்தபோது, நாங்கள் இருக்கிறோம் என வந்து, உயிரையே ஆயுதமாய் கொண்டு, எமக்கு அரணாய் நின்று, 35 வருடங்களாய் எமை காத்திட்டது எங்கள் புலிப்படை. அப்படை இன்று சந்தித்து இருக்கும் பாரிய இராணுவ பின்னடைவால் தமிழினமே கதிகலங்கி நிற்கிறது. ஈழக்கனவு பலிக்காது என கொக்கரிக்கிறான் சிங்களவன். மாங்குளத்துக்கும், முல்லைத்தீவுக்கும் சிங்களப் பெயரிடத் துடிக்கின்றான். வெள்ளவத்தை முதல் பதுளை வரை தமிழர் வாழும் பகுதியெங்கும் ஏலனச்சிரிப்போடு வெடிகொளுத்தி மகிழ்கிறான். தமிழினத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிட திட்டங்கள் போட்டுவிட்டான் சிங்களவன். உதவக் காத்திருக்கிறார்கள் எட்டப்பர்கள்!
இனி என்ன? என்ற கேள்வியோடும், சிரிப்பு மறந்த முகங்களோடும்,வரப்போகும் இருண்ட காலங்களை எண்ணி இலங்கை தீவெங்கும், உலகெங்கும் எம் தமிழ் உறவுகள். திறந்த வெளி சிறைகளில் உள்ள எம் சொந்தங்களை நினைக்கவே நெஞ்சு பதறுகிறது. இனி அவர்களின் எதிர்காலம் முட்கம்பி வேலிகளுக்கு உள்ளேதானா?? அங்குள்ள எம் குழந்தைகள் நிலை? எம் இளம் பெண்கள் நிலை? வந்தாரை வாழவைக்கும் தமிழினம் இன்று ஒரு வேளை உணவுக்கு கையேந்தும் நிலை.
என் வீரத் தமிழினமே!!!
எல்லா அழிவையும் எமக்கு தந்துவிட்டு சிங்களவன் மட்டும் நிம்மதியாய், உல்லாசமாய்!!! தீ தீண்டாமலே எம் உடலும் மனமும் பற்றி எரிகிறதே!!! எம் வலியை அவன் உணர வேண்டாமா? இழப்புகளை அவனும் அறிய வேண்டாமா? அவன் செய்திருக்கும் மாபாதகத்தின் பலனை அவனும் அனுபவிக்க வேண்டாமா? எம் காவல் தெய்வங்களை இழந்துவிட்டு பரிதவித்து நிற்கிறோமே, அந்த தவிப்பின் வலியை நிச்சயம் அவனுக்கு காட்ட வேண்டும், இவ்வளவு காலம் புலிகள் எவ்வளவு பொறுமை காத்தார்கள், எவ்வளவு தர்ம நியாயப்படி யுத்தம் செய்தார்கள், கொழும்பும் சிங்கள மக்களும் ஏன் பேரழிவுகளை சந்திக்கவில்லை என்று இனி அவர்கள் அனுபவித்து உணர வேண்டும். எல்லாவற்றுக்கும் மௌன சாட்சியாய் உள்ள சர்வதேசமும் அறிய வேண்டும்.
எம்மில் சிலருக்கு சிங்களவர்கள் பற்றி இன்னும் கூட கொஞ்சம் நல்லபிப்ராயம் இருக்கலாம், சிங்களவர்கள் எல்லோருமே கெட்டவர்கள் அல்ல என்ற நம்பிக்கையும் இருக்கலாம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அவ்வாறான எதிர்பார்ப்பு மிக மிக தவறானதே. நெல்வயலில் களைகளுக்கு நடுவே துளசியும் தூதுவளையும் இருந்தால் அவையும் களைகளே! அகற்றப்படவேண்டியவையே! சிங்களவர்கள் மத்தியில் வாழும் நேரடி அனுபவத்தில் சொல்கிறேன், சிங்கள இனவாத நச்சு விதை பரவலாக தூவப்பட்டு, இனவெறி அரசுகளால் போஷிக்கப்பட்டு, இன்று விருட்சமாய் சிங்கள தேசமெங்கும் வியாபித்து நிற்கிறது. எம் குழந்தைகள் பசியால் வாடி அழுவதை, காயம் பட்டு கதறுவதை, உயிரற்ற சடலங்களாய் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதை சிங்கள மக்களும் தான் தினம் தினம் பார்த்தார்கள். தமிழ் கர்ப்பிணி தாய்மார் சிதறுண்டு கிடப்பதை அவர்கள் அறிந்தே இருந்தார்கள். ஆனால் ஐயோ பாவம் என்று சொல்ல கூட அவர்களுக்கு மனம் இல்லை என்பதே தற்காலத்தின் கசப்பான யதார்த்தம். அழிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும், கருவிலேயே கருகிப்போன ஒவ்வொரு சிசுவும் நாளைய புலியே, ஆகவே இப்போதே அழித்துவிடுவதில் தவறில்லை என்பதே சிங்களவரின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. எம் அழிவில் சுகம் கண்டே பழகிவிட்டார்கள்.
மகாவம்ச மூடச்சித்தந்தத்தில் மூழ்கிக் கிடக்கும் சிங்கள தேசம் இதுநாள்வரை என்றுமே தீவிரவாதத்தை பார்த்ததில்லை, வாழ்வா சாவா என்ற உயிர்பயத்தை உணர்ந்ததில்லை. பார்க்க வேண்டிய, உணரவேண்டிய வேளை இப்போது வந்து விட்டது. விடுதலை இயக்கம் என்றால் என்ன? தீவிரவாத இயக்கம் என்றால் என்ன? விடுதலை போர் வீரர்கள் செயல்படும் விதம், தீவிரவாதிகள் செயல்படும் விதம்… இவற்றை சிங்களவனுக்கு தெரியப்படுத்தும் காலம் வந்து விட்டது. மக்களை மொத்தமாய் அழிக்கும் பாதகத்தை சிங்களவனிடமே நாம் கற்றுகொண்டாகி விட்டது. இனி நாம் சர்வதேசத்திடம் நற்பெயர் பெற வேண்டிய அவசியமில்லை, யார் என்ன சொல்வார்களோ , யார் என்ன செய்வார்களோ என்று எண்ணி தயங்கத் தேவை இல்லை. அறப்போர், போர் விதிமுறைகள், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் என இனி எதுவுமே இல்லை. ஏற்கனவே சிங்களவன் இந்நீதிகளை செல்லகாசாக்கி விட்டான் . எவருடைய அங்கிகாரத்திட்கும் நாம் காத்திருக்க தேவை இல்லை, சிங்கள தேசத்தின் மேல் அடி மேல் அடி விழுகையில், அங்கிகாரத்தோடு எம்மை தேடி உலகம் வரட்டும். என் மக்கள் கூட்டம் கூட்டமாய், குழந்தைகளும், பெண்களும், முதியோருமாய் செத்து விழுகையில் வாய்மூடி வேடிக்கை பார்த்த சர்வதேசம் சிங்களவன் அழுகுரல் கேட்டு ஓடிவருகிறதா பார்போம்.
உலக நாடுகளில் உள்ள இளம் தமிழ் தலைமுறையினரிடம் எமது தாயக விடுதலைக்கான அடுத்தகட்ட பணி ஒப்படைகப்பட்டுள்ளது. அதை அவர்கள் செவ்வனே செய்வார்கள். அடிமேல் அடி அடிக்க அம்மியும் நகர்வதுபோல், சர்வதேசமும் எமக்கு செவிசாய்க்கவும், எமக்காய் குரல் கொடுக்கவும் வைப்பார்கள் எம் இளையோர். ஆனால்!! அதேநேரம் ஈழத்தில் எம் ஆயுத படையை மீளக் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பும் எம்முன்னே உள்ளது. என்ன வழியிலாவது அது நடந்தே தீரவேண்டும். தலைமை பற்றிய விவாதங்களுக்கு களத்தில் உள்ள புலிகளே தக்க நேரத்தில் விளக்கமளிகட்டும். ஆனால் ஈனச்சிங்களவனுக்கு ( சிங்கள படைக்கு மட்டும் அல்ல) பேரழிவைக் கொடுக்க, முள்ளிவாய்கால், புதுமாத்தளன், இரட்டைவாய்கால் அனுபவங்களை அவனும் அறியவைக்க, சாம்பலில் இருந்து புறப்படும் பீனிக்ஸ் பறவை போல, எம் தமிழ் படையும் மீண்டும் உயிர்த்தெழ வேண்டும். அதற்கான எல்லாவித முயற்சிகளும் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும். எப்படி, எங்கே, எப்போது என்று எம் புலிகளே எமக்கு கூறட்டும். இப்பெரும்பணியில் அவர்களுக்கு எவ்வாறு தோள் கொடுப்பது என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போம். கொன்றோழிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழ் உயிருக்கும் சிங்களவன் பதில் சொல்லியே தீரவேண்டும். தமிழரின் முதுகெலும்பை முறித்துவிட்டோம் என இறுமாந்து நிற்கும் சிங்கள தேசத்திற்கு எவ்வாறான வழிகளில் அழிவுகளையும், இழப்புகளையும் இனி வரப்போகும் காலங்களில் ஏற்படுத்தலாம் என நாம் ஒவ்வுருவரும் தீவிரமாய் சிந்திக்க வேண்டும்.
அரசியல் ரீதியான தீர்வுகள், தமிழ் ஈழத்தின் பிறப்பு இவை எல்லாம் காலத்தின் கட்டாயம். அவை நடந்தே தீரும். ஆனால்! பாதுகாப்பு பகுதி, யுத்த சூனிய பிரதேசம் என்றெல்லாம் கூறி எம்மக்களை ஓரிடத்தில் கூட வைத்து, மொத்தமாய் கொன்று குவித்து, கடற்கரை மண்ணோடு மண்ணாய் தடயமின்றி புதைத்தும் விட்டானே சிங்களவன், அதற்கு பதில்???? உலகமே அவர்களை கைவிட்ட சோகத்தில், நெஞ்சு நிறைந்த வலியோடு அல்லவா எம் உறவுகள் கண்மூடி இருக்கும??? இறுதி நிமிடத்திலாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து, சர்வதேசம் கண்திறந்து இந்த அழிவு நின்றுவிடாதா என்று ஏங்கித்தவித்து இருக்குமே…. நினைக்க நினைக்க நெஞ்சு கனக்கிறது நமக்கு! எந்த உலக நாடும், எந்த சர்வதேச நீதிமன்றமும் அவர்களை எதுவும் செய்யபோவதில்லை. பதிக்கப்பட்ட நாமே தண்டனை கொடுப்பவர்களாயும் மாறவேண்டும். அதுவொன்றே தீர்வு ! நியாயமும் அதுவே !
நடந்ததை எண்ணி துயர் பகிர்ந்து, அழிவைத் தடுக்க ஒன்றும் செய்யமுடியாமல் போன சோகத்தோடு மீதமுள்ள வாழ்நாளை கடத்தப்போகிறோமா அல்லது எதிரிக்கு பாடம் புகட்டி, எம் தமிழீழ கனவை நனவாக்கி, வரலாறாகப் போகிறோமா என்பது எம் கைகளிலேயே உள்ளது.
புலிகள் சேனை மீண்டும் வீறுகொண்டு எழுகின்ற நாளுக்காய் உலகிலுள்ள ஒவ்வொரு உண்மை தமிழனும் உதிரம் கசியும் இதயத்துடன் காத்திருப்போம். விடிவு தொலைவில் இல்லை என உறுதியாய் நம்புவோம்.
"அக்கினி குஞ்சு பல கண்டோம், அவை வன்னியில் காட்டிடை சமராடக் கண்டோம், வெந்து தணிந்தது காடு, புலி வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!"
"விழுகையில் இடியென விழுந்தோம் இனி எழுகையில் மலையென எழுவோம்"
இராவணன்.
தமிழீழமே எம் தாகம்.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com