காத்மாண்டு, ஆக.3- விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவும் இலங்கையும் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நேபாள முன்னாள் பிரதமரும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பிரசந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
காத்மாண்டுவில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
உலகளவில் நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கும் பணியில் இந்திய, இலங்கை அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது. இது சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு பாதகமாகவே முடியும்.
நேபாளத்துக்கு வெளியே உரிமைகளுக்காக நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை நாங்கள் உறுதியாக ஆதரிப்போம்.
நேபாள ராணுவத் தளபதி கதவாலை மீண்டும் அப்பதவியில் அமர்த்தியது தவறு. நேபாள அரசு தனது தவறை திருத்திக்கொள்ள நான்கு நாட்கள் அவகாசம் தருகிறோம். அதன்பிறகும் திருந்தாவிட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும்.
இவ்வாறு பிரசந்தா தனது பேட்டியில் கூறியுள்ளார்
ஆந்திராவில் நாட்டுக்காக உழைத்து உழைத்தே உயிரை விட்ட காங்கிரஸ் கட்சி தியாகி ? ஹெலிகாப்டரில் பறந்து போய் விபத்தில் இறந்தார் அல்லவா?
அந்த ராஜசேகர்ரெட்டி பிணத்துக்கு துணையாக, அதிர்ச்சியில் மொத்தம் 462 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறியதல்லவா, பொய்க்கார ஆந்திர அரசு.
அதெல்லாம் சுத்தப் பொய் என்று அந்த தில்லுமுல்லுகளை போட்டு உடைத்து, அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆய்வில் இறங்கிய "மெயில் டுடே" பத்திரிக்கை.
இயற்கையாக இறந்தவர்கள், நீண்ட நாள் நோய்வாய்ப் பட்டவர்களின்.....
மரண ஊர்வலச் செலவை காங்கிரஸ் கட்சியை ஏற்று நடத்தியிருக்கிறது. ராசசேகர ரெட்டியின் மரணத்தின் போது, ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு முறை கிரிக்கெடில் விக்கெட் விழுவதை போல அறிவித்ததாம், ஆந்திர காங்கிரஸ்..
பத்திரிக்கை தொலைக்காட்சி,வானொலிகளை அப்படி போடச் சொல்லி வற்புறுத்தப் பட்டதாம்!
இத்தகைய மோசடிக்கு தலைவன் ராசசேகர ரெட்டியின் மகன் ஜகன்மோகன(னி பிசாசு)ன் என்கிறது, அந்த பத்திரிக்கை. ஒரு மனநோயாளின் மரணம் கூட அந்த பட்டியில் சேர்க்கப் பட்டிருக்கிறதாம்!
எங்களை எரித்த தீயில்...
கொதிக்கிறது...!
உங்கள் வீட்டுச் சாப்பாடு!
கருத்து
தீக்கதிர் 17.09.09
எழுத்து வடிவம்
-மனிதன்.
ராகுல் வருகையால் செலவு ரூ. 1 கோடி
சென்னை: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் 3 நாள் தமிழகம் மற்றும் புதுச்சேரி சுற்றுப் பயணத்திற்கு ரூ. 1 கோடிக்கு மேல் செலவாகியுள்ளதாம்.
நாடு முழுவதும் இப்போது பரபரப்பாக பேசப்படுவது சோனியா காந்தி முதல் மத்திய அமைச்சர்கள் வரை அனைவரும் திடீரென சிக்கணத்திற்கு மாறிய கதைதான்.
ஆனால் வெறும் 3 நாள் பயணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு சமீபத்தில் ராகுல் காந்தி வந்து போனதற்கான செலவு ரூ. 1 கோடிக்கு மேல் என்ற தகவல் வயிற்றில் புளியைக் கரைப்பதாக உள்ளது.
ராகுல் காந்தியின் பயணத்திற்கு சரியாக எவ்வளவு செலவானது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் அவருக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளைப் பார்க்கும்போது ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் ஆகியிருக்கும் என்று கணக்கிட முடிகிறது.
ராகுல் காந்தி பயணம் செய்த ஹெலிகாப்டரின் ஒரு மணி நேர வாடகை ரூ. 1.5 லட்சமாம். மேலும் அவர் பயணம் செய்த பீச்கிராப்ட் ஹெலிகாப்டரின் வாடகை மணிக்கு ரூ. 1.1 லட்சம். இந்த ஹெலிகாப்டரைத்தான் அவர் அதிகம் பயன்படுத்திநார்.
ஹெலிகாப்டர் வாடகைக் கட்டணமே ரூ. 1 கோடியைத் தாண்டும் என்கின்றனர்.
டெல்லியைச் சேர்ந்த ஏர் சார்ட்டர் சர்வீஸ் பிரைவேட் லிமிட்டெட்டின் பீச்கிராப்ட் கிங் ஏர் 350 ரக ஹெலிகாப்டரைத்தான் ராகுல் காந்தி பயன்படுத்தினார். வாடகை தவிர 10 சதவீத சேவை வரி தனியாக வரும். மேலும், ஹெலிகாப்டர் ஊழியர்களுக்கான செலவுகளையும், சாப்பாடு உள்ளிட்டவற்றையம் காங்கிரஸ் கட்சியே கவனித்துக் கொண்டது.
இதுதவிர ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றில் ராகுல் காந்தியின் பாதுகாப்புக்காக பின் தொடர்ந்து வந்த எஸ்.பி.ஜி படையினரின் செலவுகள் தனியாக வருகிறது.
ராகுல் காந்தி பல வகை ஹெலிகாப்டர்களை தனது பயணத்தின்போது பயன்படுத்தினார்.
திருவனந்தபுரத்திலிருந்து செப்டம்பர் 8ம் தேதி அவர் பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டரில் நாகர்கோவில் வந்தடைந்தார். அதற்கு முன்னதாக பீச்கிராப்ட் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வந்திருந்தார்.
கோவையிலிருந்து டெல்லிக்குத் திரும்பிச் சென்றபோது பால்கன் 2000 விமானத்தை அவர் பயன்படுத்தினார். இந்த விமானம் மும்பையைச் சேர்ந்த தாஜ் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.
இந்த நிறுவனத்தின் இணையதளம் டெல்லி - கோவை ஒரு வழிப் பாதை பயணத்திற்கான கட்டணம் ரூ. 20,32,250 என்று கூறுகிறது.
தனது முதல் நாள் பயணத்தின்போது ராகுல் காந்தி திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் பறந்து வந்தார். பின்னர் அங்கிருந்து நெல்லை, விருதுநகர், மதுரை என பறந்தார்.
அடுத்த நாள் தஞ்சாவூருக்கு பீச்கிராப்ட் ஹெலிகாப்டரில் பறந்தார்.
இந்த பயணத்தின்போது, திருவனந்தபுரம் - மதுரை மற்றும் இரவு மதுரை தங்கல் ஆகியவற்றுக்கான செலவு ரூ. 15 லட்சமாக கணக்கிடப்பட்டுள்ளது.
2வது நாலில், தஞ்சைக்கு வந்த ராகுல் காந்தி அங்கிருந்து அதே ஹெலிகாப்டரில் புதுச்சேரி பறந்தார். பின்னர் இன்னொரு ஹெலிகாப்டரில் ஏறி விழுப்புரம், வேலூர் சென்றார். பின்னர் அரக்கோணம் கடற்படைத் தளத்திற்குச் சென்று இறங்கி, அங்கிருந்து பி.350 ரக ஹெலிகாப்டரில் ஏறி சென்னை திரும்பினார்.
சென்னையிலிருந்து ஓசூருக்கு அதே ஹெலிகாப்டரில் சென்றார் ராகுல்.
ஓசூரில் உள்ள தனேஜா ஏரோஸ்பேஸ் நிலையத்தில் ஹெலிகாப்டரை நிறுத்திக் கொள்வதற்கான வாடகைக் கட்டணமான ரூ. 7500த்தை காங்கிரஸ் கட்சி கட்டியதாம்.
பின்னர் அதே ஹெலிகாப்டரில் ஏரி சேலம் சென்ற ராகுல் அங்கிருந்து கோவை போய்ச் சேர்ந்தார்.
சேலம் விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் இறங்குவது உள்ளிட்டற்றுக்கான வாடகைக் கட்டணத்தை சென்னையிலேயே செலுத்தி விட்டார்களாம். காரணம், சேலத்தில் விமான நிலையம் செயல்பாட்டில் இல்லாததால்.
கோவை விமான நிலையத்தில் ஹெலிகாப்டரை இறக்கி, நிறுத்திக் கொள்வதற்கான வாடகைக் கட்டணமாக ரூ. 6800 செலுத்தியுள்ளனர். இந்தப் பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கட்டணமாக ரூ. 1500 செலுத்தப்பட்டுள்ளது.
இப்படியாக அத்தனை செலவுகளையும் பார்த்தால் ரூ. 1 கோடியைத் தாண்டி ஓடியுள்ளதாக தெரிய வருகிறது.
''ஒரு அரசியல் தலைவரின் முக்கியக் கடமை என்னவென்றால், சிக்கணமாக இருப்பதுதான். பணத்தைத் தேவையில்லாமல் செலவழிக்கக் கூடாது'' - இது ராகுல் காந்தி தமிழகம் வந்திருந்தபோது செய்தியாளர்களிடம் சொன்ன வார்த்தை.
http://thatstamil.oneindia.in/news/2009/09/17/tn-rahuls-visit-to-tamil-nadu-cost-over-rs1-crore.html
சிரிப்பு சிகிச்சை : தென்கச்சி சுவாமிநாதன்
சிரிக்க, சிரிக்க சொல்லி எங்களை அழ வைத்து விட்டீர்கள் ...!
நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.
''ஈழத் தமிழர்கள்!''
இதுதாண்டா தமிழ் பத்திரிகை
'எரியிற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம்' இதுதாண்டா தமிழ் பத்திரிகை – தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகம்
ஜூனியர் விகடன் பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ், இலங்கை அரசிடம் காசுவாங்கிக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகவும், அதற்காகத்தான் 'தமிழணர்வு' கொண்ட ஜூனியர் விகடன் அவரை வேலை நீக்கம் செய்ததாகவும் ஒரு செய்தி சமீபத்தில் பரபரப்பாக அலசப்பட்டது.
தமிழ்ப் பத்திரிகைகள், இலங்கை அரசிடம் காசு வாங்கிக் கொண்டு படுகொலை செய்கிற ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிடுகிறது என்பது ஊர் அறிந்த ரகசியம். இதில் ஜூனியர் விகடன் விகேஷ் மட்டுமல்ல, இன்னும் பல 'எட்டப்பன்கள்-பச்சைத் தமிழன் புதுக்கோட்டை மகாராஜா ரகுநாத தொண்டைமான்கள் -ஆற்காட்டு நவாப்புகள்' பத்திரிகை உலகில், பல பெரிய பொறுப்புக்களில் இருக்கிறார்கள்.. (நக்கீரன் மட்டும்தான் அம்சா சதியை அம்பலப்படுத்தியது )
ஆட்சியில் நடக்கும் ஊழல்களை துப்பறிந்து உலகத்துக்கு அம்பலப்படுத்துவதாக மார்தட்டுகிறது ஜூனியர் விகடன். ஆனால், தன் நிறுவனத்தில் இப்படி ஒரு ஊழல் நடப்பது உலகத்துக்கே தெரிந்த பிறகும், தனக்கு தெரியாமல் ஜூனியர் விகடன் துப்பு கெட்டு கிடந்தது எதனால்?
திடீர் என்று தன்னை நல்லவனாக காட்டிக் கொள்வதற்கு விகேஷை மட்டும் பலியிட்டது எதனால்?
இதே ஜீனியர் விகடனும், இன்னும் பல பத்திரிகைகளும் ஈழத்தமிழர்களின் கொலைகளை நியாப்படுத்தியும், போராளிகளை காட்டிக் கொடுத்த துரோகிகளின் பேட்டிகளை பிரசுரித்தபோதும், எத்தனை பேர் இந்த பத்திரிகைகளை கண்டித்தார்கள்?
மாறாக, 'நம்ம கிட்ட ஒரு பேட்டி எடுக்க மாட்டானா? நம்மள ஒரு கட்டுரை எழுத சொல்ல மாட்டானா?' என்று நாக்கை தொங்கபோட்டுக் கொண்டு அலைந்தார்கள் எழுத்தளார்களும், பிரபலங்களும். அல்லது அதை கண்டித்தால் நாம அந்தப் பத்திரிகைகளில் எழுத முடியாது. நம்ம தொடர நிறுத்திடுவான். நம்ம பேட்டிய போட மாட்டானுங்க… என்று பம்மிக் கொண்டு கிடந்தார்கள்.
ஒரு பேட்டிக்கும், இரண்டு பக்கம் கட்டுரை எழுதற வாய்ப்புக்காகவும் பத்திரிகைகளின் மோசடிகளை கண்டிக்காமல், காந்தியின் குரங்குகளைப்போல், கண்ணை, காதை, வாயை மூடிக்கொண்டு சோரம்போகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள், 'சமூக அக்கறை' கொண்ட பெரும்பாலான எழுத்தாளர்களும், பிரபலங்களும்.
தமிழனல்லாவர்கள் யாராவது தமிழின விரோதிகளாக இருந்தால், 'தமிழனாக இருந்தால் இதை செய்வானா?' என்று சவடால் பேசுகிறார்கள், சில தமிழனவாதிகள். இன்று பத்திரிகை, தொலைக்காட்சி என்று பல முதலாளிகளும், பொறுப்பில் உள்ளவர்களும் பச்சை தமிழர்கள்தான்.
இவர்கள் என்ன செய்து கிழித்தார்கள்?
தமிழன் என்பதற்காகவே தமிழர்களை கொன்று குவித்த, இலங்கை அரசின் படுகொலைகளை நியாப்படுத்தி, 'விடுதலைப் புலிகளுடன் நடந்த போரின் போது, இடையில் சிக்கி பலியான தமிழர்கள்' என்று படத்திற்கு கீழ் ஏதோ தமிழர்கள் தற்செயலாக கொல்லப்பட்டதுபோல் 'புட்நோட்' எழுதினார்கள்.
புலிகளை காட்டிக் கொடுத்தவர்களோடு உறவு வைத்துக் கொண்டு பணம் பார்த்தார்கள்.
இன்னொருபுரம் ஆதரவாக செய்தி வெளியிடுதைப்போல், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய செய்திகளை, கட்டுக்கதைகளாக எழுதி அவர் படங்களை பிரசுரித்து, புலிகளின் ஆதரவாளர்களையும், வாசகர்களையும் ஏமாற்றி பணம் சேர்த்தார்கள்.
ஈழத்தில் 3 லட்சம் தமிழர்களுக்கு மேல், மிக கொடூரமான முறையில் துன்புறுத்தப்படுகிறார்கள். பலர் நிர்வாணப்படுத்தப்பட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்படுகிறார்கள். ஆனால் இந்த தமிழ் பத்திரிகைகள் இந்த கொடுமைகளை அம்பலப்படுத்தி தமிழர்களிடம் அரசியல் எழுச்சியை உண்டாக்குவதற்கு பதில், கொஞ்சமும் வெட்கம் இல்லாமல், 'ஈழ வரலாறு-இலங்கை வரலாறு-பிரபாகரன் வரலாறு' என்று பழைய கதைகளை எழுதி, தமிழர்களை வெற்று பெருமை பேச வைத்து, பணம் பார்க்கிறார்கள்.
விபத்தில் சிக்கி உயிருக்கு போரடுகிறவர்களின் பாக்கெட்டில் கைவிட்டு திருடுகிறவனைப்போல், ஈழத் தமிழர்களின் துயரங்களை வைத்து பணம் சம்பாதிப்பவைகளாகத்தான் இருக்கிறது தமிழ் பத்திரிகைகள்.
தமிழக தமிழர்களின் ஈழ ஆதரவு நிலை, ஈழத்தமிழர்களுக்கு எந்தவகையிலும் உதவவில்லை. அதன் மூலம் பலகோடி ரூபாய் பெரும் லாபம் அடைந்தவர்கள் தமிழ் பத்திரிகைகள்தான்.
எரியிற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம் என்று செயல்படுபவைகள்தான் தமிழ் பத்திரிகைகள்.
தமிழ் பத்திரிகையாளர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவளார்களான சில உணர்வாளர்கள்கூட, தங்கள் உணர்வை இணையங்களில் ரகசியமாக புனைப் பெயர்களில்தான், பகிர்ந்து கொண்டார்கள். 'ஆபிசுக்கு தெரிஞ்ச பிரச்சினை.. யாருக்கிட்டயும் சொல்லாதீங்க…அதை எழுதுனது நான்தான்…' என்கிற பாணியில்…
ஆனால், தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் கொடுமையை உலகத்துக்கு அம்பலப்படுத்தியவர்கள், சிங்களப் பத்திரிகையாளர்கள்தான். தமிழர்களை கொன்று குவிக்கிற ராஜபக்சே அரசை கண்டித்து, தமிழர்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்தார்கள் சிங்களப் பத்திரிகையாளர்கள். சிங்களப் பத்திரிகையாளர்களின் ஜனநாயகத் தன்மைதான், இன்று தமிழர்களின் துயரங்களை உலகின் பார்வைக்கு கொண்டு வந்தது.
ஹிட்லருக்கு பிறகு, கடந்த் 50 ஆண்டுகளில் உலகில் இதுவரை, இதுபோன்ற ஒரு கொடூரத்தை எந்த நாடும் தன் சொந்த மக்களுக்கே செய்ததில்லை என்பதை நிரூபிப்பதைப்போல், தன் நாட்டில் வாழும் தமிழ் மக்களை மிக கொடுமையான முறையில் கொன்று ஒழிப்பவன் ராஜபக்சே. இவனின் கொடுமைகளை வெளிகொண்டு வந்ததற்காக, நாடு கடத்தப்பட்ட சிங்களப் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 30.
தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூரத்தை அம்பலப்படுத்தி செய்திகள் வெளியிட்டதால், சிங்கள அரசால் இதுவரை கொலை செய்யப்பட்ட சிங்கள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 20.
2006 ல் இலங்கை அரசை அம்பலப்படுத்தி எழுதியதற்காக, திஸ்ஸ நாயகம்என்கிற பத்திரிகையாளருக்கு 20 ஆண்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் துன்புறுத்தப்படுகிறார்.
இன்று இலங்கை ராணுவம் தமிழர்களை நிர்வாணப்படுத்தி, சுட்டுக்கொல்கிற கொடூரத்தை வெளி கொண்ர்ந்ததும் சிங்களப் பத்திரிகைளார்கள்தான்.
ஆனால், தமிழ் முதலாளிகளால், தமிழர்களால் நடத்தப்படுகிற இந்த தமிழ் பத்திரிகைகள்….. ச்சீ…
சவடாலாக பேசும் தமிழனவாதிகள் இதற்கு பதில் சொல்லவேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளின் யோக்கியதை குறித்தும், பார்ப்பன அறிவாளிகளின் அயோக்கியத்தனத்தை பற்றியும் 16-02-2009 அன்று கு. தமிழ்ச்செல்வன் என்பவரின் கேள்விக்கு எழுதிய பதிலை மீண்டும் பிரசுரிக்கிறேன்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்
உண்மையான தமிழன்தான் ஈழமக்களின் துயரங்களுக்காக போராடுவான். பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை அவர்களால் எப்படி தமிழர்களுக்கு உண்மையாக இருக்கமுடியும்?
-கு. தமிழ்ச்செல்வன்
'தமிழர்களுக்கு என்று ஒரு தனிநாடு வேண்டும், அல்லது விடுதலைப் புலிகளை ஆதரிப்பது தமிழர்களின் கடமை' என்று கோரி பொதுமக்கள் யாரும், தமிழக வீதியில் போராடவில்லை.
'ஒருபாவம் அறியாத குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கொன்று குவிக்கிறது சிங்கள அரசு. இந்திய அரசே அதற்குத் துணைபோகாதே' என்கிற மையமானப் பிரச்சினையை வைத்துத்துதான் போராடுகிறார்கள். இதற்கு தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, மனிதனாக இருந்தாலே போதும். மனிதாபிமானம் இருக்கிற யாரும் சிங்கள அரசின் கொடுமையை, இந்திய அரசின் துரோகத்தை எதிர்ப்பார்கள்.
இந்த மனிதாபிமான உணர்வோடுகூட பார்ப்பனர்கள் பெருமளவில் தங்கள் பங்களிப்பை செய்யவில்லை. அவர்கள் எதையும் பார்ப்பன, இந்துக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள், என்பதுதான் வருத்தற்குரியது.
மற்றபடி, தனக்கென்று சுயஅரசியலும், மனிதாபிமானமும் இல்லாதவன் பச்சைத் தமிழனாக இருந்தால்கூட அவனால் எந்த உபயோகமும் இல்லை. கெடுதல்தான்.
'சிங்கள அரசு தமிழர்களைக் கொன்று குவிக்கிறது' என்று ஆதாரத்தோடு எழுதிய, சிங்களப் பத்திரிகையாளர்களை சிங்கள அரசு கொன்றது. தமிழர்களுக்காக மனிதாபிமானம் கொண்ட அந்த 'சிங்களவர்கள்' தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள்.
ஆனால், இங்கு பச்சைத் தமிழர்களான தமிழ் பத்திரிகையாளர்கள் சிங்கள அரசிடம் பணம் வாங்கிக் கொண்டு, 'விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் போர்' என்ற பெயரில், தமிழர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி செய்திகள் வெளியிடுகிறார்கள்.
சிங்களப் பத்திரிகையாளர்களுக்கு இருக்கிற நேர்மை, துணிவு ஏன் பச்சைத் தமிழர்களான, தமிழ் பத்திரிகையாளர்களிடம் இல்லை?
காரணம், கொலை செய்யப்பட்ட அந்த சிங்களப் பத்திரிகையாளர்கள் – யார் பாதிக்கப்படுகிறார்களோ, யார் தரப்பில் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவாக, தங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக நடந்து கொண்டார்கள். அதனால்தான் தங்கள் இனம் தாண்டி, எது உண்மையோ அதன் பக்கம் நின்றார்கள். சிங்கள அரசின் கொலைவெறியை துணிந்து உலகத்திற்கு அம்பலப் படுத்தினார்கள்.
ஆனால், பல தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு கொள்கை என்று எதுவும் இல்லை. பணம்தான் முக்கியம். அதனால்தான் யாரெல்லாம் பணம் தருகிறானோ அவர்களுக்கெல்லாம் ஆதரவாகவும், பணம் தருகிறவர்களுக்கு யாரரெல்லாம் எதிரியோ, அவர்களுககு எதிராகவும் செய்திகள் வெளியிடுகிறார்கள். சில நேரங்களில் பணம் தரமறுத்தாலும், அதுவரை தந்துக் கொண்டிருந்தவனைப் பற்றியே எதையாவது அவதூறும் எழுதி விடுவார்கள். 50 ரூபா கொடுத்தால் தன்னையே திட்டி எழுதிகொள்கிற பத்திரிகையாளர்களும் இருக்கிறர்கள்.
நேர்மையான, திறமையான பத்திரிகையாளர்களை உடன் வேலை செய்கிற சக பத்தரிகையாளர்களுக்கும் பிடிப்பதில்லை. நிர்வாகத்திற்கும் பிடிப்பதில்லை. ஏதோ ஒரு வகையில் அவர்களை டம்மி ஆக்கி வைத்துக் கொள்வார்கள். அல்லது வேலையை விட்டு தூக்குவதற்கு நிர்வாகத்தோடு இணைந்து சக பத்திரிகையாளர்களும் சதி செய்வார்கள்.
நிர்வாகத்திற்கு எதிராக இல்லாத வகையில் அந்த எல்லைக்குள் ஊழல் செய்கிற, ( எங்கிட்ட சம்பள உயர்வு கேக்காத, ஆபிஸ் பொருளை திருடி விக்காத, எவன் கிட்டயாவது வாங்கி தின்னுக்க) இதுபோன்ற பத்திரிகையாளர்களைத்தான் பத்திரிகை முதலாளிகளும் விரும்புகிறார்கள் அவர்களுக்குத்தான் முக்கிய பொறுப்புகளையும் கொடுக்கிறார்கள். ஏனென்றால், இவர்களின் ஊழல் சில ஆயிரம், முதலாளிகளின் ஊழல் பலகோடி. ஜாடிக்கேத்த மூடி.
குறிப்பு:
* சிங்களப் பத்திரிகையாளர்களைப் போல் தமிழ் பத்திரிகையாளர்களை உயிரை தியாகம் பண்ணச் சொல்லவில்லை. வீதியில் இறங்கி ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாவிட்டாலும், ஆதரவாக செய்திகள் வெளியிட முடியாவிட்டாலும் கூட பரவயில்லை. பச்சைத் துரோகத்தையாது நிறுத்தக்கூடாதா?
* ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டுவரும் 'நக்கீரன்' பத்திரிகையை மிரட்டுகிற தொனியில் கடிதம் எழுதியிருக்கிற ராஜபக்சேவின் தூதுவர் அம்சாவிற்கு கண்டத்தை தெரிவிப்பது தமிழர்களின் கடமை.
* 'தமிழிலேயே தான்தான் பெரிய எழுத்தாளப் புடுங்கி, நீயெல்லாம் ஒன்னும்கிடையாது' என்று தெருநாயைப் போல் சண்டைப் போட்டுக்கொள்கிற 'ஊதாரி-உதவாக்கரை-தரமான' எழுத்தாளன்களில் பலபேர், ஈழமக்கள் படுகொலையைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் இருக்கிறார்கள். எருமாடு மேல மழை பெய்தது போல்.
16-02-2009 அன்று எழுதியது
தோழர்.மதிமாறன்
திருட்டு ரயில்!
சொகுசு வசதி பயணத்தை தவிர்த்து
குறைந்த கட்டண வசதி தரும்
பயணத்தை தேர்ந்தெடுக்கிறார்களாம்...
ப்ப்பூ...!
இதுவா சிக்கனம்?
இதென்ன அதிசயம்?
நீங்களாவது பரவாயில்லை...!
உங்களுக்கு ஒட்டுப் போட்ட
நாங்கள் பயணச்சீட்டே இல்லாமல்
பயணம் செய்கிறோம்...!
-மனிதன்.
தமிழகத் தமிழர்கள் போராடாவிட்டால் இலங்கையில் ஒன்றுமே நடக்கப் போவதில்லை! - செய்தியாளர்கள்
சென்னை: தமிழ்நாட்டுத் தமிழர்கள் முழு மனதோடு போராடாவிட்டால் இலங்கைத் தமிழர்களின் துயரத்துக்கு விடிவு கிடைக்காது என்று முன்னணி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈழத் தமிழர்களுக்கான கொடுமைகள், இலங்கையின் அடக்குமுறைகளுக்கு எதிராக செய்தி வெளியிட்ட செய்தியாளர் ஜேஎஸ் திசைநாயகத்துக்கு இலங்கை நீதிமன்றம் வழங்கிய 20 ஆண்டுகால கடும் சிறைத் தண்டனை தீர்ப்பினை கண்டித்து 'சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை' எனும் தலைப்பில் சென்னையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.
தியாகராய நகர் வெங்கட் நாராயண சாலையில் அமைந்துள்ள தெய்வநாயகம் பள்ளியில் 'Save Tamil' என்னும் தகவல் தொழில்நுட்ப இளைஞர்களால் இக்கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
திசநாயகத்துக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகால சிறைத் தண்டனையை உடனடியாக இரத்து செய்து அவருக்கு நிபந்தனை அற்ற விடுதலை வழங்கக் கோரியும், ஈழத் தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குள் அனைத்துலக ஊடகங்களை அனுமதிக்கக் கோரியும், சிங்கள அரசின் ஊடக ஒடுக்குமுறையைக் கண்டித்தும் இந்தியாவின் முன்னணி செய்தியாளர்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர். ஏதோ தங்கள் உணர்வைக் காட்டவேண்டுமே என்றில்லாமல், பத்திரிகையாளர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் மீதான அந்நாட்டு அரசின் இனவாத ஒடுக்குமுறையை ஆதாரங்களுடன் எடுத்து வைத்தனர்.
புதினம் இணையதளம் இதுகுறித்து விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள செய்தியாளர்கள் பேச்சு விவரம்…
இக்கூட்டத்தில் செய்தியாளர் ஏ.எஸ்.பன்னீர்ச்செல்வம் பேசியதாவது:
"சார்க் அமைப்பு ஒன்றை உருவாக்கும் ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்கைச் சந்தித்தார் இலங்கை அதிபர் ஜெயவர்த்தன. அப்போது அவரிடம் ஜியா, "உங்கள் நாட்டின் அரசியல் சாசனத்தை நான் படித்தேன். உலகில் வேறு எந்த நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் இல்லாத அளவுக்கு கட்டற்ற சுதந்திரம் உங்களின் அரசியல் சாசனத்தில் இருக்கிறது. ஆனால் எல்லோரும் என்னை சர்வாதிகாரி என்கிறார்கள். உங்களை ஜனநாயகவாதி என்கிறார்கள்" என்றாராம்.
இதற்கு என்னிடம் ஆதாரம்கூட இருக்கிறது. அன்று ஜியா சுட்டிக்காட்டிய அதிகாரக் குவியமே இன்றுவரை இலங்கையில் சிறுபான்மை மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையின் இன்றைய நீதித்துறையில் முற்போக்காளராக தோற்றமளிக்கும் சில்வா உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதுதான் இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு இணைப்பு செல்லாது என்று அறிவித்தார்.
நீதித்துறையும் சர்வாதிகார இலங்கை அரசும் இணைந்து பயணித்து வந்ததன் விளைவே திசநாயகம் கைது. நாம் எல்லாம் திசநாயகத்துக்காய் குரல் எழுப்புவது ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் இது குறித்து அக்கறையற்றவர்களாக இருந்தால் ஆகப் போவது ஒன்றும் இல்லை. ஆனாலும் நாம் தொடர்ந்து ஜனநாயகத்துக்காய் பேச வேண்டும், என்றார் அவர்.
மீண்டும் ஒரு ஈழப்போர்!
டெல்லியிலிருந்து இருந்து வந்திருந்த 'ஹெட்லைன்ஸ் டுடே' தொலைக்காட்சியின் இணை ஆசிரியர் ராஜேஷ் சுந்தரம் பேசியதாவது:
"கேள்விகளற்ற நிலைதான் அவர்களை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்கிற நிலைக்குக் கொண்டு செல்கிறது. புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஆயுதப் போராட்டம் என்பது அமெரிக்க இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின்னர் இலங்கையின் பொருளாதார பலத்தை பலவீனப்படுத்துவதாகவே இருந்தது.
ஆனால் இதே போராட்டங்களை நாம் காந்தீய வழிகளில் முன்னெடுக்க முடியும். நாம் 'ஏர் லங்கா' அலுவலத்தில் போய் அங்கு வருகிற வாடிக்கையாளர்களிடம் நீங்கள் கொடுக்கிற பணத்தில் பெரும்பங்கு போருக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆகவே 'ஏர் லங்கா'வில் பயணம் செய்யாமல் வேறு வானூர்தி சேவைகளை நாடுங்கள் என்று இலங்கையில் வர்த்தக நலன்களை பாதிக்கிற அளவுக்கு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
இன்றைய இலங்கை அரசு இனி ஈழ மக்கள் எழ மாட்டார்கள் என நினைக்கிறது. நான் அங்கே எஞ்சியுள்ள போராளிகளோடும் தமிழ் மக்களோடும் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் தங்கள் மக்கள் கொல்லப்படுவதையும் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதையும் இப்போதைக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. இலங்கை அரசு செய்து கொண்டிருக்கும் ஜனநாயகப் படுகொலைகள் மீண்டும் ஒரு ஈழப் போரை அந்த மண்ணில் உருவாக்கும் என்பது அந்த மக்களிடம் பேசிய மன நிலையிலிருந்து தெரிகிறது.
இந்திய அரசைப் பொறுத்தவரையில் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டில் எழுந்த நெருக்கடிகளுக்காகச் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக நடந்து கொண்டது.
நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறோம் என்று தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லி விட்டு இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கியதோடு போரை முட்டுக்கொடுத்தும் நடத்தியதும் இந்தியாதான்.
இந்த அதிருப்தி எல்லோருக்குமே இருக்கிறது குறிப்பாக தமிழர்களான உங்களுக்கும் இருக்கிறது. திசநாயகம் கைதுக்காக மட்டுமல்ல ஒரு பெரிய போராட்டத்தையே இன்று நாம் ஜனநாயகத்துக்காய் நடத்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது என்றார் அவர்.
தமிழக மக்கள் போராடவில்லையெனில்….
'தி வீக்' இதழின் செய்தியாளர் கவிதா முரளிதரன்:
"இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் ஏராளமான போராட்டங்கள் நடந்தன. ஆனால் அவற்றுக்கு மதிப்பளிக்கும் மனநிலையில் ஆளும் தரப்பில்லை.
ஆனால் போருக்குப் பின்னர் மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகிறார்கள், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்கிற சூழலில் ஏதோ சாதித்து முடித்து விட்ட மாதிரி இங்கே அமைதியாக இருக்கிறார்கள்.
என்னதான் நாம் பேசினாலும் எழுதினாலும் தமிழ்நாட்டு மக்கள் போராடவில்லை என்றால் இலங்கையில் எதுவுமே நடக்கப் போவதில்லை. மக்கள் ஈழத் தமிழர்களின் வாழ்வுக்காக போராட முன்வரவேண்டும்", என்றார் அவர்.
மூத்த பத்தி எழுத்தாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான தேவசகாயம் பேசியதாவது:
தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டது. உலக நாடுகள் அதன் மீது பொருளாதார தடைகளைக் கொண்டுவந்த போதும் தென் ஆபிரிக்கா அசைந்து கொடுக்கவில்லை.
ஆனால், அனைத்துலக விளையாட்டுக்கள் எதையும் நிறவெறிக் கொள்கை கடைப்பிடிக்கிற வரை தென் ஆபிரிக்காவில் நடத்தப் போவதில்லை என்று உலக நாடுகள் முடிவு எடுத்த பின்புதான் அது தன் நிறவெறிக் கொள்கையை மறு பரீசிலனை செய்தது. அதுபோல இலங்கையில் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறா வண்ணம் நாம் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு நாம் காட்டும் எதிர்ப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும், என்றார்.
இந்திய - தமிழக உளவுத் துறை சதி…
'டெக்கான் குரோனிக்கல்' ஆங்கில நாளேட்டின் செய்தியாளர் பீர் முகம்மது:
"அமெரிக்காவின் முக்கியமான மருத்துவரும் மனித உரிமை ஆர்வலருமான டொக்டர் எலின் சாண்டஸ் இலங்கையில் உள்ள முகாம்களை ஜேர்மனியின் நாஜி முகாம்களோடு ஒப்பிட்டார்.
அவர் வரும் 15 ஆம் நாள் தொடங்கி 20 ஆம் நாள் வரை இனப் படுகொலைக்கு எதிராக தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.
இதற்காக அவர் நியூயார்க்கில் இருக்கிற இந்திய தூதரகத்தில் விசாவும் பெற்றிருந்தார். ஆனால் தனது பிரச்சார பயணம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையிடம் பத்து நாட்களுக்கு முன்னர் அனுமதி கோரியிருந்தார்.
ஆனால், அவருக்கு பத்து நாட்களாக அதற்கான காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை என்பதோடு இந்த பத்து நாட்களில் நியூயார்க்கில் இருக்கிற இந்திய தூதரகம் அவருக்கு வழங்கியிருந்த விசாவை இரத்தும் செய்து விட்டது.
இதிலிருந்து தமிழ்நாட்டு உளவு காவல்துறையும் இந்திய புலனாய்வுத்துறையும் எப்படி எல்லாம் ஈழ மக்களுக்காக இங்கே பேசுவதை திட்டமிட்டு தடுக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இங்கே இருக்கிற மாநில முதல்வரோ அங்கே சுமூக நிலை நிலவுகிறது என்கிறார். இது எங்களை வேதனைப்படுத்துகிறது," என்றார்.
9ஆனால் இவர் பணியாற்றும் டெக்கான் குரோனிக்கல் தொடர்ந்து புலிகள் எதிர்ப்பு எனும் பெயரில் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் இயங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவான செய்திகளே இதில் இடம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.)
ஆங்கில ஊடகங்களுக்கு அக்கறையில்லை…
வாரம் இருமுறை வெளிவரும் 'நக்கீரன்' புலனாய்வு ஏட்டின் உதவி ஆசிரியர் லெனின்:
"போர் நடந்தபோது தமிழ் ஊடகவியலாளர்களும் பல்வேறு அரசியல் சக்திகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடினார்கள். ஆனால் ஆங்கில ஊடகங்கள் இதில் அக்கறை இல்லாமல் நடந்து கொண்டார்கள்.
உண்மையில் அவர்கள் நினைத்திருந்தல் இலங்கை விவகாரத்தில் ஏதாவது ஒரு நெருக்கடியை ஏற்படுத்த முடியும். அதிகார மையங்களுக்கு நெருக்கமான ஆங்கில ஊடகங்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் ஆங்கில ஊடகவிலாளர்கள் இன்னும் அதிக கவனம் எடுத்து இலங்கை விவாகரத்தில் செயற்பட வேண்டும், என்றார்.
'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏட்டின் வெங்கட்ரமணா:
"திசநாயகம் பயங்கரவாதியல்ல அவர் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து பேசினார். இன்றைய இலங்கை ஆட்சியாளர்கள் இவர்களுக்குத் தேவைப்படும்போது அவரைப் பயன்படுத்தி விட்டு இப்போது அவரை சிறையில் அடைத்திருக்கிறார்கள்" என்றார் அவர்.
செய்தியாளர் டி.அருள் எழிலன்:
"திசநாயகம் செய்த தவறு என்ன? சுதந்திரமாக சிந்திக்கவும், சிந்திக்கிற ஒன்றை எழுதுகிற உரிமையும் ஏன் திசநாயகத்திற்கு மறுக்கப்பட்டது என்றால், அவர் போர் நிறுத்தக் காலத்தில் தனது கண்காணிப்பின் கீழ் வெளியான 'நோர்த் ஈஸ்டர்ன்' இதழில் இரண்டு கட்டுரைகள் எழுதினார்.
இந்த இரண்டு கட்டுரைகளுக்காகவும்தான் அவருக்கு 20 ஆண்டுகால சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
இரண்டு கட்டுரைகளின் மூலம் திசநாயகம் இலங்கையின் புனிதத்திற்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகவும், அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டதாகவும் அவரை கைவிலங்கிட்டு சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
ஆனால், திசநாயகம் 80-களில் தொழிலாளர்களுக்காக போராடி தன் வேலையை இழந்தவர். காணாமல் போனவர்களுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தவர்.
வடக்கில் காணாமல் போனவர்கள் குறித்து அவர் ஆவணப்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார். போர் மனித உறவுகளைச் சிதைப்பது குறித்த ஆழ்ந்த கவலை அவருக்கு இருந்தது.
இன ரீதியான பிரச்சினைகளை வன்முறை வழியில் இல்லாமல் அரசியல் ரீதியாக தீர்ப்பது குறித்த ஆய்வை செய்தவர் அவர். தான் கைது செய்யப்படும் வரை போருக்கு எதிராகவும் சமாதானம் தொடர வேண்டும் என்றும் உறுதியாக இருந்தார்.
ஆனால், போரை தீவிரப்படுத்துவதில் குறியாக இருந்தவர்களுக்கு மிகவும் இடையூறு செய்து கொண்டிருந்த திசநாயகத்தை கையில் விலங்கிட்டு முடக்கினார்கள்.
திசநாயகம் கைது செய்யப்பட்ட பின்புதான் லசந்த கொலை செய்யப்பட்டார். போரின் பங்காளிகள் குறித்து புலனாய்வு செய்து போர், ஆயுதக் கொள்வனவு, அதில் சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தெல்லாம் அதிர்ச்சியான பல உண்மைகளை லசந்த வெளிக்கொண்டு வர இருந்தப்போது கோழைத்தனமான முறையில் அவரைக் கொன்றார்கள். அவரது துணைவியார் சோனாலி சமரசிங்க குழந்தைகளோடு இலங்கையில் இருந்தே தப்பிச் சென்றார்.
லசந்த கொலை, திசநாயகம் கைது என, தமிழ் மக்கள் மீது காட்டப்பட்ட போர் வெறி, நியாயமான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த சிங்கள ஊடகவியளார்கள் மீதும காட்டப்பட ஒரு நியாயவாதி கூட அங்கு வாழ முடியாது என்று ஊடகவியளார்கள் தப்பித்து ஓடினார்கள் இன்றுவரை உலகெங்கிலும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்," என்றார் அவர்.
'இலங்கை தூதரகத்தின் கைக்கூலிகள்…'
"இலங்கையில் உண்மைக்காக பேசிய ஊடகவியளார்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் உண்மை பேசக்கூடாது என்பதற்காக இலங்கை தூதுவர் அம்சாவிடம் சன்மானம் பெறும் ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள்.
போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் அவர்கள் கொடுத்த அன்பளிப்புக்களுக்காக இனத்தையே காட்டிக் கொடுத்து துரோகம் செய்து விட்டார்கள். பல நேரங்களில் இதை நினைக்கும்போது அருவருப்பாக இருக்கிறது.
தமிழ் ஊடகவியலாளர்கள்தான் இப்படி என்றால்… ஆங்கில ஊடகங்களோ தமிழ்நாட்டு தமிழ் மக்கள் மீது ஒரு போரையே தொடுத்தது.
இலங்கை அங்கே தமிழர்களைக் கொன்றார்கள். இங்குள்ள ஆங்கில ஊடகவியளார்களோ போரின் முடிவை பெரும் வெற்றியாக கொண்டாடினார்கள்.
ஆனாலும் இலங்கை அரசின் அரசின் பாசிசப் போக்குக்கு எதிராகப் பேசவும் இதுபோன்ற ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள் என்கிற மன நிம்மதி இருக்கிறது" என்றார் அவர்.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com