இலங்கை அரசின் வெற்றிக்கு பாக்கிஸ்தான் விமானிகளே காரணம் என அந்நாட்டு பத்திரிகை தெரிவிக்கிறது
இலங்கையிடம் உள்ள மிக் 27 ,கிபீர் விமானங்கள் எப் 7 ,மற்றும் MI-24 உலங்கு வானூர்திகள் என்பனவற்றில் பெரும்பாண்மையான விமானங்களை தமது விமானிகளே செலுத்தியதாக தற்போது பாக்கிஸ்தான் பத்திரிகை கூறியிருப்பது இலங்கை அரசை பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இருப்பினும் இந்த தகவலில் எது வித உண்மையும் இல்லை என இலங்கை விமானப்படையின் தளபதி மார்ஷல் ரோசான் குணதிலக மறுத்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தமது விமானப்படையில்
நன்கு பயிற்சி பெற்ற பல விமானிகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.இருப்பினும் தம்மிடம் இருந்து பெற்றுக்கொண்ட 22 அல் காலீட் கவச வாகனங்கள் மூலமே இலங்கை இராணுவம் வெற்றிகரமாக முன்னேறியது என்றும் அந்த நாழிதளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.அதனையும் மறுத்திருக்கும் உதயநாணயக்கார, தாம் செக் குடியரசின் தயாரிப்பான T- 55 வகையான கவசவாகனங்களை பாவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தானில் உள்நாட்டுப் பிரச்சனை , மதப்பிரச்சனை, மற்றும் தீவீரவாதம் தலைதூக்கி ஆடும் இந்த காலகட்டத்தில், இலங்கையில் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டது பாக்கிஸ்தானின் உதவியால் தான் என்ற் செய்திகள் பரவலாக அடிபடுகின்றன, இச் செய்தி பல நாழிதளில் வெளிவந்தவண்ணம் உள்ளது, பெரும் சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது.
http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3600:2009-06-01-08-54-57&catid=35:2008-09-21-04-32-20&Itemid=53
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com