மக்களைக் காப்பாற்ற நாம் எதையும் செய்ய தயார் - அமெரிக்காவிற்கு விடுதலைப் புலிகள் அழைப்பு
வன்னியின் நிலமையானது மிகப்பெரிய ஒரு மனிதப் பேரவலம் என்றும், இக்கட்டத்தில் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட இவ் இரக்கமில்லாத யுத்தத்துக்குள் சிக்கிக் கொண்ட மக்களைக் காப்பாற்ற தாம் எதையும் செய்ய தயார் எனவும், விடுதலைப் புலிகளின் வெளிவிகாரப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கூறியுள்ளார்.
தாம் ஓபாமாவின் அழைப்புக்கு மதிப்பு கொடுத்து எமது மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கு தயாராக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுளார்.
இரக்கமும் கண்ணியமும் இல்லாமல் குறிவைக்கப்படும் அப்பாவி மக்களைக் காப்பாற்றும் முழுப்பொறுப்பை சரவதேசச் சமுதாயமானது நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இப்பொழுது எடுக்க வேண்டும் என்றும் பத்மநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ஓபாமாவின் நம்பிக்கைச் சொற்கள் தமக்கு ஊக்கமளிப்பதால் இவ் இனப்பிரச்சினைக்கு அர்த்தமுடைய ஒரு தீர்வு காணுவதற்கு, நடுநிலையான சர்வதேசக் கட்சிகள் முன்னெடுக்கக்கூடிய ஒரு அரசியல் நடைமுறைக்குள் நுழையும் நிலையில் தாம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஓபாமா கேட்டுக்கொண்டதுபோல் சமாதானத் தீர்வுக்காக தாம் ஒத்துழைக்கவும் சேர்ந்து வேலை செய்யவும் தயார் என்றும் பத்மநாதன் மேலும் குறிப்பிட்டுளார்.
http://www.meenagam.org/?p=3594
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com