வன்னியில் தற்பொழுது மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், கடற்கரை மணலில் பதுங்ககழிகளில் தஞ்சம் கோர முடியாத நிலை அந்த மக்களுக்கு ஏற்பட்டிருப்பதுடன், அவ்வாறு தண்ணீருக்குள் தஞ்சம் கோருபவர்களும் மருந்துகள் அற்ற நிலையில் தொற்றுநோய் அபாயங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது.
இதேவேளை, இதுவரை நாட்களும் ஒருவேளைக் கஞ்சியைக் குடித்து தம் உயிர்வாழ்வை காப்பாற்றி வந்த மக்கள் தற்பொழுது அதுகூட இல்லாது தவிட்டில் தண்ணீரை ஊற்றிக் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆலைகளில் உள்ள உமியை எடுத்து, அதில் உள்ள குறுனி அரிசியையும், தவிட்டையும் தவர்த்தி எடுத்து அதனை உணவாகவும், தென்னை, பனை குருத்துக்களை எடுத்து அதனை உணவாகவும் உட்கொள்ளும் நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் இந்த உணவுகூட இல்லாது போகும் அபாயம் காணப்படுவதால், அந்த மக்களை பட்டினி அவலத்தில் இருந்து காப்பாற்ற புலம்பெயர்ந்த மக்கள் தமது போராட்டங்களுக்கு பலம் சேர்க்க வேண்டும் என, வன்னி மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com