விடுதலை புலிகளின் கரும்புலிகளின் படையணி கொழும்பில்
தலைநகர் கொழும்பில் இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளிகளின் பிரசன்னம் காணப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட போராட்டத்தின் கோது தலைநகர் கொழும்பிற்குள் 26 தற்கொலைதாரிகள் ஊடுறுவியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு ஊடுறுவிய 26 தற்கொலைப் பேராளிகளில் நான்கு பேர் மட்டுமே இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபாகரனின் மரணம் காரணமாக, கொழும்பிற்குள் ஊடுறுவிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போது மன ரீதியாக பாதிக்கப்படடுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், தற்கொலைப் பேராளிகளை இனங்கண்டு அவர்ளை கைது செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கென விசேட காவல்துறை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச வலையமைப்பிலிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்படக் கூடும் என பாதுகாப்பு தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
Www.eeladhesam.coM
புலிகளின் குரல் - "வரலாறு திரும்பும்"
| |
தொண்ணூறாம் ஆண்டுப் பகுதி, அப்பவெல்லாம் ஆல் இந்தியா ரேடியோவும், இன்னொரு பக்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமுமாக மட்டுமே செவிக்குணவு கிடைத்தது. அதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சொல்லவே வேண்டாம். மத்தியானம் பிளேனால் குண்டு போட்டு அதில் செத்துப் போன கிழவர்களையும், குழந்தைகளையும் மாலைச் செய்தியில் புலிகளின் லெப்டினெண்ட் கேர்னல் தரத்துக்கு பதவி உயர்த்திப் பட்டியலிட்டுப் பயங்கரவாதிகள் ஆக்கிச் செய்தி படிக்கும். இது போதாதென்று "மக்களின் குரல்" என்ற மகா மட்டமான வானொலித் தயாரிப்பொன்றை வழங்கித் தன் தலையில் மண்ணள்ளிப் போடும்.
இந்த நேரம் முளைத்தது தான் புலிகளின் குரல். ஆரம்பத்தில் இரவு எட்டு மணியில் இருந்து ஒன்பது மணி வரை மட்டுமே தன் இருப்பை வைத்திருந்தது. பிரேமதாசா அரசின் தேனிலவுக்காலத்தில் வாங்கி வைத்து கொஞ்சக் காலம் ஒப்பேற்றிய பற்றறிகளும் தீர்ந்து விட எமக்குக் கிடைத்த அடுத்த மின்சக்தி உபகரணம் கார் பற்றறிகள், அதுவும் எல்லா இடமும் தீர்ந்து விட, அடுத்து வந்தது சைக்கிள் டைனமோ. சைக்கிளைத் தலைகீழாகக் குத்தி விட்டு ஒருவர் சைக்கிள் பெடலைச் சுழற்ற டயரில் மோதும் டைனமோ பிறப்பிக்கும் மின்சாரம் வயர் வழியே பாய்ந்து வானொலியை உயிர்ப்பிக்கும்.
அந்த இரவு நேரங்களின் நிசப்தத்தைக் கலைத்து எல்லா வீடுகளிலும் இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணி வரை புலிகளின் குரல் பாயும். அந்த ஒரு மணி நேரத்தில் ஒவ்வொரு நிமிடத்துளிகளையும் போராளிகளின் வீரச்சாவு, களம் கண்ட கதைகள், குறு நாடகங்கள் , செய்திகள், தாயக எழுச்சிப்பாடல்கள் விபரணச் சித்திரங்களாகச் செதுக்கித் தந்தது இந்த வானொலி. அது தவிர மாவீரர் வாரம் போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது நேர நீடிப்புச் செய்து பகல் வேளைகளிலும் தன் ஒலிபரப்பை அது தரும். புலிகளின் குரல் வானொலிப் பணிமனை
யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்டிலும், தட்டாதெருச் சந்தியிலும் என்று முக்கியமான கேந்திரங்களில் பெரும் ஒலிபெருக்கி பொருத்தி இந்த வானொலி தன் ஒலிபரப்பை எல்லோருக்கும் காற்றலையில் தவழ விடும்.
புலிகளின் குரல் வானொலிக் கலையகத்தினுள்
சந்தனக்காடு போன்ற பல பிரபலமான நாடகங்களைப் பிரசவித்துப் பின்னர் இந்த நாடகம் வெளிநாடுகளில் வேறு ஆட்களால் மேடையேற்றிப் போடும் அளவுக்குப் பிரபலத்தை உருவாக்கியது இந்த வானொலி நிகழ்ச்சிகளின் தரம். புலிகளின் குரல் வானொலியில் இடம்பெற்ற பாடல்களை ஒலிப்பதிவு செய்து பின்னர் வவுனியாவில் பெடியளோடு குருமன்காட்டில் கொஞ்ச நாள் இருந்த போது கேட்ட நினைவுகள் நேற்று போல இருக்கிறது. வவுனியாவிலும் ஒலிபரப்பு வருகுதாம் என்று களவாக மீட்டர் பிடிச்ச 93 ஆம் ஆண்டும் சாகும் வரை மறக்கமுடியாது. புலிகளின் குரல் வானொலியின் பரிமாணம் எத்தகையது என்பதை எனது தாயக வாழ்வியலுக்குப் பின் அதிக காலம் இருந்த சக நண்பர்கள் நிறையவே சொல்லுவார்கள்.
என்னதான் யதார்த்தம் பேசினாலும் அற்ப மனம் விடாது இல்லையா, அடிக்கடி புலிகளின் குரல் தளத்துக்குப் போய்ப் பார்க்கும் அவா விடாது போல. ஆனால் அதுவோ மே ஒன்பதாம் திகதிக்குப் பின்னர் அழுக்குடையோடு மெளனமாய் நிற்கிறதே :(
எங்கோ பிறந்து, சுற்றிச் சுழன்று நானும் வானொலிப் பணிக்கு வரவேண்டும் என்ற தலையெழுத்தின் நிமித்தம் 11 ஆண்டுகளைக் கழித்து விட்டாயிற்று. இந்த இடைப்பட்ட காலத்தில் நான்கு வருஷங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் புலிகளின் குரல் வானொலி நாடகங்கள் இரண்டு. அதில் " வரலாறு காத்திருக்கும்" என்ற நாடகத்தை ஒலிப்பேழையில் இருந்து கணினிக்கு மாற்றி உங்களோடு பகிர்கின்றேன். அந்த ஒலிப்பேழையில் குறுகலாகத் தன் பேனா எழுத்துக்களில் நிரப்பியவரும் சரி, இந்த நாடகத்தில் பங்கு கொண்டவர்களும் சரி இன்னும் இருக்கிறார்களா, மீண்டும் வருவார்களா எதுவும் தெரியாத நிலையில்
நாடகத்தை எழுதியவர்: போராளி தமிழ்க்கவி
நாடகத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள்
மூதாட்டி: வனஜா
கமலம்: கலையரசி
சிறுவயது சேய் - டிலானி
மதன் - கண்ணன்
செந்தூரன் - ரதன்
வளர்த்த சேய் - விதிகுகன்
நிகழ்ச்சித் தயாரிப்பு
க.சிவராசா
கப்டன் துஷான்
போராளி ஜீவகன்
கலையரசி
"வரலாறு திரும்பும்" நாடகத்தைக் கேட்க
கடந்த நவம்பர் 2008 இல் புலிகளின் குரல் பணிமனை அழிக்கப்பட்ட போது
புலிகளின் குரல் வானொலிப் பணிமனை, வானொலிக் கூடம் படங்களைப் பிரத்தியோக ஆல்பத்தில் இருந்து தந்துதவிய நண்பர் சயந்தனுக்கு நன்றி.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com