தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, October 2, 2009

அணு யுத்தம் வந்தால் பாக். அழியும்; 50 கோடி இந்தியர்களும் பலியாவார்கள் - யு.எஸ். நூல்

தமிழகம்
தமிழக சுற்றுலா தலங்களை காண "இணைய உலா': புதுமை வசதி அறிமுகம்தமிழக சுற்றுலாத்துறை இணையதளத்தில் "இணைய சுற்றுலா' வசதியைத் தொடங்கி வைக்கிறார் அத்துறை செயலாளர் வெ.இறையன்பு.
சென்னை, செப். 30:தமிழக சுற்றுலாத் துறை இணையதளத்தில் www.tamilnadutourism.org இணையச் சுற்றுலா வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.   இதன்மூலம் தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய 11 சுற்றுலா இடங்கள் குறித்த புகைப்படங்களை 360 டிகிரி கோணத்தில் பார்த்து ரசிக்கலாம்.   சென்னையில் "இணையச் சுற்றுலா' என்ற திட்டத்தை இணையதளத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்து சுற்றுலாத் துறை செயலர் வெ.இறையன்பு பேசியது:   இந்த இணையச் சுற்றுலாவில் முதற்கட்டமாக வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கொல்லிமலை, ராமேஸ்வரம் கோயில், குற்றால அருவி, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட 11 சுற்றுலா தலங்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.   இந்தப் புகைப்படங்கள், அந்த சுற்றுலா தலத்தை முழுமையாக அறியப் பயன்படுகிறது. இப்புகைப்படக் காட்சிகள் இணையதளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.   இதில் உள்ள காட்சிகளை "மவுஸ்' மூலம் 360 டிகிரி சுற்று கோணத்தில் பறவையின் கண் போல நாம் விரும்பும் வகையில் தத்ரூபமாகக் கண்டு பரவசம் அடையலாம். கோயில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளைக்கூட "ஜூம்-இன்' முறையில் பெரிதுபடுத்தி "குளோஸ்-அப்' காட்சியில் காணலாம்.   கொல்லிமலை, வண்டலூர் விலங்குகள் காட்சியகம் உள்ளிட்ட இடங்களைக் காண "மவுûஸ' "கிளிக்' செய்தால் போதும். சில விநாடிகளில் கணினித் திரையில் வண்ணக் கோலத்தில் நம் முன்பு காட்சிகள் விரியும்.   சென்னை தீவுத்திடலில் இப்போது நடைபெறும் உணவுத் திருவிழாவின் ஒரு பகுதியாக, இந்த இணையச் சுற்றுலா குறித்த புகைப்படங்கள் பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படும்.   விரைவில் 50 சுற்றுலா தலங்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார்.   இந்நிகழ்ச்சியில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குநர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த கண்ணொளியை பாருங்கள் நண்பர்களே, இந்த உலகில் தான் நீங்களும் நானும் வாழ்கிறோம்... 
 
இது உலக கொடுமை... ஒரு பக்கம் பணக்கார கும்மாளங்கள், ஒரு பக்கம் புசுந்தளிர்களின் பட்டினி சாவுகள்.. என்ன உலகம் இது...
 
 
இதை கண்டதும் சிங்களவனின் முகாமில் இருக்கும் நம் ஈழத்து சகோதர சிறார்கள் தான் என் நினைவுக்கு வருகிறார்கள்... இதயம் பதறி, உள்ளம் கலங்குகிறது...


நீர் கண்டுபிடிக்கப்பட்டதன் எதிரொலி-நிலவில் இடம் வாங்க போட்டா போட்டி

பெங்களூர்: இருக்கிற இடத்தையெல்லாம் வீடுகளாக கட்டிக் குவித்துக் கொண்டிருக்கும் நம்மவர்களுக்கு நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன், அங்கேயும் கொஞ்சத்தை வாங்கிப் போட்டு விட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்து விட்டது.

நிலவில் தண்ணீர் இருப்பதை சமீபத்தில் சந்திரயான் விண்கலத்தின் உதவியுடன் நாசா கண்டுபிடித்தது. இதையடுத்து நிலவில் இடம் வாங்க மக்களிடையே ஆர்வம் பிறந்துள்ளதாம்.

கேட்கவே விநோதமாக இருக்கிறதல்லவா.. ஆனால் இதுகுறித்துத்தான் இப்போது இன்டர்நெட்டில் சூடான விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது.

நிலவில் ஒரு ஏக்கர் நிலம் தோராயமாக 20 டாலருக்கு விலை பேசப்படுகிறதாம். இந்த ரியல் எஸ்டேட் பிசினஸை ஆரம்பித்து வைத்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த லூனார் எம்பசி என்ற நிறுவனம்.

இந்த நிறுவனம் இன்று நேற்றல்ல, கடந்த 29 ஆண்டுகளாக இந்த வேலையைத்தான் செய்து வருகிறதாம். நிலவில் இடத்தைப் பதிவு செய்வதும், விற்பதும்தான் இந்த நிறுவனத்தின் வேலை. இந்த நிறுவனத்தின் இணையதளத்திற்குப் போனால், நிலவில் இடம் வாங்கிப் போடுவது தொடர்பான அனைத்து விவரங்களையும் போட்டு வைத்திருக்கிறார்கள்.

இது மோசடி வேலை அல்ல என்றும் ஒரு விளக்கத்தையும் அளித்து வைத்துள்ளனர்.

மேலும், சந்திரன் மற்றும் பிற கிரகங்களில் நிலத்தை விற்பனை செய்யவும், பதிவு செய்யவும் அங்கீகாரம் பெற்ற ஒரே கம்பெனி எங்களுடையதுதான் என்றும் சட்ட நுணுக்கமாகவும் ஒரு விளக்கம் உள்ளது.

இதுவரை தங்களது நிறுவனத்தில் 34 லட்சத்து 70 ஆயிரத்து 72 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.

சரி, எப்படி பிற கிரகங்களில் ரியல் எஸ்டேட் வேலையை இவர்கள் செய்ய உரிமை கிடைத்தது என்று பார்த்தால், அதற்கும் ஒரு விளக்கம் இந்த இணையதளத்தில் உள்ளது. அதாவது ஐ.நா. சபையிலும், அமெரிக்கா மற்றும் ரஷ்ய அரசுகளிடமும் இதுகுறித்து முறையாக பதிவு செய்து உரிமையைப் பெற்றுள்ளனராம்.

லூனார் எம்பசியைச் சேர்ந்த டென்னிஸ் ஹோப் என்பவர் இதுதொடர்பான உரிமத்தை 29 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி விட்டாராம். பின்னால் சட்டப் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடாம். தங்களது உரிமையை இதுவரை எந்த நாடும் கேள்வி கேட்கவில்லை என்றும் வாதிடுகிறார்கள்.

கடந்த 1979ம் ஆண்டு சர்வதேச நிலவு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1984ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தப்படி எந்த ஒரு தனி நபரும் நிலவில் உரிமை கோர முடியாது. 2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி இந்த ஒப்பந்தத்தை இதுவரை 13 நாடுகள் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன. இதில் விசேஷம் என்னவென்றால், எந்த ஒரு நாடும், சட்டரீதியாக லூனார் எம்பசியின் உரிமையை கேள்வி கேட்கவில்லை என்பதே.

எனவே ஐ.நா. சபையை அணுகி யார் முதலில் உரிமை கோருகிறார்களோ அவர்களுக்கே அது சொந்தம் என்ற அடிப்படை நியதிப்படி, தாங்கள் ஐ.நா.விடம் முறைப்படி அணுகி உரிமையைப் பெற்றுள்ளதாக கூறுகிறது லூனார் எம்பசி.

சரி இதை விடுவோம். லூனார் எம்பசியின் கணக்குப்படி நிலவின் விலை நிலவரத்தைப் பார்ப்போம். எல்லாம் டாலர் கணக்குதான்.

நிலவின் முக்கிய பகுதிகளில் உள்ள நிலங்கள் - ஒரு ஏக்கர் 22.49 டாலர்கள். பத்திரப் பதிவில் நமது பெயரையும் சேர்த்துக் கொடுத்து விடுவார்களாம்.

பெயர் குறிப்பிடப்படாமல் பத்திரப் பதிவு வேண்டும் என்றால் 19.99 டாலர் கொடுத்தால் போதுமாம்.

லூனார் எம்பசியில் உங்களது பெயரை பதிவு செய்து சொத்தை பதிவு செய்து கொள்ள விரும்பினால் 15 டாலர் கட்ட வேண்டும்.

பிற கிரகங்களுக்கான பெயர்ப் பதிவுக்கு 22 டாலர்.

அப்புறம் என்ன, பாட்டி உட்கார்ந்து வடை சுட்டுக் கொண்டிருக்கும் இடத்தைப் பார்த்து, பக்கத்தில் ஒரு ஏக்கரை வளைத்துப் போட்டு வைத்தால் நமது பேரப் பிள்ளைகள் அங்கு போய் பிழைத்துக் கொள்வார்கள், ஜல்தியா கிளம்புங்க லூனார் எம்பசிக்கு.

நன்றி: http://thatstamil.oneindia.in/news/2009/09/30/india-water-find-sparks-a-mad-rush-for-lunar.html


அணு யுத்தம் வந்தால் பாக். அழியும்; 50 கோடி இந்தியர்களும் பலியாவார்கள் - யு.எஸ். நூல்

நியூயார்க்: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணு யுத்தம் மூண்டால் பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக அழிந்து போகும். அதேசமயம், 50 கோடி இந்தியர்கள் வரை மாளுவார்கள் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் பதவிக்காலத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிட்சர் விருது பெற்றவரும், பிரபல வரலாற்றாரியருமான டெய்லர் பிராஞ்ச் இந்த நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் கார்கில் போர் காலத்தில் நிலவிய நிலவரம் குறித்து அப்போதைய அதிபர் கிளிண்டனிடம் இந்தியத் தலைவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் டெய்லர்.

இந்த நூலின் எட்டாவது அத்தியாயத்திற்கு பாக்தாத்தில் எட்டு ஏவுகணைகள் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில்தான் இந்தியா - பாக் அணு ஆயுதங்கள் குறித்து எழுதியுள்ளார்
டெய்லர்.

அதில், அமெரிக்க அதிபர் கிளிண்டனை நான் சந்தித்தபோது என்னிடம் அவர் கூறுகையில், பாகிஸ்தான் இந்தியாவின் மீது அணுகுண்டு வீசினால் பதிலடி தர இந்தியா தயாராக இருப்பதாக இந்தியத் தலைவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.

ஒரு வேளை அப்படி நடந்தால் இந்தியா நிச்சயம் பாகிஸ்தானை ஒட்டுமொத்தமாக அழித்து விடும். அவர்களிடம் அந்த சக்தி உள்ளது.

அதேசமயம், இந்தியாவிலும் 50 கோடி பேர் வரை மாண்டு போவார்கள் என்று கிளிண்டன் கூறியதாக டெய்லர் தெரிவித்துள்ளார்.

நன்றி: http://thatstamil.oneindia.in/news/2009/09/30/world-ind-will-wipe-off-pak-but-at-cost-of-500-mn.html
டமிலக அரசு விருதுகள்- எதற்காக ???


டமிலக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட, விருது பெற்றவர்களோ தனக்கு எதற்காக விருது வழங்கப்பட்டது என முழித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் செய்த "சாதனை" அவரவர் வீட்டிலே தொலைபேசி வழியாய் ஒலிக்கிறது. சிலரது வீட்டில் நாமும் ஒட்டு கேட்டதில்...

கஜினி காந்த்:
அன்பு கஜினியே, இளைஞர்களின் இதய துடிப்பே.....அரசியலுக்கு இப்போது
வருவேன், அப்போது வருவேன் என அலம்பு காட்டி அலுவா கொடுத்தவனே, தேர்தலில்
எனக்காய் "வாய்ஸ்" தந்தவனே, சின்ன பையன் 'சாகுல் காந்தி' அரசியலுக்கு
அழைத்த போது கூட என் கண் அசைவுக்கு காத்திருந்தவனே... இதோ பிடி உனக்கான
விருதை..

ஜமல ஹாசன்:
தம்பியே என் தங்க கம்பியே... ஒவ்வரு மேடையிலும் என் புகழ் படுபவனே...
எனக்கு கேமராவில் மட்டும் நடிக்க வராது என புரிந்து 'துசவதரத்தில்' என்னை
போன்ற ஒரு டூப்பை நடிக்க வைத்தவனே, 'தன்னை போல் ஒருவனில்' என் குரலையும்,
என் வீட்டையும் பதினெட்டு திக்கும் பரப்பியவனே... இதோ பிடி உனக்கான விருதை

கிரிஷா:
அழகிய கிரிஷவே உன் அழகை கண்டேனம்மா "லூசா லூசா "- வில் இருந்தே.
'சுருவி'-யில் நீ ஆடிய ஆட்டதுக்க்காகவே பாதி கோடம்பாக்கத்தை உனக்கு எழுதி
வைக்க எண்ணி இருந்தேன். இடையில் ஈழ தமிழர் சோகம் என்னை கவ்வியத்தால் ஒத்தி
வைத்தேன். 'வலைமாமணி' கிரிஷவே இதோ உனக்கான விருது.
சுடிவேலு
மதுரை
காந்துடன் ஒன் டூ ஒன் ஆடியவனே. ஐயா ஐயா என விளித்து, ஆயிரம் தடவை காலில்
விழுந்த உன் அலப்பறை தாங்காமல் தருகிறேன் உனக்கும் ஒரு விருது.

பைரமுத்து:
இனிய பைரமுத்துவே ...மாதத்திற்கு ஒருமுறையாவது மேடையில் 'ஐஸ்' மழையை
பொழிந்து என்னை ஜலதோஷம் கொள்ள செய்பவனே... அடுத்து நீ எழுத போகும்
கோபாலபுரத்து காவியத்திற்காகவே இப்போதே தருகிறேன் ஓர் விருது.

சிறந்த வரைநடை ஆசிரியர்:
................................................(வெக்கம், மானம், சூடு,
சொரணை உள்ள தமிழனாக எம்மை கருதுவதால் இதோடு நிறுத்தி கொள்கிறோம்.)
பின் குறிப்பு: இந்த பதிவு யாரையும் புண் படுத்த அல்ல. எங்கையாவது புண் ஆகி இருந்தால் சொந்த செலவில் மருந்து வாங்கி போட்டு கொள்ளவும்.

http://stalinfelix.blogspot.com/


No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!