இலங்கையில் போர் நடந்த பகுதிக்கு பன்னாட்டு சமூகத்தை அனுமதிக்க வேண்டும்: அமெரிக்கா
இலங்கையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிக்கு சர்வதேச சமூகத்தை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இயன் கெல்லி, இலங்கையின் வடபகுதியில் நடந்த போரின் இறுதி கட்டத்திலும் அதற்குப் பிறகும் அங்கு என்ன நடந்தது என்பது குறித்த துல்லியமான விவரங்களை பன்னாட்டு சமூகம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம் என்று கூறியுள்ளார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=9161
பிரபாகரனின் பெற்றோருக்கு சிங்கள அரசு விதித்திருக்கும் தடை!
பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை (76), தாயார் பார்வதி வேலுப்பிள்ளை ஆகியோர் வவுனியாவில் அரசு நடத்தும் அகதிகள் முகாமில் தனியாக தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை இதர உறவினர்களுடன் சேர அனுமதிப்பதில்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதைத் தெரிவித்த ராணுவத்தின் பத்திரிகைத் தொடர்பாளர் உதய நாணயக்கார, அவர்களுடைய பாதுகாப்பு கருதியே இப்படி தனியாக பிரித்து வைக்கப்படுகின்றனர் என்று கொழும்பில் தெரிவித்துள்ளார்.
அகதிகள் முகாமில் உள்ள முதியவர்கள் முதுமையாலும் பல்வேறு வியாதிகளாலும் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு உதவிகள் செய்யும் அளவுக்கு முகாம்களில் மருத்துவ வசதிகள் இல்லை. எனவே அவர்களை அவரவர் மகன், மகள், இதர உறவினர்களுடன் சேர்ந்து தங்க அனுமதிப்பது என்று அரசு முடிவு செய்திருக்கிறது.
ஆனால் பிரபாகரனின் பெற்றோர் மட்டும் பிற உறவினர்களுடன் சேர முடியாமல் தனித்து வைத்தே பராமரிக்கப்படுவர் என்று தெரிகிறது.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=9233
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com