30,000 தமிழர்கள் இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் ஊனமுற்றுள்ளனர் |
இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் சுமார் 30,000 தமிழர்கள் ஊனமுற்றிருப்பதாக பிரித்தானிய இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் வெளிவரும் டெலிகிராப் பத்திரிகையின் இணையத்தளம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த இரு மாதத்தில் மட்டும் பல்லாயிரக் கணக்கானவர்கள் முழு அங்கவீனம் அல்லது பாதி அங்கவீனப்பட்டு இருப்பதாகவும், பலர் கை, கால்கள் மற்றும் விரல்கள் என பல உறுப்புக்களை இழந்த நிலையில் இருப்பதாகவும் அறியப்படுகிறது. இராணுவத்தின் பிடியில் தற்போது இருக்கும் 2 லட்சத்தி 80 தாயிரம் மக்களில் 10 இல் ஒருவர் அங்கவீனமாக இருப்பதாக சமீபத்தில் தடுப்புமுகாமிற்குச் சென்ற வெளிநாட்டுத் தொன்டு நிறுவனப் பணிப்பாளர் தெரிவிக்கிறார். பிரான்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச அங்கவீனமுற்றோர் அமைப்பானது, (http://www.handicap-international.org.uk/) சிறிய தொழிற்ச் சாலைகளை திருகோணமலையில் நிறுவி, உள்ளூர் மக்கள் உதவியுடன் அங்கவீனமுற்றவர்களுக்கு செயற்கை அங்கங்களை பொருத்திவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இங்கு இருக்கும் அனாதைக் குழந்தைகள் பற்றி ஏற்கனவே அதிர்வு இணையம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. |
வீடியோ படம்
http://www.youtube.com/watch?v=d8kXCDiW98o
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com