ராஜீவ்காந்தி படுகொலை, அதைத்தொடர்ந்து அதில் சம்பந்தப் பட்ட சிவராசன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் டேங்கர் லாரியில் பதுங்கி பெங்களூருக்கு தப்பிச் சென்று தற்கொலை செய்து கொண்டது வரையிலான சம்பவங்களை உள்ளடக்கி 'குப்பி-சயனைட்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து பரபரப்பேற்படுத்தியவர் டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ்! இப்போது '"காவலர் குடியிருப்பு' என்ற பெயரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயம் கர்நாடக மக்களையும், அங்குள்ள தமிழர்களையும் அதிரவைத்த ஒரு சம்பவத்தை படமாக்கி வருகிறார்! இந்த "போலீஸ் குவார்ட்டர்ஸ்' படத்திற்கு கர்நாடக போலீஸார் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு! தொடர்ந்து உண் மைச் சம்பவங்களையே படமாக்கிவரும் ரமேஷ், 'விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க் கையை "பிரபாகரன்' என்ற பெயரில் படமாக்குகிறார்.
பெங்களூரிலுள்ள அவரை தொடர்புகொண்டு பேசினோம்!''நான் பிரபாகரனைப் பற்றி படம் எடுக்க கடந்த ஆண்டே திட்டமிட்டுவிட்டேன்! "சயனைட்' படம் பார்த்துவிட்டு புலிகளின் அரசியல் பிரிவு ஆலோசகராக இருந்த தமிழ்ச்செல்வன் என்னிடம் போனில் பேசினார்! நடுநிலையோடு படமெடுத்திருக்கிறீர்கள் என பாராட்டியதோடு பிரபாகரனும் படத்தைப் பார்த்து வியந்ததாகச் சொன்னார்! கடந்த வருட இறுதியில் புலிகளின் கலாச்சாரப் பிரிவு தலைவர் சேரன் என்னிடம் பேசினார்! அவர் கேட்ட முதல் கேள்வியே... "நீங்கள் தமிழரா?' என்பதுதான்! நான் கர்நாடகத்தை சேர்ந்தவன்! ராஜீவ் மரணமும், சிவராசன் மரணமும் எனக்கு வெவ்வேறு விதமான வலிகளை ஏற்படுத்தியது! அதனால்தான் கிட்டத்தட்ட 13 வருடங்களாக கதைக்கான மெட்டீரியல்களை தேடிப்பிடித்து படம் பண்ணினேன்' என்று சேரனிடம் சொன்னேன்! அப்போது உங்கள் நோக்கம் என்ன என்று கேட்டார் சேரன்! பிரபாகரன் சார் வாழ்க்கையை படமாக எடுக்க விரும்புகிறேன்' என்று சொன் னேன்! விரைவில் தொடர்பு கொள்வதாகச் சொன்னார்! அதன்பின் சில வாரங்கள் கழித்து என்னிடம் பேசிய சேரன், "இலங்கைக்கு எப்போது வருகிறீர்கள்? தலைவருடன் (பிரபாகரன்) 15 நாட்கள் நீங்கள் தங்கியிருக்கலாம்! இலங்கை வந்ததும் நீங்கள் எங்கள் பகுதிக்கு பத்திரமாக வர ஏற்பாடு செய்யப்படும்' என்றார்!
நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன்! அதன் பிறகு தகவல் இல்லை! "சயனைட்' படம் பார்த்து அதன் மூலம் நண்பர்களான வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் சிலர் என்னை தொடர்பு கொண்டு 'தற்சமயம் இலங்கையில் சூழல் சரியில்லை' என தெரிவித்தனர்! கொஞ்ச நாளிலேயே யுத்தம் தொடங்கிவிட்டது!'' என வருத்தம் தொனிக்கச் சொன்னார் ரமேஷ்!
கன்னடரான நீங்கள் பிரபாகரனின் வாழ்க்கையை படமாக்குவது ஏன்?
"பல லட்சம் மக்களை கவர்ந்த கம்பீரமான தலைவர்! அவர் வாழ்க்கை 30 வருட போராட்ட வாழ்க்கை! அவர் வாழ்க்கையில் அன்டோல்டு ஸ்டோரி எனப்படும் வெளியே தெரியாத பல கதைகள் உண்டு! அது என்னை பாதித்திருக்கிறது, வியக்க வைத்திருக்கிறது! அதனால் பிரபாகரன் கதையை படமாக்க திட்டமிட்டேன்! ராஜீவ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் சாருடன் நான் அடிக்கடி சந்தித்துப் பேசுவேன்! இலங்கை குறித்து, புலிகள் குறித்து பல அரிய விஷயங்களை அவரிடம் பேசி கலெக்ட் பண்ணியிருக்கேன்! ஓவர்ஸீஸ் நண்பர்களும் பல மெட்டீரியல் கொடுத்திருக்கிறார்கள்!
படத்தின் முடிவு எப்படி இருக்கும்?
"எனக்குள்ள பல்வேறு மட்ட தொடர்புகளிலும் கிடைத்த செய்தி பிரபாகரன் இருக்கிறார் என்பதே. நவம்பர் 27 புலிகளின் மாவீரர் தினம்! பிரபாகரன் அன்று வெளியே வருவார் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இதற்கேற்பதான் படத்தின் முடிவும்''
பிரபாகரனாக யார் நடிக்கிறார்கள்?
"பலகோடி மக்களின் மனதில் பதிந்திருக்கும் முகம் அது! பிரபாகரனாக ஒருவர் நடித்தால் அந்த உருவம் உண்மைக்கு மிக அருகாமையில் இருப்பதாக மக்களுக்கு தோன்ற வேண்டும்! எனவே அதற்கு சில திட்டங்களை வைத்திருக்கிறோம்! அதை இப்போது வெளியிட இயலாது!'' என பீடிகை போட்டார் ரமேஷ்!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14891&Itemid=163
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com