கைதான இரு சிங்கள இளைஞர்கள் சுட்டுக்கொலை: ஆத்திரமடைந்த மக்களால் காவல் நிலையம் நொருக்கப்பட்டது
சிறிலங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்ட இரு சிங்கள இளஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு அவர்களின் உடலங்கள் வீதியோரத்தில் வீசப்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தை அடித்து நொருக்கியதுடன், தொடருந்துப் போக்குவரத்தையும் தடுத்து நிறுத்திய சம்பவம் சிறிலங்காவின் அங்குலானை பகுதியில் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் தென்பகுதியில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியான அங்குலானயிலேயே இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான மக்களால் கரையோர தொடருந்து சேவை சில மணி நேரத்துக்கு நிறுத்தப்பட்டது. அதேவேளையில் அங்குலானை காவல்துறை நிலையமும் பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டது.
தினேஷ் துரங்க பெர்னான்டோ, தனுஷ்கா உதயா ஆகிய இரு இளைஞர்களும் நேற்று மாலை அங்குலானை பகுியில் உள்ள பாடசாலை ஒன்றில் நின்றபோது காவல்துறயினரால் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரது பெற்றோரும் அது தொடர்பாக காவல்துறையினரிடம் கேட்டபோது இன்று காலையில் விடுவிப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்ற அதிகாலை அங்குலான காவல்துறை நிலையத்துக்கு பெற்றோர்கள் சென்றபோது கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் கல்கிசை காவல்துறை நிலையத்திடம் கையளிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் கல்கிசயை நோக்கிச் சென்றகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இருவரினது உலடங்களும். இரத்மலானை கூட்டுறவுச் சங்க விற்பனை நிலையத்துக்கு அருகிலும், லுனாவ பாலத்துக்கு அருகிலும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்தே ஆத்திரமடைந்த மக்கள் தொடருந்து சேவையையத் தடுத்ததுடன் காவல்துறை நிலையத்தையும் தாக்கியுள்ளனர். கற்கள் தடிகளுடன் வந்த ஆயிரத்தக்கும் அதிகமான மக்கள் காவல்துறை நிலையத்தை தாக்கியதால் காவல்துறை நிலையம் பலத்த சேதமடைந்தது.
மேலதிகமாக தரைப்படையினரும் காவல்துறையினரும் அழைக்கப்பட்டு அமைதி நிலைநாட்டப்பட்ட போதிலும், அப்பகுதியில் பெரும் பதற்றம் தொடர்கின்றது.
http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=323:2009-08-13-08-46-33&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com