தற்சம்யம் நட்க்க இருக்கும் தேர்தல் கூட்டங்களைப் பார்த்து ஒரு கற்பனை சும்மா ஒரு தமாசுதான் ,,
அரசியலுக்கு நான் புதுசு ,
புத்தி இல்லா சிறிசு ,
அரசியல் வீசை என்ன விலை?
அங்கு எனக்கு என்ன வேலை?
ஒருநாள் ,,,,,,
ஒரு தெருவில் நுழைந்தேன் .
அதன் பெயர் "அரசியல் தெரு"
தொண்டர்கள் நடுவில் மாட்டினேன்,
"இங்குட்டு வா மச்சான் "
ஒருவன் அழைத்தான்
இங்கு என்ன்?" நான் கேட்டேன்
"இது தி மு.க கட்சி "
"அப்படின்னா"
கடுகடுக்கப்பார்த்தான் ,
"நீயே தெரிஞ்சுக்கோ போய்யா"
"ஓ தினம் முன்னேறும் கட்சியா?
அல்லது தில்லுமுல்லு கட்சியா ?
முறைத்தான் தொண்டன் .
நான் அங்கிருந்து நழுவினேன் ,
காததூரம் நட்ந்தேன்
வந்தது இன்னொரு கூட்டம்
அங்கும் மாட்டிக்கொண்டேன் ,
"எங்கள் அம்மா வாழக "
அண்ணன் நாமம் வாழ்க "
"இங்கு என்ன "?
அதே கேள்வி ,,,,
"இவர் புரட்சித்தலைவி '"
எஙகள் கட்சி அதிமுக "
"அப்படியென்றால்"?
கேவலமாக்ப் பார்த்தான்
"நீ எநத் ஊர்க்காரன்?'
"அம்மா திருப்தியுடன் முன்னேறும் கட்சி "
மனதில் சொன்னேன்
எங்கும் கும்பிடு
நானும் கும்பிட்டு நகர்ந்தேன் ,
வந்தது இன்னொரு கூட்டம்
பலகொடிகளின் வட்டம்
"வா அண்ணாச்சி "
குரல் கொடுக்க
இரண்டு வேளைச்சாப்பாடு
பணத்துடன் முடியும் இன்னிப்பாடு",,,
"இங்கு என்ன கட்சியோ ?
"இதுவா பாம க
.
"பாமாவுக்கு அக்காவா ?
அப்படீன்னா?"
அவன் முறைத்தான் ;
"என்ன கிண்டலா"
என் தலைச்சுற்ற
என்னவாய் இருக்கும் இது
குடைந்தேன் ,
"{பணம் } பார்த்தால் மாறும் கட்சியோ ?
அப்பா போதும் போதும்
இந்த ஒரு தெருவில்
இத்தனைக்கட்சிகளா?
இனி மாட்ட மாட்டேன் ,
ஓட்டம் எடுத்தேன்"
காக்க காக்க கனக்வேல் காக்க"
என் வாய் மொழிந்தது
வந்தது ஒரு குடுமபம்
"இது எங்கள் புது கட்சி '
வந்து தோள் கொடுங்க "
" இல்ல தம்பி
எனக்கும் ஒரு கட்சி உண்டு
"அது என்ன அண்ணாச்சி ?'
"அதுவா ,,, வே பா பா க "
"அது என்ன புதுக்கட்சி ?
"வேடிக்கைப்பார்க்கும் பாமரன் கட்சி "
vishalam raman <rvishalam@gmail.com>
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com