கடுக்கண் அணிந்தால், தொங்கட்டானைத் தொங்க விட்டால், நரம்பு மண்டலம் சீராக இயங்கும்; ஆகவே காது குத்த வேண்டும். என்கிறார்கள். உடம்பின் எல்லா நரம்புகளும் காது மடலில் இணைகின்றன. மருத்துவர்கள் - உடற்கூறு படித்த மருத்துவர்கள் நேர்மை அற்றவர்கள் புதிய விளக்கம் தர முயல்கிறார்கள்
இம்மாதிரிச் சொன்ன போது பெரியார் கேட்டார் - காதில் ஓட்டை போட்டால் நரம்பு மண்டலம் சரியாக இயங்கும் என்பது உன்னைப் படைத்த கடவுளுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தால் ஓட்டை போட்டே உன்னை உருவாக்கியிருப்பானே அப்படிச் செய்யாததிலிருந்தே அது தேவையற்றது, மடத்தனம் என்பதை விளங்கிக் கொள்ளலாமே! என்று கேட்டார் அறிவுஆசான் தந்தை பெரியார்.
ஒன்பது துளைகள் என்று பாட்டே எழுதினார் கண்ணதாசன் காதில்ஓட்டை அவசியம் என்றால் ஒன்பதோடு ஒன்று சேர்த்துப் பத்தாகப் படைத்திருப்பானே, பகவான்! காது குத்தல் பிறருக்குச் செய்தாலும் சரி,தம் குழந்தைகளுக்குச் செய்தாலும் சரி - குற்றம்தான்,தேவை அற்றதுதான், தவிர்க்கப்படவேண்டியது தான். தவிர்ப்பார்களா.....?
http://thamizhoviya.blogspot.com/2009/04/blog-post_8641.html




























No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com