|
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக உரையாடுகின்ற தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கொழும்பிலும் மலையகத்திலும் தேநீர் கடை மற்றும் உணவு விடுதிகளில் ஒன்றுகூடுகின்ற தமிழ் இளைஞர்கள், விடுதலைப் புலிகள் வன்னிக் காட்டுக்கள் இருந்து வந்து மீண்டும் சிறிலங்கா படையினரை தாக்குவார்கள் என்றும் விடுதலைப் புலிகளின் சில தளபதிகள் இன்னமும் உயிருடன் இருக்கின்றனர் என்பவை உட்பட கேள்விப்பட்ட பலதரப்பட்ட விடயங்களை இளைஞர்கள் பலர் சந்திக்கும் இடங்களில் உரையாடிக்கொள்கின்றனர்.இவ்வாறு உரையாடுகின்றபோது அருகில் உள்ள ஏனைய தமிழ் பேசும் சமூகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கின்றனர் அல்லது பொது உடையில் நிற்கும் இரகசிய காவல்துறையினர் அவர்களை கைது செய்கின்றனர். கொழும்பில் மட்டும் இதுவரை 19 இளைஞர்களும் மலையகத்தில் 22 இளைஞர்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொதுமக்கள் கொல்லப்பட்ட முறை தொடர்பாக கேள்விப்படுகின்ற விடயங்களை வீதிகளில் நின்று ஆவேசப்பட்டும் உணர்ச்சிவசப்பட்டும் உரையாட வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. கொழும்பில் குறிப்பாக வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொட்டாஞ்சேனை மட்டக்குளிய ஆகிய இடங்களில் ஒன்றுகூடுகின்ற தமிழ் இளைஞர்கள் எதுவும் செய்யமுடியாத நிலையில் ஆவேசப்பட்டு தமக்குள் உரையாடிக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் தனியார் மற்றும் அரச அலுவலகங்களில் பணிபுரியும் தமிழர்களை சிங்களப் பணியாளர்கள் பகிடி வதைக்கு உட்படுத்தப்படுத்துகின்றனர். இது இவ்வாறிருக்க, எல்லாள மன்னன் துட்டகைமுனு மன்னனிடம் தோற்றமை தொடர்பான வரலாறுகளுடன் ஒப்பிட்டு சிங்கள பத்திரிகைகளில் தொடர்ச்சியாக செய்திகளும் விமர்சனங்களும் வெளிவருகின்றன. |
http://www.eelamartistes.com/index.php?option=com_content&view=article&id=4296:2009-05-28-16-42-23&catid=1:srilanka&Itemid=3
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com