போர்ச் செய்திகள் இன்றித் திணறும் கொழும்பு சிங்கள, ஆங்கில ஊடகங்கள் |
![]() |
![]() |
இது தொடர்பாக 'இன்ரர் பிறஸ் சேவை'க்காக பைசல் சமத் என்பவர் எழுதியுள்ள கட்டுரையின் முக்கிய விபரங்கள் வருமாறு : கடந்த 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக போர்ச் செய்திகளுக்கும் அரச படைகளின் வெற்றிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிட்டு வந்த இந்த ஊடகங்கள், போர் இவ்வாறு திடீரென முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் போர்ச் செய்திகளில் இருந்து ஏனைய செய்திகளுக்கு மாறுவதற்கான தயார் நிலை எதுவும் இன்றியே அவை இருந்தன. திடீரென போர் முடிவுக்கு வந்து படையினரின் வெற்றி ஆரவாரங்களும் ஓய்ந்துவிட்ட நிலையில் எதைச் செய்தியாகப் போடுவது என்று சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் திணறி வருகின்றன. இதனாலேயே கடந்த சில வாரங்களாக, கிழக்கில் முஸ்லிம்களுக்கு இடையிலான பிணக்குகளும் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட யானைக் குட்டிகளும் இந்த ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்திருந்தன. "நாங்கள் எதனைச் செய்தியாக்குவது? இதுதான் இன்று எமது ஊடகவியலாளர்கள் கேட்கும் கேள்வி" என்றார் ஆரியநந்த டொம்பஹகவத்த. சிறிலங்காவில் அதிகளவில் விற்பனையாகும் 'லங்காதீப' சிங்கள நாளேட்டின் ஆசிரியர் அவர். "விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று யார் நினைத்தார்கள்? பிரபாகரன் கொல்லப்படுவார் என்று யார் எண்ணியிருந்தார்கள்? யாருமே இத்தகைய நிலைக்காக தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கவில்லை. குறிப்பாக ஊடகவியலாளர்களான நாங்கள் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கவில்லை" என்றார் அவர். ஏற்கனவே படைத்துறைப் பத்திகளை எழுதி வந்தவர்கள் தொடர்ந்தும் அது பற்றி எழுதி வருகிறார்கள். ஆனால் போர் எப்படி வெல்லப்பட்டது என்பது குறித்தும் படை அதிகாரிகள் மத்தியில் ஏற்படும் மாற்றங்கள் பிணக்குகள் குறித்துமே அப்பத்திகளில் எழுதப்படுகின்றன. இவை இப்போது மக்களுக்கு ஆர்வம் உள்ளவைகளாகத் தெரியவில்லை. "ஒரே இரவில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது. அதனால் போர் எப்படி வெல்லப்பட்டது என்பது போன்ற சில்லறைத்தனமான விடயங்களை நாம் இன்னும் சில மாதங்களுக்கு எழுதியபடி இருப்பது தவிர்க்க முடியாதது. மற்றொரு விடயத்தை நோக்கி மாறிச் செல்லும் வரை இது தொடரத்தான் செய்யும். உடனடியாக நீங்கள் மாறிவிட முடியாது. ஏனெனில் கடந்த பல வருடங்களாக நாங்கள் இத்தகைய ஒரு பாரம்பரியத்தைத்தான் பின்பற்றி வந்துள்ளோம். இதனை திடீரென நிறுத்துவது என்பது, ஒரு மனிதன் தண்ணீர் குடிப்பதை திடீரென நிறுத்துவதற்கு ஒப்பானது" என்று விளக்கமளிக்கிறார் ஆரியநந்த டொம்பஹகவத்த. "ஊடகவியலாளர்கள் தமது நம்பிக்கைகளுடனும் தமக்கு முன்னுள்ள மிகப் பெரிய சவால்களுடனும் இப்போது சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். விவாதங்கள் போரில் இருந்து நாட்டின் மறுசீரமைப்பு, கல்வி, அகதிகள், இன உணர்வுகள், போக்குவரத்து, நாடாளுமன்றம், தேர்தல் நடைமுறைகள், நீதித்துறை என்பவற்றினை நோக்கித் திரும்பி இருக்கின்றன. ஆனால் இதில் உள்ள முக்கியமான சவால் என்னவென்றால், இந்த விடயங்கள் தொடர்பில் செய்திகளை வெளியிட ஊடகவியலாளர்கள் அதிகளவில் படிக்க வேண்டும், பெருமளவு விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும், ஒவ்வொன்றையும் அலசி ஆராய வேண்டும். இவை எல்லாம் மிகக் கடினமானவை. அதிலும் ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி செய்தி பெறும் முன்னைய நடைமுறையுடன் ஒப்பிடும்போது மிகமிகக் கடினமானவை" என்றார் 'ராவய' சிங்கள வார ஏட்டின் ஆசிரியர் விக்டர் ஐவன். http://www.tamilwin.com/view.php?2aSWnVe0dRj060ecGG7r3b4N9E84d3g2h3cc2DpY3d426QV3b02ZLu2e ![]() |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com