'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'
-பாவேந்தர் பாரதிதாசன்
|
தமிழகமே இழவு வீடாகி விட்டது; இங்கு வந்து பாயாசம் கேட்கிறார் சோனியா: பாரதிராஜா பாய்ச்சல்; கறுப்புக்கொடி காட்டிய பாரதிராஜா உட்பட 250 பேர் கைது |
|
|
இலங்கையில் நடைபெற்று வரும் போரால் தமிழகமே இழவு வீடாகியுள்ளது. இங்கு வந்து பாயாசம் கேட்கிறார் சோனியா காந்தி. இலங்கையில் போரை நிறுத்தா விட்டால், இனி அவரால் தமிழகத்திற்குள் நுழையவே முடியாது என்று நேற்று சென்னையில் நடந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின்போது இயக்குநர் பாரதிராஜா ஆவேசமாக கூறியுள்ளார்.
|
அவர் தொடர்ந்து பேசியதாவது:- ஒரு நரியின் குணத்துடன் தமிழ் இனத்தை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்பதற்காக இலங்கையில் சோனியா காந்திதான் போரை நடத்திக்கொண்டிருக்கிறார். இலட்சக்கணக்கான தமிழர்கள் அங்கு கொன்று குவிக்கப்படுகின்றனர்.
இலட்சக்கணக்கான பெண்கள் தாலியை இழக்கின்றனர். ஹிட்லர் காலத்தில் நடந்ததைவிட மிக மோசமான இனப்படுகொலை இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமையை உலகமே தட்டிக் கேட்கிறது. ஆனால் இலங்கைத் தமிழர்களின் ஒப்பாரி ஓலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்றுவரை கேட்கவில்லை.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்காக சோனியா காந்தி இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இலங்கையில் போரை நடத்துவதே சோனியா காந்தி என்பதால்தான் அவர் தமிழர்களின் சாவுக்கு இரங்கல் தெரிவிக்க மறுக்கிறார்.
இலங்கைத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் சோனியாவைக் கண்டித்து நாங்கள் ஜனநாயக வழியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துகிறோம். ஆனால், சோனியா காந்தியோ கொல்லைப்புறம் வழியாக ஹெலிகாப்டர் மூலம் தீவுத்திடலுக்குச் செல்கிறார். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. இலங்கையில் மீதமுள்ள தமிழர்களைப் பாதுகாப்பதற்காக அங்கு உடனடியாகப் போர்நிறுத்தம் செய்ய சோனியா நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர் இனி எக்காலத்திற்கும் தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைக்க முடியாது.
இலங்கையில் நடைபெற்று வரும் போரால் தமிழகம் இழவு வீடாக மாறிவிட்டது. ஆனால் இங்கு பாயாசம் கேட்பதற்காக சோனியா காந்தி வருகிறார். அவர் உடனடியாகத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று அவர் ஆவேசமாக கூறினார். சோனியாவுக்கு கறுப்புக்கொடி காட்டிய டைரக்டர் பாரதிராஜா உட்பட 250 பேர் கைது இதேவேளை, "இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காணாத சோனியாவே திரும்பி போ' என்ற முழகத்துடன், தமிழ் உணர்வு அமைப்பாளர்கள் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சைதாப்பேட்டை பனகல் கட்டிடம் அருகே நடந்த கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில், டைரக்டர் பாரதிராஜா, பழ.நெடுமாறன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர். மெமோரியல் அரங்கம் அருகே, கொளத்தூரைச் சேர்ந்த பெண்கள் அமைப்பினர், சோனியா வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவங்களில் மொத்தம் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.பின் அவர்கள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ![](http://www.tamilwin.com/photos/full/2009/05/02.jpg) ![](http://www.tamilwin.com/photos/full/2009/05/04.jpg)
http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dHj0g0ecGG7N3b4j9EY4d3g2h2cc2DpY2d426QV3b02ZLu2e#
|
முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com