கருணாநிதி எங்களை நம்பினார்!' - ராஜபக்சே வீடியோ பேட்டி
வாக் தி டாக் என்று ஒரு நிகழ்ச்சி… என்டிடிவியில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் எடிட்டராக உள்ள சேகர் குப்தா இதை நடத்துகிறார்.
இந்த நிகழ்ச்சிக்காக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை அவர் நேற்று கொழும்புவில் பேட்டியெடுத்துள்ளார். நேற்று முழுவதும் என்டிடிவியில் அதைத்தான் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.
ஒரு குறைந்தபட்ச குற்ற உணர்வு கூட இல்லாமல், ராஜபக்சேவின் ஊதுகுழலாக மாறி சேகர் குப்தா கேள்வி கேட்பதையும், பல நேரங்களில் ராஜபக்சேவுக்கே எடுத்துக் கொடுப்பதையும் இதில் காணலாம். தமிழர்கள் மீது வட இந்தியர்களுக்கு இருக்கும் விரோத மனப்பான்மைக்கு இந்த நேர்காணல் நிகழ்ச்சி இன்னும் ஒரு உதாரணம்.
தேர்தலுக்காக தமிழகத் தலைவர்கள்தான் ஸ்டன்ட் அடிப்பதைப் போலவும், இந்த வடக்கத்திக்காரர்கள் ரொம்பத்தான் யோக்கிய சிகாமணிகள் என்பது போலவும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கருத்துருவாக்க முயன்று வருவதைப் பார்த்திருப்பீர்கள். ராஜபக்சேயுடனான பேட்டியிலும் அந்த தொனி சேகர் குப்தாவிடம் வெளிப்பட்டதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
ராஜபக்சேவுக்கு பிடித்த மாதிரி கேள்விகள் கேட்டு, அவரது கருத்துக்களைப் பரப்பும் ஒரு முயற்சியாக… தமிழர்களின் ஹீரோவாக ராஜபக்சேவை சித்தரிக்கும் முயற்சி போலவே இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.
"பிரபாகரன் தமிழர் பகுதிகளை மட்டும் ஆளவேண்டும் என விரும்பவில்லை… ஒட்டு மொத்த இலங்கையையும் பிடிக்க நினைத்தார்", என்கிறார் ராஜபக்சே.
பிரபாகரன் 'மரணம்' குறித்த செய்தி தனக்கு 19-ம் தேதிதான் தெரியும் என்றும், இந்தியத் தேர்தலுக்காக தமிழர் அழிப்பு வேலையை தள்ளிப் போடவில்லை என்றும், உண்மையில் இந்த வெற்றியை இந்தியத் தேர்தலுக்கு முன் நாங்கள் பெற்றிருந்தால் இந்தியத் தேர்தலில் காங்கிரஸ் இன்னும் அமோக வெற்றி பெற்றிருக்கும் என்றும் அவர் கூறினார்.
பிரபாகரன் விஷயத்தில் இந்தியத் தமிழர்கள் பெரிதாக அக்கறை காட்டவில்லை என்றும், அவர் 'மரணம்' முன்பே அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஒரு பாதிப்பும் தமிழ்நாட்டில் வந்திருக்காது என்றும் உறுதியாகக் கூறினார் ராஜபக்சே.
பிரபாகரனைக் 'கொல்வது' குறித்து இந்தியாவுக்கும் தனக்கும் பேச்சுவராத்தைகள் நடந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார் ராஜபக்சே.
தமிழக விவகாரங்கள் குறித்துக் கேட்டபோது,ஜெயலலிதாவுக்கு மக்கள் பதில் சொல்லி விட்டார்கள் என்ற ராஜபக்சே, தமிழக முதல்வர் கருணாநிதி தன் நண்பர்; தனது விருந்தாளியாக அவர் இலங்கைக்கு நிச்சயம் வரவேண்டும் என்றும் அவர் இந்த நிகழ்ச்சியில் கேட்டுக் கொண்டார். ஜெயலலிதாவும் கூட இலங்கைக்கு வரலாம் என்றார் ராஜபக்சே.
வைகோவைப் பற்றி பேசும்போது, அவர் இலங்கைக்கு பாஸ்போர்ட்-விசா இல்லாமல் வந்ததைப் பற்றிக் குறிப்பிட்டார். உடனே, இந்தக் குற்றத்துக்காக அவரை கைது செய்வீர்களா என சேகர் குப்தா கேட்கிறார்.
"அவர் தேர்தலில் தோற்றுவிட்டார் அல்லவா… அப்புறமென்ன… நான் அதை மறந்து மன்னித்துவிட்டேன்!", என்கிறார் ராஜபக்சே.
அட கொடுமையே…
குறிப்பு: இந்தப் பேட்டியைப் பார்ப்பவர்களுக்கு ராஜபக்சேயின் 'ஆங்கில அறிவு' தெளிவாகப் புரியும். அவர் சொல்ல நினைப்பதும், அதற்கு அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் முரண்படுவதைக் காணலாம். நாம் இதைக் குறிப்பிட்டு கிண்டலடிக்க வேண்டாம் என்பதாலேயே அதை செய்தியில் குறிப்பிடவில்லை.
பிரபாகரன் செய்த பெரிய தவறு என்ன என்ற கேள்விக்கு ராஜபக்சே முதலில் தரும் பதிலைக் கவனித்து அதற்கு தமிழர்த்தம் சொல்லுங்கள்!
http://www.youtube.com/watch?v=pTpZXXHtW6g
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com