விஜய் டிவியில் நட்ந்தது என்ன ?என்ற நிகழ்ச்சியில் கொஞ்சம் நாட்கள் முன்பு ஒரு
ஆன்மீக சாதுவைப்பற்றி வந்தது சுடலைச்சாமி என நினைக்கிறேன் அவர் இருக்கும் கிராமத்தில் இது வரை ஒருவரும் டாக்டரிடம் போனதில்லையாம் ,எந்த வியாதி வந்தாலும் அந்த மனிதரிடம் போய் அவர் கொடுக்கும் விபூதியை தடவ சரியாகிவிடுகிறது என்று சொல்கின்றனர் அந்தக்கிராமத்து மக்கள் எல்லம் சரிதான் ஆனால் அவர் உண்பதைப் பார்த்தால் ஒருபக்கம் ஆச்சரியமும் மறுபக்கம் இப்படியும் ஒரு மனிதரா என்று எண்ணத் தோன்றுகிறது
அவர் பேட்டி எடுப்பவரிடம் பேசிக்கொண்டே திடீரென்று ஒரு எலியைப்பிடித்தார் வாலைப் பிடித்துதூக்கினார் பின் வாயில் கடித்து தின்று விட்டார் , பின் மேலும் அவருக்குப்
பசிக்க மண்ணைத் தோண்டினார் ஒரு பெரிய நண்டு ஓடி வந்தது .அதை பிடித்து கால்களை கறுமுறு என்று சாப்பிட்டார் , அதன் பின்னும் பசிக்க ஒரு தவளையைப் பிடித்துத் தின்றார்,
எல்லாவற்றுக்கும் மேலாக ஓடும் விஷப்பாம்பையும் பிடித்து அதன் உடலைக் கீறி உள்ளிருக்கும் பொருளையும் தின்றார் ,அவரை இதை பற்றி கேட்ட போது எனக்கு இவைகள்தான் உணவு என்கிறார் ,அவரால் பலர் தங்கள்தீராத வியாதிகளைத் தீர்த்துக் கொள்வதால் இந்த விஷயத்தைப் பெரிது படுத்துவதில்லை ,,
இதைப்பார்த்த எனக்கு அன்று சாப்பாடு இறங்கவில்லை இது எப்படி சாத்தியமாகிறது?
மிகவும் வியப்பாக உள்ளது .
"vishalam raman" <rvishalam@gmail.com>
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com