இந்த பூமிக்கு நாம் செய்யகூடிய 51 விஷயங்கள்!
ஏப்ரல் மாத டைம் பத்ரிகையில் க்லோபல் வார்மிங்கை(Global Warming) கட்டுபடுத்த நாம் ஒவ்வொருவரும் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி ஒரு ஐம்பத்தி ஒரு விஷயங்கள் எழுதியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் நம்மால் கடைபிடிக்க முடியாவிட்டாலும் சிலதை நம்மால் செய்யமுடியும் என்று தோன்றுகிறது. நடைமுறை வாழ்கையில் கடைபிடிக்க முடியும் என்று எனக்கு தோன்றியவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.1) லைட் பல்ப்ஸ்.
நாம் சாதரணமாக உபயோகிக்கும் பல்ப்பை (conventional incandescent bulbs) விடுத்து குழல் விளக்கை சுற்றி வைத்த மாறி இருக்கும் பல்பை உபயோகிப்பது -{compact fluorescent light bulb(CFL)} நல்லது. CFL சாதரண பல்பைவிட இரண்டிலிருந்து ஐந்து மடங்கு விலை அதிகமாக இருந்தாலும் இதன் நீடித்த உழைப்பு அதை சரிகட்டி விடுகிறது. ஒரு 7 வாட் CFL பல்ப் ஒரு 40 வாட் ரெகுலர் பல்புக்கு சமம். இது ஒரு சிறந்த
எனர்ஜி சேவராக செயல் படுகிரது. ஆனால் இந்த வகை பல்பில் 5 mg மெர்குரி இருப்பதால் இதை மற்ற எல்லாவகை கழிவு பொறுள்களுடன் எறிய முடியாது.
2) துணி துவைத்தல்:
மிகவும் இன்றியமையாத ஒரு தினப்படி செயல். அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை!! ஆனால் அதைதான் இங்கு ஒரு சிறந்த எனர்ஜி சேவராக குறிபிடுகிரது Time Magazine. கொஞ்சம் கொஞ்சமாக (வாஷிங் மஷின் உபயோகிப்பவர்களுக்கு!) துணிகளை போட்டு தோய்ப்பதைவிட, துணிகளை சேர்த்து வைத்து ஒரு பெரிய கும்பலாக தோயித்து எடுப்பது ஒரு சிறந்த ஷக்தி சேமிப்பு. அதிலும் கொதிக்கும் சுடு தண்ணியை உபயோக படுத்தாமல், மிதமான சூடுள்ள தண்ணியை உபயோக படுத்துதல் நல்லது. ரொம்ப முக்யமான இன்னொரு விஷயம், ட்ரைய்யெரை(dryer) உபயோக படுத்தாமல் கொடி கட்டி துணியை உலர்த்துவதால் நம் வாஷிங் மெஷினால் உற்பத்தியாகும் 90% co2 வை குறைக்கலாம்.
3) முடிந்த வரை பேருந்தை உபயோகியுங்கள்!:இது எவ்வளவு தூரம் சாத்யம் என்று தெரியவில்லை. நாம் எல்லோருமே நம் சவுகரியத்துக்கு தகுந்தாற்போல் போக வர பழகி விட்டோம். பஸ்ஸுக்காக காத்திருந்து போவது எல்லாம் மலையேறி போய்விட்டது. இருந்தாலும் போக்குவரத்து மட்டுமே அமெரிக்காவில் 30% கார்பண்டை ஆக்சைட் உமிழ்தலுக்கு காரணமாக உள்ளது நிறைய கவலையை அளிக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை பொதுதுறை போக்குவரத்து, சில பெரிய நகரங்களை தவிர வேறு எங்குமே சரியாக இருப்பதாக தெரியவில்லை. பொதுதுறை போக்குவரத்தை(பேருந்து மற்றும் புகைவண்டி) உபயோகிப்பதால் ஒரு வருடத்துக்கு 1.4 மில்லியன் பெட்ரோலை சேமிக்கலாம். அவ்வாறு சேமிப்பதால் 1.5 மில்லியன் அளவு co2 உமிழ்தலை தவிற்கலாம். நம்மால் நிச்சயம் செய்யகூடிய ஒன்று என்றால் car pooling!
4) கணிணி மூலம் பணம் செலுத்தலாம்!உங்கள் கணிணி மூலம் நீங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் மாதிரி பல வகையான கட்டணங்களை செலுத்தினீர்களானால், மரங்களை மட்டும் காக்கவில்லை, காகித காசோலைகளை எடுத்து செல்லும் விமானம் மற்றும் லாரிகளின் பெட்ரோல் செலவையும் கட்டுபடுத்துகிரீர்கள். அது உமிழும் co2 வை மட்டுபடுத்துகிரீர்கள்.
5) ஜன்னலை திறந்து வையுங்கள் !
குளிரூடுபெட்டியை மிதமாக உபயோகியுங்கள்.
6) ப்லாஸ்டிக் பைகளூக்கு ஒரு பெரிய தடா போடுங்கள்!
இந்த பைகள் அழிய தோராயமாக 1000 ஆண்டுகள் ஆகின்றன. துணி பையை உபயோகிப்பது சிறந்தது.
7) மூங்கில் வேலி !
உங்கள் வீடுகள் மற்றும் தோட்டத்ற்க்கு மூங்கில் வேலி அமையுங்கள். மூங்கில் ஒரு நாளைக்கு 1 அடி வளரகூடியது. ஒரு ரோஜா செடியை விட பல மடங்கு co2 வை தன்னுள் ஈர்த்துக்கொள்ளகூடிய ஷக்தி உடையது.
8) உள்ளூர் விவசாயியை ஆதரியுங்கள்!
பெரிய பெரிய கடைகளில் போய் காய் கனிகள் வாங்குவதை தவிறுங்கள். உள்ளூர் சந்தையில் வாங்குவதால், பல மயில் தூரத்திலிருந்து பெரிய பெரிய வாகனங்களில் சாமான்கள் கொண்டு வரபடுவதை தவிற்கிரீர்கள். இதன் மூலம் பெட்ரோலும் அதனால் உமிழபடும் co2 வும் குறைகிறது.
9)உபயோகிக்காதபோது கணிணியை அணைத்து வையுங்கள்!
ஸ்க்ரீன் சேவெரை உபயோகிப்பதால் எந்தவித சேமிப்பும் நமக்கு கிடைப்பதில்லை. உபயோகிகாத போது அணைத்து வைப்பது நல்லது.10) விளக்கை அணையுங்கள்!
வேலை பார்க்கும் இடத்தில் மற்றும் வீட்டிலும் தேவையில்லாத விளக்குகளை கண்டிப்பாக அணைத்து வையுங்கள். பிள்ளைகளையும் அதற்கு பழக்குங்கள் :):)
இதில் குறைந்தது ஒன்றை மட்டுமாவது நாம் கடைபிடிக்க முடிந்தால், இந்த பூமிக்கு பெரிய சேவை செய்ததாக நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளலாம். சிறு துளி பெறு வெள்ளம்!!
கீழே கொடுத்திருக்கும் லின்கையும் போய் பார்க்கவும்!
http://www.earthday.org/
P.S மொழிபெயர்ப்பு கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம்.......பொறுத்துகொள்ளவும்!! நன்றி :):)
http://www.radhasriram.blogspot.com/2007/04/51.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com