புலிகளின் தலைவரின் மரணத்தை உறுதிப்படுத்துமாறு இந்தியா கோரிகை | |
| |
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ அறிவித்தலை தாம் இலங்கையிடம் இருந்து எதிர்பார்ப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. | |
இந்திய லோக்சபையில் நேற்று உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா இந்த தகவலை வெளியிட்டார். முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோர் தொடர்பில் இந்தியா உத்தியோகபூர்வமாக இலங்கையிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாக கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு 500 கோடி இந்திய ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதனைத்தவிர வடக்கில் உள்ள நலன்புரி மையங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 2 ஆயிரத்து 500 கல்வனைஸ் இரும்பு தகரங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் புனர்வாழ்வை விரைவுபடுத்துவதற்காக நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நான்கு குழுக்களை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்த அவர் தமிழ்நாட்டிலிருந்து நிவாரணப்பொருள் தொகுதியொன்றும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் இராணுவ நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதித்தீர்வு காணப்படவேண்டும் என்றும் கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார். | |
|
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com