செத்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு நன்றி.. நன்றி..
ஆம்.. இன்று கிடைத்த இந்த திடீர் விடுமுறையை முறையாகக் கொண்டாட சன் டிவியின் திடீர் அறிவிப்பு.. " காலை பத்து மணிக்கு மெகா ஹிட் திரைப்படம் "திருடா திருடி" ஸ்பெஷல் ஷோ..
ஒரு வேசியிடம் பின்வரும் இந்தக் கேள்வியை கேட்க நேர்ந்தால்..
" நீங்கள் சுகத்திற்காக இந்த பிழைப்பை நடத்துகிறீர்களா அல்லது பணத்திற்காகவா?" என்ன பதில் அவள் சொல்லக்கூடும் என்று இன்று என்னால் ஊகிக்க முடிகிறது.. அந்த பதில் இதுவாகத்தான் இருக்கும்
"டிவிக் காரங்க கிட்ட போய் இந்தக் கேள்விய கேளு..அவனுங்களும் இதத்தான பண்றானுங்க"
இன்று காலை நாளிதழின் முகப்பில் ஒரு படம்.. சில சிறுவர்களும் பல முதியவர்களும் பெண்களும் அந்த ராணுவவீரன் கையில் இருக்கும் தண்ணீரையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. ஆம்.. ஈழத்தில் தான்.

தண்ணீர் அற்றுப் போனதால் கண்ணீர் வற்றிப்போனது போன்ற கண்கள்..அந்தச் சிறுவனின் கண்களைப் பார்த்து விட்டு காலை சிற்றுண்டியை சாப்பிட்டிருந்தீர்களானால்.. நீங்கள் தன்னம்பிக்கை மிக்க ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும்.
என்ன எழவுக்கு இந்த வேலை நிறுத்தம் கலைஞர் அவர்களே?
எல்லா டி வி சேனல்களையும் முடக்கி இருக்க வேண்டும் இன்று.. அல்லது ஈழப் பிரச்சனைகளைப் பற்றிய டாகுமெண்ட்ரிகளையாவது ஒளிபரப்ப தகவல் சொல்லி இருக்க வேண்டும்.. இன்னுமா உங்கள் பேச்சை பேரன் கேட்பதில்லை???? எல்லா சேனல்களும் இன்றைய இன்ஸ்டண்ட் விடுமுறையை பணம் பார்க்கும் நாளாக மாற்றிக்கொண்டிருக்கவா இந்த வேலை நிறுத்தம்?
சோனியா காந்தியும் அத்வானியும் அருகருகில் அமர்ந்து ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருக்கக் கூடிய இதே தேசத்தின் எச்சத்தில் தான் நாசமாய்ப் போன கலாச்சாரம் இங்கு.. அட சேர்ந்தமர்து பேச வேண்டாம், ஒரே ஃபிளைட்டில் கூட போகவேண்டாம்.. 40 நிமிட இடைவெளியிலாவது இலங்கைக்கு சென்று பேசி இருக்கலாமே.. இப்பொழுதாவது போய் பேசலாமே..
அதற்குத்தான் துணிவில்லை.. அட்லீஸ்ட்.. இந்த வேலை நிறுத்ததிலாவது உறுதியைக் காட்டி இருக்கலாம். எதற்காக இந்த வேலை நிறுத்தம் என்று மேட்டுக்குடி மக்கள்(?) கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் இவ் வேளையில் இந்த படம் காட்டும் வேலை அதிர்ச்சியைத்தான் கூட்டுகிறது.
பாவம் சார்.. ஒரு வேளை சோறு என்பது போய் ஒரு வாய்த் தண்ணியில் வந்து நிற்கிறது நிலமை..
படம் காட்டுவதை நிறுத்துங்கள்.. எல்லாப் படத்தையும் தான்.
எல்லா அரசியல் கட்சிகளும் " நாம் என்ன செய்திட முடியும்" என்று நாக்கை மடக்கி மடக்கி பேசிக்கொண்டிருக்காமல், குழுவாக சென்று ராஜபக்சேயைப் பாருங்கள்.. பாஸ்போர்ட் இருக்கும் தமிழர்கள் அத்தனைப் பேரும் உங்களோடு வரத்தயார்..
அரசியல் வாதிகளே.. நீங்கள் தயாரா?
http://www.narsim.in/2009/04/blog-post_23.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com