![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZIuOvrrsuz0hr5yL4ZFT7sOaLTxMSsJsTeoroKJs-aiWGmHDtCknaW7n6y4_UlXRWahGVPiZKVXl2UICvrTesJU6SzcvlbEvEufgGPgYxj919G5dBueexlonBPHLhgm586Iz43wUbqKc/s400/odumnathi.bmp)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGVHlPVKrqh2ULK5GB1USZfLtyCmvkh-TDWV6eWsawkHJmThGyPMHKc8Ea_jgW7iSbgecBIEXCX7-0RshT1dq9hI0iX2235OEiMw3q8M9gfZTzJRWuW-fM8lyuWIOvWUoaiBsmo0kNcmQ/s400/dina_logo.jpg)
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு: சர்வஜன வாக்குரிமைச் சட்டம் - 16
![](http://dinamani.com/Images/article/2009/6/15/srilank.jpg)
ஆரம்பத்தில் சிங்கள மற்றும் தமிழ் மேட்டுக்குடியினர் கூட்டாக இருந்தே இந்திய வம்சாவளியினருக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தியர் மூலதன ஆதிக்க எதிர்ப்பிலும், இந்திய நிர்வாகிகளை வெளியேற்றுவதிலும் அவர்கள் தீவிரம் காட்டினர்.
நகர்ப்புறத்துத் தமிழ்த் தொழிலாளர்களை நகர்ப்புற நிறுவனங்களில் இருந்து வெளியேற்றுவதில் இவர்கள் ஆர்வம் காட்டினார்களே தவிரத் தோட்டத் தொழிலாளர்களை அல்ல. காரணம், சிங்கள - தமிழ் தோட்ட அதிபர்கள் தோட்டத் தொழிலாளர் வெளியேற்றத்தை விரும்பவில்லை என்பதுதான். அவர்கள் வெளியேற்றப்பட்டால் குறைந்த கூலிக்குத் தோட்டத் தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதும் காரணம்.
இதை ஒரு நிகழ்ச்சியின் மூலம் தெளிவாக உணரலாம். தொழிலாளர் இறக்குமதிக்கு உரிமம் வழங்குவதை நிறுத்தும் பிரேரணையை பெரேரா (Perera) பாராளுமன்றத்தில் கொண்டு வந்தபோது அதைத் தோல்வி அடையச் செய்தனர். ஆனால் அதே நேரத்தில் இவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் அரசியல் அரங்கில் நுழைவதற்கும் தடைகளை உருவாக்கினார்கள். 1920-இல் சட்ட நிறுவன சபைக்கு இந்திய வம்சாவளிப் பிரதிநிதிகள் தேர்வு ஆவதை இவர்கள் எதிர்த்தனர். 1929-இல் சர்வஜன வாக்குரிமை (டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசு) வழங்க முன்வந்த ஆணையினையும் எதிர்த்தனர். அதன் உச்சகட்டமாக 1947 பொதுத் தேர்தலில் ஏழு இந்திய வம்சாவளிப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொழிலாளர் மத்தியில் உள்ள செல்வாக்கின் பலத்தால் 17 இடதுசாரி உறுப்பினர்களும் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
பாராளுமன்றத்தில் இடதுசாரிகள் கை ஓங்குவதும் இந்திய வம்சாவளிப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகமாவதும் அவர்களுக்கு அச்சத்தை ஊட்டியது. அரசியல் அரங்கில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பங்கேற்பதை அவர்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது.
தொடர்ந்து இந்திய வம்சாவளியினரை வெளியேற்றும் கோஷம் தீவிரமானது என்பது மட்டுமல்ல, அதனால் அறிவு ஜீவிகளும், மத்தியதர வகுப்பினரும் பாதிப்பு அடைந்தனர். உதாரணமாக~போக்குவரத்து அமைச்சர் எட்டாயிரம் இந்தியர்களுக்கு வேலைநீக்க நோட்டீஸ் அனுப்பினார். (ஆதாரம்: இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சரித்திரம்-இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் கருத்தரங்கக் கட்டுரை).
இந்த இனவாதச் செயல்பாட்டின் விளைவாக முதன் முதலில் 1931-ஆம் ஆண்டு சர்வ ஜன வாக்குரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதில் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டனர். இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுகையில், யாழ் பகுதியில் இருக்கும் இடதுசாரி இளைஞர் இயக்கம் முதன் முதலில் ஒரு போராட்டத்தை நடத்தியது.
இதன் தலைமையில் யாழ் பகுதியில் தேர்தல் நிராகரிப்பு இயக்கம் தீவிரமாக உருவானது.
ஆனால் அதே நேரத்தில் அந்தத் தேர்தலில் மலையக மக்கள் பங்கேற்றனர். ஏனெனில், அதுவரை புறக்கணிக்கப்பட்டிருந்த மலையக மக்களுக்கு முதன் முதலாக ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
ஒரு லட்சம் மலையக மக்கள் வாக்குரிமை பெற்றனர். நடேசய்யர், பெரியசுந்தரம், வைத்திலிங்கன் ஆகியோர் வெற்றி பெற்றனர். பெரியசுந்தரம் தொழில் அமைச்சர் ஆனார்.
இலங்கையின் பிரபலமான அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும்
1. லங்கா சமசமாஜக் கட்சி (L S) (S P))–1935 இடதுசாரி - என்.எம். பெரேரா
2. கம்யூனிஸ்ட் பார்ட்டி (CP)~1942 இடதுசாரி - பீட்டர் கெனமன்.
3. ஐக்கிய தேசியக் கட்சி (U N P) 1947 வலதுசாரி - டி.எஸ். சேனநாயக்கா.
4. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்~1944, 1947 - ஜி.ஜி. பொன்னம்பலம்.
5. மக்கள் ஐக்கிய முன்னணி~1956 - இடதுசாரி -பிலிப் குணவர்த்தனா.
6. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி~(S L F P)-1951- நடுநிலைக்கட்சி - வலதுசார்பு - எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டார நாயக்கா.
7. தமிழரசுக் கட்சி~(சமஷ்டிக் கட்சி) (F.P) - 1953 - சா.ஜே.வே. செல்வநாயகம்.
8. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்~(C W C)~ 1950 - செü. தொண்டமான்.
9. நவலங்க சமசமாஜக் கட்சி~(NLSSP)~1968-இடதுசாரி~வாசுதேவ நாணயக்காரா.
10. ஜனதா விமுக்தி பெரமுன (JVP) (மக்கள் விடுதலை முன்னணி) - 1971-இடதுசாரி~உரோகண விஜய வீரா.
11. தமிழர் விடுதலைக் கூட்டணி~(TULF)~1972- வலதுசாரி - சா.ஜே.வே. செல்வநாயகம்.
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=74545&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com