2000 பொதுமக்கள் வைத்திய சாலையில் மருந்துகள் இன்றி இறக்கப்போகின்றனர் |
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள தற்காலிக வைத்தியசாலை அருகில் கடும் சமர் இடம் பெறுவதாக கூறியுள்ள வைத்தியர் வரதராஜன் அவர்கள் தாம் அங்கிருந்து சிறு தூரத்தில் இருப்பதாகவும் வைத்தியசாலையில் சுமார் 2000 பேர் காயங்களுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பல நோயாளிகள் மருந்தின்றி இறப்பதாக கூறியுள்ள அவர் கடும் எறிகணைத் தாக்குதல் நிகழ்வதை உறுதிப்படுத்தியுள்ளார். உக்கிர சமர் இடம் பெற்றுவரும் நிலையில் தாமும் காயப்படலாம் என குறிப்பிட்டுள்ள மருத்துவர், இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குவதாக கூறியுள்ளார். பிந்திக் கிடைத்த ஊர்ஜிதமற்ற தகவலின்படி மருத்துவர் வரதராஜனை இலங்கை ராணுவம் கைதுசெய்துள்ளதாக கூறப்படுகிறது, இருப்பினும் இச் செய்தியை சுயாதீனமாக உறுதிசெய்யமுடியவில்லை. அவர் வழங்கிய செவ்வி ஒலி வடிவில்
கடும் புகைமண்டலமாக முள்ளிவாய்க்கால் பகுதி காணப்படுவதாக கூறப்படுகிறது. இராணுவத்தினர் முன்னேறியுள்ள நிலையில் அங்கு அகப்பட்டிருக்கும் சுமார் ஒரு லட்சம் மக்களின் நிலை என்ன எனத் தெரியவில்லை. அனைத்துத் தொடர்புகளும் தற்போது துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. அங்கு சிக்குண்டு தவிக்கும் எமது உறவுகளை எப்படி காப்பாற்றப்போகிறோம் ?? விரைந்து செயல்படுங்கள் எம் புலம் பெயர் உறவுகளே. பிரித்தானிய வாழ் தமிழர்களே உடனே பாராளுமன்றம் முன்பாக கூடவும், புத்தி ஜீவிகள் உடனடியாக அமெரிக்க வெள்ளை மாளிகையுடன் தொடர்புகொண்டு பசுபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கடற்படை வன்னி சென்று மக்களை காக்கும் படி அழுத்தங்களை கொடுங்கள். அங்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. |
http://www.youtube.com/watch?v=qK7X9QDQ3o8
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com