தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்
There was an error in this gadget

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, May 16, 2009

தமிழனாக இருந்தால் நீங்கள் இந்தியனாக இருக்கமுடியாது. இந்தியனாக இருந்தால், தமிழனாக இருக்கமுடியாது.


தமிழனாக இருந்தால் நீங்கள் இந்தியனாக இருக்கமுடியாது. இந்தியனாக இருந்தால், தமிழனாக இருக்கமுடியாது.

இந்த உண்ணாவிரதம் வித்தியாசமானது. எத்தனையோ கூட்டங்களில் பேசினாலும் உங்கள் முன் பேசுவதுபோல ஆகாது. நாங்களெல்லாம் உங்களைவிட நன்றாக, மதிப்போடு வாழ்ந்துகொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கக்கூடும். நீங்கள் நினைப்பது போலில்லை. நாங்களும் அடிமைகள்தான்! அதிலும், உங்களைவிடத் தரந்தாழ்ந்த அடிமைகள் என்று சொல்லவேண்டும். ஏனென்றால், உங்களுக்கென்றொரு உண்மையான தலைவர் இருக்கிறார். அவர் தமிழீழத் தலைவர் மட்டுமல்ல@ தமிழினத்தின் தலைவர். எங்களுக்கு அப்படிச் சொல்லிக்கொள்ளும்படியான தலைவன் இல்லை. அதனால்தான் கடல்கடந்து தலைவர்களைத் தேடவேண்டியிருக்கிறது.

இந்தியனாக இருப்பதற்கும் தமிழனாக இருப்பதற்கும் இடையில் ஒரு வேறுபாடு இருக்கிறது. இந்தியனாக இருந்தால், ஆயுதம் கொடுத்து இலங்கையில் போரை நடத்துபவனாக இருப்பான். தமிழனாக இருந்தால், 'போரை நிறுத்து'என்று துயரத்தோடு கதறுபவனாக இருப்பான். ஆக, தமிழனாக இருந்தால் நீங்கள் இந்தியனாக இருக்கமுடியாது. இந்தியனாக இருந்தால், தமிழனாக இருக்கமுடியாது.

கடைக்கோடித் தமிழனுக்கும் கலைஞர் ஆடிய நாடகம் புரிந்துபோய்விட்டது. கனரக ஆயுதங்களால் தாக்குவதை நிறுத்துவதற்குப் பெயர்தான் போர்நிறுத்தமா? ஆனால், இவர்கள் சொல்கிறபடி அங்கு அப்படி எந்த நிறுத்தமும் ஏற்படவில்லை. இப்போதும் எறிகணைகளுக்கும் விமானக்குண்டு வீச்சுக்களுக்கும் மக்கள் பலியாகிக்கொண்டுதானிருக்கிறார்கள்.
"நான் சொன்னதைக் கேட்கும் மத்திய அரசு அமையுமானால், இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தமிழீழம் பெற்றுத்தர வழிவகை செய்வேன்"என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். எவ்வகையிலேனும் எங்கள் உறவுகள் இந்த இனவழிப்பினின்று காப்பாற்றப்பட்டால் சரி.

போராளிகள் எங்கள் சகோதரர்கள். அதை யார் சொன்னாலும் நாங்கள் மாற்றிச்சொல்வதாக இல்லை. கலைஞரின் நாடகங்கள் எல்லாம் தெரிந்துபோய்விட்டன. புனர்வாழ்வுக்காக 25 கோடி பணம் கொடுப்பார்களாம். அதை வாங்கி ராஜபக்சே ஆயுதம் வாங்குவான். வேறென்ன செய்வான் என்பது நமக்குத் தெரியாதா? போர்நடக்கும் பகுதிகளிலிருந்து கொண்டு வந்து இறக்கப்பட்ட மக்களைக் காரணமாகக் காட்டி உலகநாடுகளிடம் பணம் வசூலிக்கும் வேலையை ராஜபக்சே அரசாங்கம் செய்ய நினைத்தது. 'சித்திரவதை முகாம்களுக்கு பணம் கொடுக்கவேண்டாம்' என்று புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் அறிவுறுத்திவிட்டார்கள். எங்கள் மக்களை அடித்துவிரட்டிவிட்டு அவர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்களவர்களைக் குடியேற்றும் கைங்கரியத்தைத்தான் ராஜபக்சே செய்ய நினைத்திருக்கிறான். அதற்கு நாம் ஒருபோதும் இடங்கொடுக்கக்கூடாது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். உங்கள் பிள்ளைகளைக் கல்வியினால் முன்னேற்றுங்கள். எமக்குமுன் மகத்தான கடமை ஒன்று காத்துக்கிடக்கிறது. ஹிட்லரால் விரட்டியடிக்கப்பட்ட யூதர்கள், இலட்சக்கணக்கில் தமது உறவுகளை ஒரு போர்வெறியனிடம் பறிகொடுத்த யூதர்கள் எப்படிச் சாதித்துக் காட்டினார்களோ, அதைப்போல நீங்கள் சாதனையாளர்களாக, வரலாற்றை மாற்றி எழுதுபவர்களாக ஆகவேண்டும் என்பதே எனது விருப்பம்.
(30-04-09 அன்று சென்னை சேப்பாக்கத்தில், தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களால் உண்ணாநிலைப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.அதில் கலந்துகொண்டு பேசிய "கவிஞர் தாமரையின் அனல் பேச்சு)

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!