தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, September 18, 2009

♥ பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்கள்-நக்கீரன் செய்தி ♥              ம.தனபாலசிங்கம்ஆஸ்திரேலியா சிட்னி நகரில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர். ஓய்வு பெற்ற கணக்கர், ஆழமான தமிழ் அறிஞரும்கூட. அவரது இளைய சகோதரர் தமிழீழ மண் மீட்புக்காய் தன் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்.

                ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக உலக நாடுகள் பலவற்றிலும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் சிலரை இந்தி யாவின் வெளிநாடுகளுக்கான உளவு அமைப்பு "ரா' (தஆர) கடந்த 17 ஆண்டுகளில் விசாரித்துள்ளது. அவ்வாறு விசாரிக்கப்பட்டவர்களில் தனபாலசிங்கமும் ஒருவர். 2001-ம் ஆண்டு சிட்னி நகரில் "ரா' அமைப்பின் இரு அதிகாரிகள் அவரை நேர் கண்டனர். அவர்களுக்கு தனபாலசிங்கம் கூறிய பதிலின் ஒரு பகுதி இது:

""எனது உடல் மிகவும் பலவீனமுற்றிருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராய் இருப்பதற்கு அடிப்படைத் தேவையான மனத் துணிவும், அர்ப்பண உணர்வும் எனக்கு இல்லை. தமிழர் களாகிய எமது ஆதர்சனமான அந்த மாபெரும் இயக் கத்தில் அங்கமாக இருக்க வேண்டுமென்றால் "உயிரினும் மேலாய் என் சுதந்திரத்தை மதிக்கிறேன்; உயிரே போயினும் என் விடுதலையை விட்டுக்கொடுக்கவோ, விலை பேசவோமாட்டேன்' என்று குரல் எழுப்பி முழங்கு கிற அச்சமின்மையும், உறுதியும் தேவை. அது எனக்கு இல்லை. நான் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினன் அல்லேன், பிரபாகரன் அவர்களை நான் சந்தித்தது மில்லை. ஆனால் உலகெங்கும் பல்வேறு நிலப்பரப்பு களிலும் தூரக்கடல்கள் கடந்தும் வாழ்கிற லட்சோப லட்சம் தமிழர்களைப்போல் எனக்கும் கனவொன்று உண்டு. மரணிப்பதற்கு முன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை நேரில் காணவேண்டுமென்ற கனவு அது. பணிவுடன் அந்த மாமனிதன் முன் தெண்டனிட்டுத் தலை வணங்கி, ""நன்றியப்பா... எமக்கான மாண்பினை மீட்டுத் தந்தமைக்கு நன்றி. உன்னால் தமிழர்களாகிய நாங்கள் இன்று தலைநிமிர்ந்து நடக்கிறோம். நன்றி... நன்றி!'' எனச் சொல்ல வேண்டும். இது மட்டுமே ஆஸ்திரேலியாவில் வாழும் பலவீனமான இத்தமிழனுக்கு இருக்கிற இறுதிக் கனவு. தனபாலசிங்கம்போல் உலகில் இன்று கோடி தமிழர் உண்டு.

தனக்குப் பாடல்கள், பொதுவில் இசை பிடிக்கும். ஆனால் பாட வராது என நான் நேர்கண்டபோது வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறி யிருந்தார். "உங்களுக்கு மிகவும் பிடித்த பழைய தமிழ்ப்பாடல் ஒன்றைச் சொல்லுங்களேன்' என்றபோது முகம் மலர்ந்தவராய்,

"அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா...

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா'

என்று உச்சரித்துப் பதிவாக்கினார். அப்பாடலில் தொடரும் வரிகளை அவர் சொல்லவில்லை. ஆனால் தனபாலசிங்கம் போன்ற பலநூறு தமிழர்களின் உணர்வுப் பதிவுகளை இந்நாட்களில் இணையதளங்களில் கண்ணுறும்போது வரலாற்றுப் புகழ்பெற்ற அப்பாடலின் தொடரும் மறக்க முடியாத வரிகளை இங்கு எழுதவேண்டும்போல் தோன்றுகிறது.

"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?

மாபெரும் வீரர், மானம் காப்போர் சரித்திரம்தனிலே நிற்கின்றார்.'

நடேசன் சத்தியேந்திரா லண்டனில் வாழ்ந்து வரும் புகழ்பெற்ற சட்ட நிபுணர். வாழ்வில் சந்திக்க வேண்டுமென விரும்பிய, விரும்பும் மனிதர்களில் இவரும் ஒருவர். அனைத்துலக அரசியல் சட்ட நுணுக் கங்களில் அசாத்தியமான நுண்ணறிவும் திறனும் கொண்டவர். 2002 அமைதிப் பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகள் இவரை ஈடு படுத்தியிருக்க வேண்டுமென நண்பர்கள் பலரிடம் நான் கூறிய துண்டு. நல்லவர், நடுநிலையாளர் என பலரும் சொல்லிக் கேட்டி ருக்கிறேன். அவரும் இணைய இதழ் ஒன்றில் எழுதியிருந்தார். ஒரு காலத்தில் பிரபாகரன் அவர்களுக்கு இணையானவராக மதிக்கப்பட்ட சதாசிவம் கிருஷ்ணகுமார் என்ற கிட்டு அவர்களை 1990-களில் நடேசன் சத்யேந்திரா சந்தித்திருக்கிறார். 1993-ல் கிட்டு வீரமரணம் அடைந்தபோது அவரைப்பற்றி சத்யேந்திரா பின்வருமாறு எழுதினார் :

""தமிழ் ஈழத்தின் உண்மையான அறிவுஜீவிகளில் ஒருவர் கிட்டு. புத்தகங்கள் படித்தும், பிறர் பேசக்கேட்டும் பெற்றுக்கொண்டவற்றை தம் சொந்த சிந்தனைகள்போல் சித்தரிக்கும் போலி அறிவு மரபுக் காரனல்ல கிட்டு.

எப்போது, எவ்வாறு செய்ய வேண்டுமென்ற தெளிவும், நேர்மை யுமின்றி "அப்படிச் செய்திருக்க வேண்டும்', "இப்படிச் செய்யவேண்டும்' என்றெல்லாம் வாய்ப்பந்தல் கட்டும் அரைகுறை அறிவுஜீவியுமல்ல கிட்டு. விடுதலைப்பயணம் ஏதோ விரைவு ரயில் வண்டிபோல என்று நினைத்து துரித அதிரடி பலன்களை எதிர்பார்க்கும் முதிரா கனியுமல்ல கிட்டு. கிட்டு நிறைய படித்தார். தனது வாழ்வின் அனுபவங்களினூடே கற்றுக்கொண் டவைகளை படித்தவற்றோடு இணைத்தார். அந்த இணைவில் பிறந்த திட்டங்களை முன்னிறுத்தி, தான் சந்தித்த தமிழர்களை செயலுக்குத் தூண்டினார். அவரைப் பொறுத்தவரை சித்தாந்தம் என்பது யதார்த்த செயற்பாடாயிருந்தது.

கிட்டுவைப் பற்றி 1993-ம் ஆண்டு, தான் எழுதிய இவ்வரிகளை மீண்டும் மேற்கோள் காட்டி இப்போது எழுதி யுள்ள சத்தியேந்திரா அவர்கள், ""கிட்டு போன்ற ஒரு மாவீரன் -அறிவாளி - மாமனிதன் தன்னிலும் மேலாக ஒருவரை தலைவன் என ஏற்றுக் கொள்வ தென்றால் அப்படியான தகுதிகள் அத்தலைவனுக்கு இருந்திருக்க வேண்டும்.'' தொடர்ந்து எழுதும் சத்தியேந் திரா, பிரபாகரன் தன்னிடம் அவ்வப்போது கூறும் சில விஷயங் களை கிட்டு கூறுவதுண்டு. அவற்றில் சில பிரபாகரனின் ஆளுமையை வெளிப்படுத்துவதாய் இருந்தன.

"பேச்சாளர்கள் தலைவர் களாவதில்லை, ஆனால் தலை வர்கள் சில வேளைகளில் பேச் சாளர்களாகவும் இருக்க வாய்ப் புண்டு!'

"தூங்குகிறவனை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது!'

"புதுடில்லிக்காரர்கள் வியாபாரிகள், எமது விடுதலை

வேட்கைக்கு அவர்கள் விலைபேசுகிறார்கள்!'

ஒருமுறை விடுதலைப்புலிகளின் லண்டன் அலுவலகப் பணியாளர் ஒருவர், தான் பலமுறை அணுகியும்கூட தமிழ்மக்கள் சரியான பதில் தர வில்லை, ஒத்துழைக்கவில்லை என சலித்துக் கொண்டபோது கிட்டு அப்பணியாளருக்குக் கூறினாராம், ""அதனாலென்ன... சரியான பதில் கிட்டும் வரை, ஒத்துழைப்பு வரும் வரை மீண்டும் மீண்டும் தொடர்ந்து சென்று பாரும், பேசும். உமக்குத் தெரியுமா... என்னை இயக்கத்தில் இணைய வைக்கவேண்டி தலைவர் என் வீட்டுக்கு ஆறுமுறையோ, ஏழு முறையோ வந்தார்''.

விடாமுயற்சி பிரபாகரனது ஆளுமையின் மிகப்பெரிய பரிமளிப்புகளில் ஒன்றாக இருந்தது. அதுவே ""விழ விழ எழுவோம்'' என்ற புலிகளின் தாரக மந்திரமாகவும் மாறியது. "வெற்றி -பெற்றுக் கொள்வதற்கு, தோல்வி -கற்றுக்கொள்வதற்கு' என்று பிரபாகரன் அடிக்கடி தளபதிகளிடமும் போராளிகளிடமும் கூறு வதுண்டாம். மக்கள் படும் துன்பங்கள்தான் அவரை கவலைக் குள்ளாக்குமேயன்றி தானும் இயக்கமும் சந்திக்கிற பின் னடைவுகள் புதிய உத்வேகத்தையே அவருக்குத் தந்திருக் கின்றன என்பதை நான் பேசிய எல்லா தளபதியர்களும் குறிப்பிட்டனர். இந்த அவரது குணாம்சம் இயக்கத்தின் இலட்சியம் நோக்கிய விடாப்பிடித்தனமான உறுதியை ஒவ்வொரு போராளியினதும் தாரக மந்திரமாக ஆக்கி யிருந்த தென்பதே உண்மை.

அதேவேளை தமது தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளும் பணிவும் அவரிடம் இருந்திருக்கிறது. "எங்கு பிழை விட்டோம் என்று யோசியுங்கள்' என்பதும் அவர் அடிக்கடி குறிப்பிடும் ஒன்று எனச் சொல்கிறார்கள். "சர்வாதிகாரி' என இந்திய -உலக ஊடகங்கள் அவர் பற்றி உருவாக்கிய பிம்பத்திற்கு அப்பால், யதார்த்தத்தில் கேள்வி கேட்கும் கலாச்சாரத்தை அவர் மிகவும் ஊக்கு வித்தார் என்றே பலரும் எனக்குக் கூறினர்.

நான் அவரை நேர் கண்டபோது "அச்சம் என்பது மடமையடா' பாட்டு தனக்குப் பிடிக்குமெனக் கூறியதை முன்னர் எழுதியிருந்தேன். அவர் குறிப்பிட்ட மற்றொரு பாட்டு 1960-ம் ஆண்டு ஜெய்சங்கர் நடித்து வெளிவந்த "உயிர் மேல் ஆசை' படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதி கே.பி.சுந்தராம்பாள் பாடிய

"கேளு பாப்பா... கேள்விகள் ஆயிரம் கேளு பாப்பா...

கேட்டால் கிடைப்பது பொது அறிவு,

இந்த கேள்வியில் வளர்வது பொது அறிவு'

என்ற பாடல். அந்தப் பாடலில் தொடர்ந்து வருகின்ற

"கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான்

அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான்

பயந்தவன் தனக்கே பகைவனானான்

என்றும் துணிந்தவன் உலகிற்கு ஒளியானான்!'

என்ற வரிகளையும் சிலிர்ப்புடன் சொல்லிக் காட்டினார்.

மே-04 இளைய போராளித் தலைவர்களிடம்...

""கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான்,

அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான்!''

என்ற வரிகளையும் சொல்லி ஊக்குதல் தந்திருக்கிறார் பிரபாகரன். நிறைவாக அன்றைய நாளில் அவர் சொன்னது தமிழ் வரலாறு மறக்க முடியாத, மறக்கவும் கூடாத ஒன்று. உலகத்தமிழ் மக்கள் அனைவருக்குமான சவால். அது என்ன?

(நினைவுகள் சுழலும்)

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16475
                          வேலுப்பிள்ளைபிரபாகரன் அவர்கள், மே-4-ம் தேதியன்று இளைய தளபதியருக்கு நிறை வாகக் கூறியவை இரண்டு விஷயங்கள். முதலாவது, ஈழ விடுதலைப் போராட்டத்தின் சமகால பின்னடைவு களுக்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித் தது. இரண்டாவது, ஈழ வரலாற்றின் கடைசி மன்னன் பண்டாரவன்னியனின் வாள் பற்றியது. தமிழ் எழுச்சிக்கான முழக்கமாகவும், அறைகூவலாயும் பண்டாரவன்னியனின் வாளை வரலாற்றுக் குறி யீடாக நிறுத்திய பிரபாகரன் அவர்களின் உணர்ச்சி மிகு உரை நிறைவை உங்களுக்குச் சொல்லுமுன், மறக்க முடியாத முக்கியமான கடிதம் ஒன்றை இங்கு நான் திறந்து படிக்க வேண்டும். பிரபாகரன் போராட் டப் பின்னடைவுக்கான காரணங்களாய் முள்ளிவாய்க் கால் களத்தில் நின்றுகொண்டு பட்டியல் இட்டவற்றிற் கும் அக்கடிதத்திற்கும் நிறைய தொடர்பிருப்பதால், இங்கு அதனை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

பலநூறு முறை, ஏன் பல்லாயிரம் முறை வேண்டுமா, வேண்டாமா என்று யோசித்துக் குழம்பிய பின்னரே அக்கடிதத்தின் சில பகுதிகளை இங்கு பதிவு செய்யும் முடிவினை எடுத்தேன். அக்கடிதம் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு நான் எழுதிய பதினேழு பக்கக் கடிதம். 2002-ல் அவரை நேர்காணச் சென்றபோது எழுதிக் கையிலெடுத்துக் கொண்டு போனேன். நேரில் பார்க்க எப்படியிருப் பாரோ, கடிதத்தின் விஷயங்களை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாதே என்றெல்லாம் அப்போதே தயங்கினேன். ஆனால் அவரது எளிமையும் இயல்பான அணுகுமுறையும் தந்த துணிவில் கடிதம் தாங்கியிருந்த கருத்துக்களை படபடவென்று சொல்லி முடித்துக் கொண்டு கடிதத்தையும் கொடுத்தேன். இதுபற்றி முன்பொருமுறை "மறக்க முடியுமா?' கட்டுரையொன்றில் நான் குறிப்பிட்டிருந்ததை தொடர்ந்து இத்தொடரை படித்து வரும் வாசகர்கள் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

சராசரி அரசியல்வாதிகளைப்போல் பொதுமேடை களில் வாய்ப்பந்தல், தோரணங்கள் கட்டும் பழக்கம்தான் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இல்லையே தவிர, இயல்பான நட்புச் சூழமைவில் அவர் கலகலப்பான வாயாடி என்பதை அவரை நேர்கண்ட ஒரு நாளிலேயே தெரிந்துகொள்ளக் கூடியதாயிருந்தது. எனது எல்லா கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் பதில் தந்த அவர், நான் எழுதியிருந்த அக்கடிதத்தின் கருத்துக்களுக்கு மட்டும் பதில் தரவில்லை. ஆனால் அவற்றை நான் கூறியபோது கூர்மையாகக் கேட்டார், அதனிலும் கூர்மையாக என்னைப் பார்த்தார். அவர் முகத்தில் துயரம் கவிந்ததை அக்கணத்தில் என்னால் உணர முடிந்தது.எனது கெட்ட-நல்ல பழக்கங்களில் ஒன்று மனதில் பட்டதை கரடு முரடாகவே சொல்லிவிடுவது. பிரபாகரன் அவர்களிடம் பேசியதோடு நான் நிறுத்தவில்லை. தமிழ்ச் செல்வன் அவர்களிடமும் அக்கடிதக் கருத்துக்களை வாதிட்டேன். அவரோ வாய் திறக்கவில்லை. தனது தனி முத்திரையான புன்னகை ஆயுதத்தால் என்னை கட்டுக் குள் வைத்திருந்தார். அதற்குப் பிறகு தளபதி பால்ராஜ் அவர்களிடமும் கொட்டித் தீர்த்தேன். உள்ளத்தில் கள்ளமில்லா குழந்தையாயிருந்த பால்ராஜ் மட்டும் ""ஓம் ஃபாதர்... இதத்தான் நாங்களும் சொல்லுறம் ஃபாதர்... தலைவரும் உப்பிடித்தான் நினைக்கிறார். பேச்சுவார்த்தைக்குப் போயிட்டம். எப்படி இந்த முற்றுகைக்குள்ளிருந்து வெளியே வரப் போறமென்டுதான் சரியான குழப்பமா கிடக்கு'' என்றார்.

1995 முதல் 2002 வரை தமிழ்ஈழ மக்களுக்கான பணிகளில் முழுநேரப் பணியாளன் போல் ஈடுபட்டிருந்த நான், 2002-ல் இந்தியா வந்து அமைதியாக வேறு களங்களைத் தெரிவு செய்தது ஏன் என்ற கேள்விக்கான பதிலும் அந்தப் பதினேழு பக்கக் கடிதத்தில் இருந்தது.

வெற்றியின் நாளில் சற்றே விட்டு விலகி நிற்பதும், தோல்வியின் இடரின் பொழுதில் எதிர்கொண்டு அருகில் களம் நிற்பதும் நல் அறம் என ஆழமாய் நம்புகிறேன். எல்லா தருணங்களிலும் அதன்படி வாழ இயலாதுபோயினும் எப்போதும் அதனை உள்ளத்தில் இருத்த வேண்டுமென்பதில் இடைவிடா நினைவுபடுத்தல் செய்வதுண்டு.

துன்புறும் ஈழமக்களுக்கான பணியில் நான் தீவிரமாக உள்நுழைந்தது மிகவும் நெருக்கடியான காலத்தில். ராஜ பக்சே கொடுங்கோலர்கள் தமிழர் இன அழித்தலை ""மனிதாபி மான மீட்பு நடவடிக்கை'' என்று எப்படி மோசடி வனைந்தார் களோ அப்படி பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ""சமா தானத்திற்கான யுத்தம்'' (War For Peace) என சந்திரிகா குமாரதுங்கே அம்மையார் மோசடி வனைந்த காலம். முப்படைகளும் பெரும் எடுப்பில் தமிழ் ஈழத்தின் இதயமான யாழ்ப்பாணத்தை அடிமை கொள்ள முற்றுகையிட்டு முன் நகர, பத்து லட்சம் தமிழர்கள் உள்நாட்டு அகதிகளாகி வலிகாமம், தென்மராட்சி, வன்னிக்காடுகள் என தஞ்ச மடைந்த காலம். இன்று வவுனியா திறந்தவெளிச் சிறையில் தமிழர்கள் படும் அத்தனை இடர்களையும் சுதந்திரக் காற்றை சுவாசித்துக்கொண்டே அம்மக்கள் பட்ட காலம். அம்மக்க ளின் மீது இடைவிடா யுத்தம். உணவு, மருந்துப் பொருட்கள் தடை என சந்திரிகா அம்மையார் "சமாதானத் திற்கான' இன அழித்தல் நடத்திய காலம்.

அக்காலத்தில் இந்தியா-தமிழகம் தவிர்த்து உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார் களோ அங்கெல்லாம் சென்றோம். துன்புறும் ஈழத் தமிழ் மானுடத்தோடு உலகத் தமிழ் உணர்வு களை, உறவுகளை இணைத்தோம். பசி, பட்டினி யிலிருந்து அம்மக்களைக் காக்க அணிதிரண்டு உழைத்தோம். யுத்தம் அனாதைகளாக்கிய பல்லாயிரம் குழந்தைகளுக்கு புதிய குடும்பங்களில் தொட்டில் கட்டினோம். யுத்தம் சிதறடித்த பல்லாயிரம் உறவுகளை மீண்டும் இணைத்தோம்.

1996-ல் ஏழுபேர் நாங்கள் பேசுவதைக் கேட்கவந்த நகரில் 1997-ல் ஈராயிரம் பேர் வந் தார்கள். அதற்குப்பின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஒட்டிசுட்டான், கரிப்பட்ட முறிப்பு, பளை, பரந் தன், ஆனையிறவு என 2000-ம் ஆண்டில் போர்க் கள வெற்றிகளின் உச்சத்தை விடுதலைப்புலிகள் தொட, ஈராயிரம் தமிழர் கூடிய நகர்களில் இருபதாயிரம் பேர் கூடினர். ஐயங்கள், அச்சங்கள் தவிர்த்து தமிழீழ விடுதலைக்காய் கடமையாற்ற பலர் முன்வந்த காலம் அது. யாழ்குடாவின் வாயிலில் புலிகளின் படையணிகள் நின்றன. "யாழ்ப்பாணத்தை பிடித்து விட்டால் தனி நாடு அங்கீகாரம் தருகிறோம்' என உலக நாடுகள் சில ரகசிய வாக்குறுதி கொடுத்திருந்ததாய் அப்போது செய்திகள் உலவிக்கொண்டி ருந்தன. புலிகளது போர்க்கள வெற்றிகளின் உச்ச தருணத்தில்தான், தமிழீழக் கனவு வெகு அருகில் வந்து விட்டதென்ற பொழுதில்தான் பணிக் களத்தை விட்டு நான் அகன்று விலகி வந்தேன். காரணம்... என்னவென்பதை அக்கடிதம் தாங்கியிருந்தது.

பதினேழு பக்க கடிதத்தை ஒருவரிச் செய்தியாகச் சொல்ல வேண்டுமென்றால் இதுதான் : ""சமாதானப் பேச்சுவார்த்தை களுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் ஒத்துக் கொண்டது மிகப்பெரும் வரலாற்றுத் தவறு. இதற்காக விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமல்ல தமிழர் வரலாறும் நிரந்தரமாய் வருத்தப்படும்'' இதோ கடிதத்தின் சில பகுதிகள்:

""தமிழ்ஈழ தேசியத் தலைவர் என ஈழத்தமிழ் மக்கள் போற்றிக் கொண்டாடும் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு, வணக்கம்.

பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன், பிழையெனின் பொறுத்தருள்க.

யுத்தக்களத்திலும் காலத்திலும் விடுதலைப்புலிகள் இயக்கம் எடுக்கிற முடிவுகளை தமிழ் மக்கள் கேள்விக்குள்ளாக்குவதில்லை. ஆனால், அமைதியின் காலத்தில் அவ்வாறு இருத்தலாகாதென்றும், கட்டற்ற விவாதங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டு மென்றும் கருதுகிறேன். அவ்வகையில் இலங்கை அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க தற்போதைய சூழலில் தாங்கள் எடுத்துள்ள முடிவு தவறானதென்றும், இதற்காக தமிழீழ வரலாறு மிகவும் வருத்தப்படவேண்டி வருமென்றும் மிகுந்த பணிவுடன் சொல்லத் தலைப் படுகிறேன். எனது இந்நிலைப்பாட்டுக்கான கார ணங்களையும் இங்கு சமர்ப்பிக்கத் தலைப்படுகிறேன்.

1. ""ஓயாத அலைகள்'' தொடர் வெற்றிகள் மூலம் ஆனையிறவை வீழ்த்தி, யாழ்குடா நாட்டின் வாயிலில் நின்றீர்கள். தொடர்ந்து "வாழ்வா - சாவா' என்று இலங்கை ராணுவம் முன்னெடுத்த மிகப்பெரிய "அக்னிஹேலா-தீப்பிழம்பு'' நடவடிக்கையை சின்னா பின்னமாக்கிச் சிதைத்தீர்கள். அப்பாவித் தமிழர்களின் அனுதின வாழ்வை அச்சுறுத்திய விமானப்படையை உலகமே வியக்கும் வண்ணம் கட்டுநாயகே தாக்குதல் மூலம் சிதைத்தீர்கள். நாளொன்றுக்கு சராசரி 100 ராணுவத்தினர்... இலங்கை ராணுவத்தினர் தப்பியோடிக் கொண்டிருந்தனர். தொடர் யுத்தத்தின் சுமை யை தாங்க முடியாது, இலங்கை பொருளா தாரம் பாதாளம் நோக்கிச் சென்று கொண்டி ருந்தது. அரசியல்ரீதியாக தென்னிலங் கை கொந்தளிக்கத் தொடங்கியிருந் தது. ராணுவரீதியாக இலங்கையின் முப்படைகளும் தமது தன்னம்பிக்கை யை இழந்திருந்தன. மூர்க்கத்துடன் முன்னோக்கிச் சென்று, யாழ்குடாவையும் வென்று ஒட்டுமொத்த இலங்கை அரசமைப்பை மண்டியிடச் செய்வதற்கு ஏற்ற தருணம் இதைவிட வேறொன்றும் நிச்சயம் உங்க ளுக்குக் கிடைக்கும் என நாம் நினைக்கவில்லை. இதுவரை தமிழர்களின் உதவிக்கு வராத, நாளை தமி ழர்களுக்கான நீதிக்கு உத்தரவாதமாய் நிற்கப் போகாத உலகநாடுகளை நம்பி தாங்கள் சண்டை நிறுத் தத்திற்கும், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் ஒத் துக்கொண்டிருப்பது உண்மையில் செத்துக்கொண்டி ருக்கும் இலங்கையின் ராணுவ, பொருளாதார, அர சியல் அமைப்புகள் மீண்டும் மூச்சுபெற்று உயிர்பெறக் கொடுக்கும் வாய்ப்பாகும். இதற்காக நிச்சயம் தமிழர்களாகிய நாம் வருத்தப்பட வேண்டியது வரும்.

2. நானொன்றும் நிறைய படித்தவனல்ல -அனுபவ முதிர்ச்சி கொண்டவனுமல்ல. ஆயினும் அரசியல் விஞ்ஞான மாணவன் என்ற வகையில் என் சிற்றறிவு அறிந்து ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டங்கள் தம் இறுதி இலக்கை அடை கின்றவரை போராடிக்கொண்டிருந்தால் மட்டுமே உயிர் பிழைத்திருக்க முடியும். சண்டை நிறுத்தம் தந்திரோபாயமான சிறு இடைவெளியாக இருக்கலா மேயன்றி, இப்போது நிகழ்வதுபோல் நீண்ட இடைவெளியாக இருத்தலாகாதென்றே கருதுகிறேன்.

3. முப்பது ஆண்டுகாலம் உங்களோடு சண்டை யிட்டு சாதிக்க முடியாத ராணுவ நலன்களையும் அனுகூலங்களையும் இச்சமாதான காலத்தில் இலங்கை ராணுவம் சாதிக்க முயலும். இந்தியா-மற்றும் உலகநாடுகளின் துணை இருப்பதால் அவற்றை நிச்சயம் இலங்கை சாதித்துவிடும்.

எவ்வாறு?

(நினைவுகள் சுழலும்)

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16754


பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்கள்


http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2009/05/prabhakaran.jpg

டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி சார்பில் `இலங்கை தமிழரின் உரிமையை காப்போம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

தமிழ் தேசிய கட்சி பொதுச் செயலாளர் பரந்தாமன் பேசுகையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை கூறி பேசினார்.


இலங்கை தமிழர்கள் படும் அவல நிலைகளை நேரில் கண்டு அதை படமாக எடுத்து வந்து உள்ள அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டாக்டர் எலைன்சான்டர், இந்தியா வருவதற்கு தடை விதித்ததால், அவர் இங்கு கருத்தரங்கில் பேச இருந்ததை வீடியோ படமாக எடுத்து அனுப்பி இருந்தார். அதை பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16739


இலங்கையில் தயாராகும் ஜவுளியை வாங்கமாட்டோம்: ஐரோப்பிய நாடுகள்

http://img141.imageshack.us/img141/200/viduthaipoorniyayamzt3.jpg

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனிதஉரிமை மீறல்கள் நடைபெற்று வருவதால், இலங்கையில் தயாராகும் ஜவுளியை வாங்க மாட்டோம் என்று ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன.
 
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனிதஉரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு உலக நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.
 
இருந்தும், இலங்கை அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது.
 
இந்நிலையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், இதற்கு பதில் அளிக்கும்படியும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் இலங்கை அரசு இதுகுறித்து பதில் அளிக்கவில்லை.
 
ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையில் தயராகும் ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்கள் பெருமளவில் ஏற்றுமதியாகிறது. அவற்றை ஏற்றுமதி செய்ய இலங்கை அரசுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டு வந்தது.
 
இதற்கிடையே, மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அறிக்கைக்கு இன்னும் பதில் தெரிவிக்கவில்லை. இந்த நிலை தொடர்ந்தால இன்னும் 3 வருடத்துக்கு இலங்கைக்கு ஏற்றுமதி வரிச்சலுகை நீடிக்கப்படமாட்டாது.
 
மேலும் ஜவுளி உள்ளிட்ட பொருட்களையும் வாங்க மாட்டோம் என ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.
 
ஆனால் இந்த விவகாரத்தை கையாள ராஜபக்சே 4 அமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்து இருந்தார். அந்த குழு அறிக்கை அளித்திருந்தது.
 
அதில் தங்களுக்கு திருப்தி இல்லை. தெளிவான, உறுதியான பதில் வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் ஒன்றிய அதிகாரிகள் கூறி விட்டனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16626

பிரபாகரனையே தெரியாதவர்களுக்கு ஏன் தண்டனை?


இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று இலங்கையில் நடைபெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பான மக்கள் கண்காணிப்பு குழுவின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, ''விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பணியாற்றிய தயா மாஸ்டர் மற்றும் ஜார்ஜ் மாஸ்டர் ஆகியோர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,  அவ்வியக்கத்துடன் தொடர்பில்லாதவர்கள் இன்று வன்னி அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு பிரபாகரனையே தெரியாது.

பிரபாகரனுடன் நெருங்கிப் பழகிய இருவரும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென்றால் இந்த மக்கள் மட்டும் எவ்வாறு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்?

விடுதலைப் புலிகளுடனான போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விவரங்களை அரசு வெளியிட வேண்டும்.

மக்களை அகதி முகாம்களில் தடுத்து வைத்திருப்பதற்கு அரசியலமைப்பில் எந்த சட்டமும் இல்லை. வன்னி முகாம்களிலிருந்து தமிழ்ச்செல்வனின் செயலாளர் உட்பட 10 ஆயிரம் பேர் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தப்பியோடியவர்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லையென்றால் அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும் எவ்வாறு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்''என்று தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16709

http://www.vinavu.com/wp-content/uploads/2009/09/6.JPG


வன்னி முகாம்களில் இருந்து தினம் 40 பேர் காணாமல் போகிறார்கள்

இலங்கை சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர, நேற்று  நடைபெற்ற மக்கள் கண்காணிப்புக் குழுவின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

அப்போது அவர்,  ''வன்னி முகாம்களில் இருந்து நாள்தோறும் 30 முதல் 40 பேர் காணாமல் போகிறார்கள்.  இதுவரை 10ஆயிரம் பேர் இப்படி காணாமல் போயிருக்கிறார்கள்''என்று தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16725

http://www.vinavu.com/wp-content/uploads/2009/09/4.JPG


பிரபாகரன் கட்டளைப்படி செயல்படுகிறார் சீமான்:போலீஸ் கமிசனரிடம் காங்கிரஸ் புகார்

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனுடன் இயக்குநர் சீமான் இருக்கும் படம் சமீபத்தில்  வெளியானது. மேலும் சீமான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுக்கப்போவதாக கூறி இருந்தார்.

இதற்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் இளையான்குடி சபீர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று மனு கொடுத்தார்.
 
அம்மனுவில் இயக்குனர் சீமான், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் கட்டளைப்படி செயல்படுவதாக ஒரு பேட்டியில் கூறி உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16767

http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/seeman_vazhthukal.jpg


பெரியாருடன் பிரபாகரனை இணைத்திருக்கும் படத்துக்கு காங். எதிர்ப்பு

http://2.bp.blogspot.com/_x9XA8wx8M0k/RzW9eQUBDiI/AAAAAAAAAlA/v-iiu_AKlnM/s400/Bradlaugh+with+Periyar.JPG

ஈரோட்டில் பெரியாருடன் பிரபாகரனை இணைத்து தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியினர் பேனர் வைத்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அந்த பேனரை அகற்றினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கலைந்து சென்றனர்.http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16695


தமிழக ‌மீனவ‌ர்க‌ள் 21 பேரை சிறைப் பிடிப்பு

க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 21 பேரை இல‌ங்கை கட‌ற்படையின‌ர் து‌ப்பா‌க்‌கியா‌ல் ‌மிர‌ட்டி ‌சிறை‌ப் ‌பிடி‌த்து செ‌ன்றன‌ர். இதனா‌ல் ராமே‌ஸ்வர‌‌த்‌தி‌‌ல் பெரு‌ம் பத‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌‌ட்டு‌ள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க நேற்று இரவு கடலு‌க்கு சென்றனர். அப்போது அவ‌ர்க‌ள் க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அ‌ங்கு வ‌‌ந்தன‌ர்.

அவ‌ர்களை பா‌ர்‌த்து பய‌ந்த மீனவர்க‌ள் படகை கரை‌க்கு ‌திரு‌ப்‌பின‌ர். அப்போது அவ‌ர்களை சு‌ற்‌றி வளை‌த்த இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் து‌ப்பா‌க்‌கியா‌‌ல் சு‌ட்டன‌ர்.

‌பி‌ன்ன‌ர் ‌மீ‌ன்‌பிடி சாதன‌‌ங்களை தூ‌க்‌கி எ‌‌றி‌ந்து ‌வி‌ட்டு 21 ‌மீனவ‌ர்களை ‌சிறை‌ப் ‌பிடி‌த்து செ‌ன்றன‌ர்.

அ‌ங்‌கிரு‌ந்து த‌ப்‌பி வ‌ந்த மீனவர்கள் நட‌ந்தவ‌ற்றை ஊ‌ர் ‌பிரமுக‌ர்‌க‌ளி‌ட‌ம் கூ‌றின‌ர். இதனா‌ல் ராமேஸ்வரத்தில் பத‌ற்றமான சூழல் நிலவுகிறது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16690பிரபாகரன் படம் வைத்த பெ.தி.க நிர்வாகி கைது

http://2.bp.blogspot.com/_JIXtPYzDuAY/SNGSW1jrEfI/AAAAAAAAAJM/n2zTdmk6_eE/s320/pl0224023.jpg

பெரியாருடன் பிரபாகரன் இருப்பது போன்ற படம் வைத்த பெரியார் திராவிட கழக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

பெரியார் பிறந்த நாள் விழா ஈரோட்டில் கொண்டாடப்பட்டது. பெரியார் சிலை அமைந்துள்ள பன்னீர்ச்செல்வம் பூங்காவில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழ் தேச பொதுவுடைமை இயக்கம் சார்பில் பெரியாருடன் விடுதலைப்புலிகள் தலை வர் பிரபாகரன் இருப்பது போன்ற பெரிய கட்அவுட் வைக்கப்பட்டு சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், எம்எல்ஏ விடியல் சேகர் உட்பட காங்கிரசார் மறியல் செய்தனர். இதையடுத்து கட் அவுட் அகற்றப்பட்டது. இதுதொடர்பாக பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் குமரகுருபரன்(42) மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16793


http://nimban.files.wordpress.com/2009/06/britain-tamils.jpgpra.jpg

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!