இலங்கை இறுதி கட்ட போரில் 20 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொலை: இங்கிலாந்து பத்திரிகை தகவல்

லண்டன், மே. 29-
இலங்கையில் இறுதி கட்ட போரில் மட்டும் 50 ஆயிரம் தமிழர்களுக்கு மேல் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இலங்கை அரசு இதுபற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை. ஐ.நா. சபை சேகரித்த தகவல்படி 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் "தி டைம்ஸ்" என்ற பத்திரிகை தங்களுக்கு கிடைத்த பல்வேறு தகவல்களை ஆய்வு செய்தும், போர் நடந்த இடங்களை செயற்கை கோள் மூலம் எடுத்த படங்களின் அடிப்படையிலும் ஆய்வு நடத்தி ஒரு தகவலை வெளியிட்டு உள்ளது.
அதில் இறுதிக்கட்ட போரில் மட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
ஐ.நா.சபை சொல்வதை விட 3 மடங்கு அளவு அதிகமாக உள்ளதாகவும் அந்த பத்திரிகை கூறி உள்ளது. இந்த படுகொலையை போஸ்னியாவில் 1995-ம் ஆண்டு ஒரே நேரத்தில் 8 ஆயிரம் பேர் கொல்லப்பட்டது, சூடான் நாட்டில் 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டது போன்ற படுகொலைகளோடு ஒப்பிட்டு உள்ளது.
உலகில் நடந்த மோசமான படுகொலைகளில் இலங்கை படுகொலையும் ஒன்று என்று அந்த பத்திரிகை வர்ணித்து உள்ளது.
http://www.maalaimalar.com/2009/05/29144356/CNI0520290509.html
http://www.maalaimalar.com/2009/05/29144356/CNI0520290509.html





























No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com