Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Thursday, August 13, 2009

♥ தமிழன் குரலே கேட்கக் கூடாது! ♥

கே.பி.கைது! தலைவர்கள் கொலை! தமிழன் குரலே கேட்கக் கூடாது! -தொடரும் ராஜபக்சேவின் வெறியாட்டம்!



ர்வதேச போலீஸாரால் கைது செய்யப் பட்டிருப்பதாக கூறப்படும் விடுதலை புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான இயக்குனரும் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவரென தன்னைத் தானே அறிவித்துக்கொண்டவருமான கே.பி. எனப்படும் செல்வராஜாபத்மநாதனை கொழும்புக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இலங்கை புலனாய்வுத் துறையினர். இலங்கை அரசின் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான ரகசிய இடத்தில் வைத்து, இந்த விசாரணையை மேற்கொண்டிருக்கும் இலங்கை புலனாய்வுத்துறையினரால் கடுமை யான உளவியல் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார் பத்மநாதன். பத்மநாதன் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம், ஈழத் தமிழர்கள் மத்தியிலும் ஈழ ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச தொடர்புகளில் விசாரித்த போது, ""பத்மநாதன் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறுவது தவறு. அவர் கைது செய்யப்படவில்லை; கடத்தப்பட்டிருக்கிறார்'' என்கின்றனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தை சுட்டிக்காட்டும்போது, ""நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் பத்மநாதன். இதற்கான பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான திட்டமிடல்கள் நடந்து வருகிறது.

இந்த சூழலில் புலிகளின் அரசியல்துறை பொறுப் பாளராக இருந்த நடேசனின் சகோதரர் பாலேந்திரனும் நடேசனின் மகனும் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வந்தனர். பத்மநாதனை சந்திக்கும் முகமாகவே இவர்களது மலேசிய வருகை இருந்தது. அதன்படி கடந்த புதன்கிழமை மஜீத் இந்தியா பகுதியில் அமைந்துள்ள டியூன் ஹோட்டலில் நடேசனின் சகோதரரையும் மகனையும் சந்தித்து விவாதித்தார் பத்மநாதன். அந்த சந்திப்பு நடந்துகொண்டிருந்தபோதே தனக்கு வந்த ஒரு செல் தொலைபேசியின் அழைப்பை அட்டெண்ட் செய்த பத்மநாதன், அந்த அழைப்பிற்கு பதில் சொல்லும் முகமாக ஹோட்டலின் வெளிப்பகுதிக்கு வந்தார். வெளியே வந்தவர் மீண்டும் ஹோட்டலின் உள்ளே வரவில்லை. வெகு நேரம் காத்திருந்த நடேசனின் சகோதரரும் மகனும் அங்கிருந்து பதட்டத்துடன் கிளம்பிவிட்டனர்.

இந்த சூழலில் பத்மநாதன் குறித்து விசாரித்த போது, வெளியே வந்த பத்மநாதனை மலேசிய புல னாய்வுத்துறையின் உதவியுடன் இலங்கை புலனாய்வுத் துறையினர் கடத்திசென்றுள்ள தகவல் கிடைத்தது. இந்த கடத்தல் விவகாரத்தில் மலேசிய அரசின் பாதுகாப்பு மற்றும் மலேசிய புலனாய்வு துறையின் தொடர்புகளையும் இலங்கை, மலேசியாவின் கூட்டு சதியையும் மறைப்பதற்காகவே தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் பத்மநாதன் கைது செய்யப்பட்டார் என்று இலங்கை அரசால் செய்தி பரப்பப்படுகிறது. தற்போது இலங்கைக்கு கடத்தப்பட்டுள்ள பத்மநாதன் சிங்கள புலனாய்வு துறையினரால் அங்கு கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக் கிறார்'' என்று விவரிக் கின்றனர். செல்வ ராஜா பத்மநாதன் கைது செய்யப்படவில்லை, கடத் தப்பட்டிருக்கிறார் என்பதை உறுதிசெய்யும் விதத்தில் தாய்லாந்து பிரதமர் அப்சிட்வெஜ்யஜிவா, ""தாய்லாந்தில் அவர் கைது செய்யப்படவில்லை'' என்று தற் போது தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டு கின்றனர் பத்மநாதன் தரப்பினர்.

புலிகளின் வெளியுலக வர்த்தக தொடர்பு கள் அனைத்தையும் கவனித்து வந்தவர் பத்மநாதன். புலிகளின் கப்பல் வர்த்தகம், அதன் நிதிகளை கையாளுதல், புலம் பெயர்ந்த தமிழர்கள் கொடுக்கும் நிதிகள், அதன் மூலம் புலிகளுக்கான ஆயுத கொள்வனவு செய்து அதனை தமிழீழ தாயக பிரதேசத்திற்கு அனுப்புதல் என புலிகளுக்கான அனைத்துலக தொடர்புகளை கவனித்து வந்தவர் இவர்.

புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம் என்று கொக்கரித்துவருகிற ராஜபக்சே, 3 லட்சம் தமிழர்களை முள்கம்பிகளுக்கிடையே சிறை வைத்து கொடுமை செய்து வருகிறார். உணவு, உடை, மருந்து என அடிப்படை வசதிகள் எதுவு மின்றி பைத்தியமாக்கப்பட்டு வருகிறார்கள் தமிழர்கள். இதனால், அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியமற்ற தாகிவிட்ட சூழலில், தமிழர்களின் உரிமைகளை பெறும் முயற்சியில் இலங்கைக்கு வெளியே தமிழீழ அரசை அமைக்கும் முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தார் பத்மநாதன். இந்த சூழலில்தான் பத்மநாதன் இலங்கை புலனாய்வுத் துறை யினரால் கொழும்புக்கு கடத்தப்பட்டி ருக்கிறார்.

இது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினர்களிடம் பேசிய போது, ""தமிழீழ தலைவர்கள் யாரும் இலங்கையிலோ வெளிநாடுகளிலோ இருக்கக்கூடாது, அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார் ராஜபக்சே. புலிகளின் இயக்கத்தை அழித்து எறிந்து விட்டதாக ராஜபக்சே கூறி வருகிற நிலையில், பத்மநாதன் தலைமையில் புலிகள் மீண்டும் ஒருங்கிணையும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சிகளுக் கும் பல்வேறு நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் ஒருமித்த குரல் கொடுத்து வருகின்றனர். இதன்மூலம் மீண்டும் பெரிய அளவில் ஆயுத போராட்டத்தை முன்னெடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் இலங்கையிலும் வெளிநாடு களிலும் மறைமுகமாக செயல்படும் புலிகளின் தலைவர் களை கைது செய்து கொல்லப்பட வேண்டுமென்கிற முடிவை மேற்கொண்டு வருகிறார்.

போர் நடவடிக்கைகள் முடிவுக்குப் பிறகு ராஜ பக்சேவிற்கு சவாலாக இருந்து வருபவர் பத்மநாதன். நாடு கடந்த தமிழீழ அரசு உருவாவதை தடுக்கும் முயற்சியாகவும் உலக தமிழர்கள் ஒரு குடையின் கீழ் அணி திரள்வதை தடுத்து நிறுத்த வேண்டியும் பத்மநாதனை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வர இந்தியா உதவ வேண்டுமென்று இந்திய வெளியுறவு அதிகாரிகளிடம் பகிரங்கமாகவே கோரிக்கை வைத்தவர் ராஜ்பக்சே. அந்த கோரிக்கைக்கு தற்போது பலன் கிடைத் துள்ளது.

ஈழத்தமிழர்களின் செயல்பாடுகள் துளியளவும் இருக்கக்கூடாது என்பது ராஜபக்சேவின் நோக்கமாக இருக்கிறது. முகாம்களுக்கு எந்த வசதியையும் செய்து தருவதில்லை. வணங்காமண் கப்பலில் நிவாரணப் பொருட்கள் உட்பட எந்தப் பொருளையும் அனுமதிப்பதில்லை. முள் கம்பிகளுக்கிடையே சிக்கியிருக்கும் தமிழர்களில் விடுதலைப்புலிகளை அடையாளம் கண்டு அவர்களைத் தனியே பிரித்து அழித்தொழிக்கும் வேலையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது ராஜபக்சே அரசு. இதற்காக செட்டிகுளம் முகாம் உள்ளிட்ட முள்வேலி முகாம்களுக்கு 3 முறை சென்றிருக்கிறார் கருணா. இதுபோல, டக்ளஸ் தேவானந்தாவும் ஒருமுறை சென்று அடையாளம் காட்டியிருக்கிறார். இவர்களால் அடையாளம் காட்டப்பட்ட புலிப்போராளிகளையும் தலைவர்களையும் முகாமிலிருந்து பிரித்து வெவ்வேறு சிறைகளில் அடைத்துவிட்டனர்.

15 நாட்களுக்கு முன்பு, இலங்கையின் பல்வேறு சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்த புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்களான பாலகுமாரன், தங்கன் மற்றும் முக்கிய தளபதிகளான யோகி கரிகாலன், வேலன், லாரன்ஸ், சிவபாலன் உள்பட 120-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அவர்களை கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கி ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர் ராணுவத்தினர். படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை நிர்வாணமாக்கி, அந்த உடல்களை தடுப்பு முகாம்களில் வீசியெறிந்துவிட்டு போனார்கள். தற்போது இலங்கை புலனாய்வு துறையினரால் இலங்கைக்கு கடத்தி வரப்பட்டுள்ள பத்மநாத னும் கொடூரமாக கொல்லப்படலாம். ஆக தமிழீழ தலைவர்கள் என அறியப்படுகிற தலைவர்களை ரகசியமாக படுகொலை செய்து வருகிறார் ராஜ பக்சே'' என்கின்றனர்.

""சொந்த மண்ணில் நசுக்கப்பட்ட ஈழத்தமிழர் கள், வேறு மண்ணிலிருந்தும் செயல்படக் கூடாது என்பதில் வெறியோடு செயல் படுகிறார். உலகின் எந்த ஒரு நாட்டின் மூலையிலிருந்து யாரிடமிருந்தும் "தமிழ் ஈழ' ஆதரவுக் குரல் கேட்டாலும் கே.பி.பாணியில் அவர்களை கொழும்புக்கு கொண்டு வந்து நசுக்கு வதில் வெறித் தன உறுதியோடு இருக்கிறார் ராஜபக்சே'' என்கிறார்கள் கொழும்பு வட்டாரத்தினர். ""புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி, இயக்க செயல்பாடு, உலகளாவிய கவன ஈர்ப்பு ஆகியவற்றை போருக் குப்பின் ஒருங்கிணைக்கும் சக்திகளில் ஒருவராக இருந்தவர் செல்வராஜா பத்மநாதன். அவரைக் கைது செய்ததன் மூலம் புலம் பெயர்ந்த தமிழர் களின் செயல்பாடுகள் முடங்கி விடும் என நினைக்கிறார் ராஜபக்சே. அதற்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவி யையும் கோருகிறார். தங்கள் பூர்வீக மண்ணான தமிழீழத்தில் ஒரு ஈழத்தமிழன்கூட உயிருடன் இருக்கக்கூடாது என்பதுதான் ராஜபக்சே அரசின் திட்டம். இத்தகை கொலைவெறிமிக்க அரசாங்கம் எந்த நாட்டிலும் இருக்காது'' என்கிறார்கள்.

பொருத்தமான சூழ் நிலையை எதிர்பார்த்து பதுங்கி யிருக்கும் புலிகள் தரப்போ, புதிய பயிற்சியில் தீவிரமாக இருக் கிறது.

""ஆயுத பலத்தில் இப்போது நாங்கள் பலவீனமாக இருக்கலாம். ஆனால் விடுதலை உணர்வில் மாபெரும் பலத்துடன் இருக்கிறோம். தலைவர் பிரபாகரனின் கட்டளைப்படி உரிய நேரத்தில் எங்கள் பலத்தைக் காட்டுவோம்'' என புலம் பெயர்ந்து வாழும் தமிழர் களுக்கு நம்பிக்கையான செய்தியை அனுப்பியிருப்பதாக காடுகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-கொழும்பிலிருந்து எழில்




எம் தலைவர் பிரபாகரன் சாகவில்லை-காணொளி பாடல்

http://www.youtube.com/watch?v=REA5Ji-EPv4




No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!