நம்பிக்கை
உணர்வால் மதிமயங்கி உன்னை நீ அழிக்காதே உயர்வாகச் சிந்தித்து செய்து விட வேண்டியவை எவையென்று கண்டுணர்ந்து -உன்அறிவாலே வெற்றிகொள்க...
நம்பிக்கை கொள்க நம்பிக்கைக் கொள்க தமிழா!
முதுகெலும்பே முறிந்ததுபோல் படுத்தாயா?
இல்லை,முல்லைத்தீவிற்குள் முடிந்துவிடும் கதை என்று
தமிழன் என்ற: இல்லை, இல்லைதமிழன் என்றால் புலி என்றமுகம் மறைத்து வாழ்வாயா ?
கிலி பிடித்துஇனிமேல்எலி பிடிக்கக் கூடவழியற்றுப் போனோமேஎண்றெண்ணி அழுவாயா?
எமக்குப் பிடித்தசனி - இனிஒருபோதும் விலகாதுஎன்றேதான் - அந்தக்கடவுள்மேல் பழிபோட்டுதாடிவைத்து ஞானியெனநடைப்பிணம் போல் நகர்வாயா?
இயக்கம் என்று இனிமேல் யார்வரினும் கதவிற்குத் தாள்போட்டு இல்லையிங்கு யாருமென்று மௌனித்துப் படுப்பாயா?
கொடுத்த தெல்லாம்போயாச்சு அரசாய்க் கிடந்த நிலம் தரிசாயும் ஆனபின்னேஇவர்களுக்குஇனிமேல் ஏன் காசென்றுமனதிற்குள் சபிப்பாயா?
உலகின் அரசுகளே ஆயுதத்தைப் போட்டுவிட்டுப் பேசிடலாம் என்ற பின்னும் போர் என்ற ஒன்றின் மேல் நடாத்துவது சாத்தியமா?
நடவாது! திடமாய்நில்! மிக மிகவும் கவனம் கொள்! நம்பிக்கை தரும் நல்லசரித்திரங்கள் எண்ணிப்பார்...
என்றெண்ணி மனதெல்லாம் குழம்பி மந்திகைக்குப் போவாயா?
ஏழுமுறை சறுக்கிவிட்ட சிலந்திமறு முறையே தாவித்தன் இலக்கை அடைந்தது மேற்உலகறிந்த ஒரு வீரன் மீண்டும் கிளர்ந் தெழுந்து வென்றகதை நீயறிவாய்...
ஏன்கால்நூற்றாண்டைக்கடந்துவிட்ட எம் போரில்நாம் கடந்த சரித்திரங்கள்மிகவுண்டு எண்ணிப்பார் ...
சாதுர்யமாய்ச் சிலதைவிட்டுவைத்தேன்உனக்காய்:நீயாகச் சிந்தி ...
அயல்வீட்டுப் பையனோடு பகைக்காதே இடைக்கிடைதான் அவன் தங்கை சிரிப்பாளே பார்த்து அனுபவியேன் ...
நேரடியாய்ப் பகைக்காதே நட்பாகக் கைகொடு - ஆனால்உள்ளுக்குள் வைரம்கொள் வெல்வதொன்றே உனதிலக்கு ....
நீ புரிவாய் என்பதனால்நயமாகச் சிலது சொன்னேன்முறைதவறிப் புரிந்து நாதிகெட்டு அலையாதே!
இனமானம் மிகக் கொண்டதமிழ் நாட்டின் இளையவரே!உங்களது தியாகத்தைஎன்றோ நாம் கண்டுணர்ந்தோம்எமக்காக எத்தனை பேர்உம்முயிரை எரித்தீர்கள் ...
எரிக்காதீர் உம்முயிரை!ஏன்எதிரியவன் இலக்கும்அதுவேதான் ...
உணர்வாளன் இருந்தாலே அரசுகட்குத் தலைவலிதான் அதனாலே அவர்கள் தானாக இறந்துவிட்டால் இனிமேல் நம் தலைவலிகள் தானாக முடிந்ததென்று மகிழ்வார்கள்......
நீங்கள் நினைப்பது போல் மனம் நொந்து நீதிசொல்ல வாரார்கள்....
உணர்வாளன் எவனோ?உயிரை எரிக்கவரும் அடுத்த தொரு தமிழ் மகனோ?உம்மை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் நிற்க! நிதானிக்க!
அனியாயமாய் உயிரைஎரித்தழிக்க வேண்டாம் சிந்தை மிகவிரித்துபரந்துள்ள தேசமெல்லாம் உந்தன் உயிர் போகும்வரை எதுவெல்லாம் விடியலிற்காய் சாதிக்க முடியும் என்று காட்டு....
உலகத் தமிழ் மகரே!தம்பி,எறும்ப+ரக் கற்குழியும்என்பார்கள் -நீஎறும்பாய் ஊர்ஆனால்சோர்வகற்று ...
அனுபவத்தால் விவேகம் வரவேகம் வரும்.நில்லாதே - இறுதி இலக்கு வரை தொடர்க....
ஓ!எச்சில் நாய்களே! தொலைபேசி எடுத்தீராம் உங்களது ஆட்களதுகதை முடிந்து போனதினி நீங்களெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டுப்புறப்படுங்கள் என்றீராம்.
கோடரியின் காம்புகளே! பிணந்தின்னிக் கழுகுகட்கு சேவகங்கள் சொய்வதன்றி வேறென்ன நீரறிவீர்?
உயிருள்ள உடம்பென்றால் அறிவுரைகள் கேட்கும் நடைப்பிணங்கள் நீங்கள் உமக்கெங்கு கேட்கும் யான் என்செய்வேன் - நீர்என்றோ இறந்து விட்டீர்கல்லறைக்குள் போகாமல்நாறுகின்றீர் - நாற்றம் பொறுக்காமல் நாறுகின்றீர் புலம்பி விட்டேன்...
உலகே! உலக வல்லரசுகளே...
காலம் காலமாய் சுதந்திரப் போர்களில் பாடம் படிக்கிறீர்கள் ஆனாலும்,இன்னும் எவ்வளவு பகற்கனவுகள் உம்மிடம்.....
தலைவலி உள்வன் யாரோ கொடுத்த பிழையான மாத்திரையை பாவித்துவிட்டு தலைவலி நின்று விட்டதாய் சொல்லி மகிழ்வானா?
நீங்கள் அதைத்தான் எல்லா நாடுகளிலும் எம்மிடமும் எதிர்பார்கிறீர்கள்.
நீங்கள்மாறுவீர்களோ இல்லையோ?
சுதந்திரம் வேண்டிப் போராடும் ஓர் இனம் சுதந்திரம் என்ற இலக்கில் மாறவே மாறாது,என்றும் இதைமனதிற்கொள்க ...
புத்தரே! மகிழ்வாகத்தூங்குகின்றீரா? உம்மை வணங்கும் சிங்கள இனத்தின்'ஜீவகாருண்யம்'எப்படித் தங்களை துயில்கொள்ள விடும்,
முடிந்தால் இன்னுமொரு பிறப்பெடுத்தாயினும் போதனை செய்க ஏனென்றால் பௌத்தத் துறவிகளே -உம் அடியொற்றிநடக்கவில்லையே...
சிங்கங்களே! வன்னியில் காலூன்றி விட்டதாய் கனவுகாணும் சிங்கள இராணுவமே!
கவனம், நீங்கள் தற்காலிகமாய்ப்பதித்த கால்கள் நிரந்தரமாய் -உங்கள் உயிர்களை அல்லவா பறிக்கப் போகிறது.
எத்தனை தடவை தான் நம் தலைவன்பிரபாகரனிடம் பாடம் படிப்பது
இன்னும் ஏன் சித்தியடையாமல் படித்த வகுப்பிலேயே மீண்டும் மீண்டும் தசாப்த காலங்களாய் நிற்கின்றீர்கள் என்ன செய்வது....
சிங்கள தேசத்தின்அரசியல் தலைவர்கள் அரச கதிரையை தமதாக்கிக் கொள்ளகாலம் காலமாய் உங்களை அல்லவா உரமாக்குகின்றார்கள்
சிப்பாய்களே! உங்கள் கும்பங்களின்அன்றாடத் தேவைகளால்...மாயைகளால் மனசு மயங்கவறுமையில் தொடங்கி வசதி தேடுவதுவரை...நீங்களும்புரிந்தும் புரியாமல்எரிந்து சாம்பலாய்...காலங்கள் கடந்துபுரிகின்ற ஞானத்தில்இலாபங்கள் ஏதுமில்லை.
எனவே காலம் கடக்க முன் ஞான மடைந்திடில் -உம்வாழ்வினை மீட்டிடலாம் வன்னியில் இருந்து இல்லை ஒட்டு மொத்தத் தமிழீழத்தில் இருந்தும் உங்கள் நாட்டிற்குஉயிரோடு போவதேஉங்கள்ஆசையா?இல்லை சவப்பெட்டிகளிலா?
தமிழ் மகனே! போத்துக்கல்,ஒல்லாந்து,இங்கிலாந்தார் வரமுன்னேநாம் இருந்தநிலை ஒருக்கால்எண்ணிப்பார்...
அதன்பின்னே தானிந்த இழி வாழ்வு...மிகச் சில நூற்றாண்டுகள் தூங்கினோம் தட்டிவிட யாரும் இல்லை ஏங்கினோம் ஏக்கம் தணிப்பதற்கும் யாருமில்லை கல்விவரலாற்றுப் படிப்பு...
எத்தனையாம் நூற்றாண்டுஎவனெவன் வந்தான் நம் நிலத்தில் எங்கெங்கு கால்வைத்தான் இன்னும் இன்னும் எத்தனையோ...
மனனம் செய்க பரீட்சை வினாத்தாளில் கேள்வி வரும் ஒரு பிழையும் விடமாட்டாய் நூற்றுக்கு நூறு வரும் -ஆனால் பெரும் பிழைதான் ஒன்றிருக்கும் ஏற்றமுடன் வாழ்ந்தவர் நாம் இப்படியாப் போனோமே.....
ஏன் மீண்டும்அப்படியாய் வாராமல் சாக்கடையாய் நாறுகிறோம் எனக்கேளாய்:
கேட்டாலும் பதில் தாரார் கேட்டார்சிலர் கேட்டார் -மட்டாகஅரசியலில் சிலர் கேட்டார்"ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள்வதில் என்னகுறை''எனக்கேட்டே தங்கள் வயிற்றை நிரப்பி காலத்தைக் கடத்தி விட்டுப்போய் முடிந்தார்.
இக்கதையை மாற்றிவைத்த பெருமகனே! பிதாமகனே! பிரபாகரன் என்னும்பெரும் தலைவன் அடுக்களைக்குள் இருந்தவரை அரியாத்தை ஆக்கிவைத்தான்,
கூனிக் குறுகி நின்றோர் குண்டேந்தி வெடிக்க வைத்தான்,இமயமென வெற்றிகளை உயர்வாகக் கொண்டு நின்றான்...
போர் என்ற ஒன்றில் ஏற்ற இறக்கங்கள் எது வரினும் தளம்பாத பெரும் தலைவன்ஆனால்,சில பேர்க்கு நம்பிக்கை வாராது போரில் நீர் பெருவெற்றி கண்டாலும் -தம்பி உம்மை இந்தஉலகென்றும் ஏற்காது என்பார்....
அவர் வாய்க்கு இன்றைய நாள் அவல்ப் பொரிதான்....இது ஒன்றும் புதியகதை இல்லை அப்பு....சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்துசேராது -என்றார்கள்அதையேதான் சொல்வார்கள் இன்னும் இன்னும் பழிப்பார்கள் வென்றுவிட முடியாதபோர் என்று உரைப்பார்கள்நிற்க,
இன்னும் பலவுண்டுஆனாலும் அதிலொன்று,உதவியவர் மன்னிக்க உதவாதோர் மனங்களிலே ஒருகீறு - ஆனால் ஆளமாய்! கிளிநொச்சி பிடித்துபத்து ஆண்டுகள்,ஆனையிறவடித்து ஒன்பதாண்டுகள்,மொத்தத்தில்எழுபது வீத நிலம்உனதான பெரும் கனவில் மீதம்முப்பது வீதத்தைப் பிடிப்பதற்குநேரகாலத்தில் கொடுப்பதற்கு மறந்து விட்டாய் அதனால்தான் இன்று நீ கட்டிவைத்த மனக்கோட்டைகள் வாடப் படுகிறது
நிரந்தரமாய் இல்லை -நீ சரியாகச் சிந்தித்தால் சரித்திரங்கள் உனைப் பாடும் இல்லை உலகமெலாம் தரித்திரமாய் அலைவது மெய்.மயங்காதே!
உந்தனது முகவரியை நீயாகத் தொலைக்காதே!களைக்காதே!விறைப்பாகச் சதிராடு....
களம் வெல்லும் என்றெண்ணி நிறைவாகப் போராடும் புலிமகர்க்கு கைநிறையக் கொடுத்துதவு.....
வெண்ணெய் திரண்டுவரும் வேளையது பார்த்திருந்து பானை உடைப்பதற்குப்போட்ட கதை நடக்கிறது....
உறங்காதே! உந்தனது இலட்சியத்தில் சற்றும் நீ இறங்காதே! தலைவனது காலடிக்குள் நிற்கும் நம் புலிமகர் போல் துடிப்போடு செயலாகு...
எழுபதுகள் தாண்டுகையில் -தமிழ்அரசியலார் சொன்னார்கள்'செய் அல்லது செத்துமடி' என்று நாம் மடியோம் செய்து முடித்தும் கிழர்ந் தெழுவோம்.....
புலிக்கொடியே வானில் அழகாகப் பறந்தாடும்கிலி ஏதும் இன்றித்தமிழ் நிலத்தில்நாம் நடப்போம்,
மாவீரர் நாமங்கள் நிலைத்துவிடும் தமிழ் நிலத்தில் தங்கத் தமிழ் மழலைவழ்கையிலே நாம் சிரிப்போம்,
புலியின் கொடியிருந்து மாவீரர் சிரித்திருப்பார்,வேங்கைகள் வெல்வார்கள் வெற்றி நமதாகும்.
ஒன்றுமட்டும் உண்மை நாம் களைத்து விட்டோம் இழந்தவை கொஞ்சமல்ல நெஞ்ச மெல்லாம் துயரம் -ஆனால் களைப்பிற்கு இடம் கொடுத்து பலிக்கடாக்கள் ஆவதா?
இல்லை களைப்பை மறந்து களத்தை வென்று பல்லக்கில் ஏறுவதா?
தமிழா! இனி எதை நோக்கி உனது நடை....
நம்பிக்கை கொள்க!
நம்பிக் கைக் கொள்க!
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com