Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, September 20, 2009

♥ நடிகர் விஜய் முதல்வர் ஆனால் .........♥

பிரபலங்களின் வேண்டுதல்கள் !


பொதுவாகவே கோவிலுக்கு போயிட்டு வரும்போது மனசு ரொம்ப நிம்மதியாகவும் சாந்தமாகவும் இருக்கும். இதுக்கு ஒரு முக்கிய காரணம், நம்ம மனசுல இருக்குறது அப்படியே இன்னொருத்தர் கிட்ட சொன்ன திருப்தி கிடைக்குறது தான் இந்த நிம்மதிக்கு முக்கிய காரணமாக தெரியுது.

சரி. இந்த மாதிரி நம்முடைய பிரபலங்கள் இப்ப இருக்க நிலைமையில தங்கள் மனசுல இருக்குறத கடவுள் கிட்ட சொல்ற மாதிரி இருந்தா...என்ன சொல்லுவாங்க...என்ன கேப்பாங்கன்னு ஒரு கற்பனை தான், சீரியசா எடுத்துக்காதீங்க : )

சோனியா காந்தி : கடவுள்ஜி, எப்படியாவது என் மகன் ராகுலை பிரதமர் ஆக்கிடுங்கஜி. இப்போ, லுதியானாவிலிருந்து டில்லிக்கு ரயிலில் அனுப்பி வச்சது போல, தில்லியிலிருந்து திருப்பதிக்கு நடை பயணம் அனுப்பி, மொட்டை அடிச்சு காது குத்துறேன் பெருமாள் ஜி...!


கருணாநிதி : என் சொத்தினும் மேலாக நான் மதிப்பு கொடுக்கும் தெருப்பிள்ளையாரே, என் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி. 2011 ஆம் ஆண்டு தேர்தலிலும், கழகம் வெல்வதற்கு தேவையான பணத்தை மத்திய அமைச்சர்கள் எப்படியாவது பெற்றுத் தர வழி வகை செய் ! அடுத்த முறையும் தமிழக மக்கள் காசு வாங்கிக் கொண்டு எங்களுக்கே ஓட்டளிக்க ஆவன செய் பிள்ளையாரே ! பணம் மூன்றேழுத்து, சொத்து மூன்றெழுத்து, பதவி மூன்றெழுத்து, கொள்ளை மூன்றெழுத்து, அதனால் நாங்கள் அனுபவிக்கும் சுகம் மூன்றெழுத்து, உனக்கு அளிக்கப் போகும் நன்றி யும் முன்றெழுத்து!

(கடவுள் : ஈழம் மூன்றெழுத்து,வன்னி மூன்றெழுத்து,முகாம் மூன்றெழுத்து, நினைவிருக்கிறதா கலைஞரே!)


ஜெயலலிதா :
என்னுடைய பிரதமர் ஆசையை கூட விட்டுடுறேன்....ஆனா, எப்படியாவது இந்த மைனாரிட்டி திமுக அரசின் ஆட்சியை டிஸ்மிஸ் செஞ்சுடு.

(கடவுள்: என்னம்மா....என்னிடமும் மைனாரிட்டி திமுக அரசு அடைமொழி தேவையாம்மா?)

விஜய் : என்னங்க ஆண்டவரே நீங்க.... சும்மா ஹீரோயின்களோட ஜாலியா ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன்... என்னை ஏன் இப்படி அரசியல் அது இதுன்னு கொடுமை பண்றீங்க.......இனிமேலாவது எங்கப்பாவுக்கு ஒரு ஐடியாவும் வராம நீங்க தான் பாத்துக்கணும் ! இதை மட்டும் நீங்க கரெக்டா செஞ்சிங்கன்னா...அடுத்த படத்துல Intro songla உங்க படத்துக்கு முன்னாடி குத்தாட்டம் போடுற மாதிரி சீன் வைக்கச் சொல்றேன்...!


கி.வீரமணி : முருகா நான் திருந்திட்டேன் முருகா...கடவுள் இல்லைன்னு கூட்டத்துல பேசுறத பார்த்து தப்பா நினைச்சுக்காத முருகா....அதெல்லாம் சும்ம லுலுலாயிக்கு....திராவிட கழகத்தின் சொத்துக்கள் அதிகரிக்கின்றன, ஆனால் இயக்கத்தில் இருக்கும் தொண்டர்கள் குறைந்து கொண்டே போகிறார்களே.....கல்வியறிவு படைத்தவரிடம் நம் கொள்கையை விற்று காசாக்க முடியவில்லையே....ஆகையால், சாமானிய மக்களுக்கு கல்வி அறிவை கொஞ்சம் பொறுமையாகவே கொடு, பதவியையும் பணத்தையும் மட்டும் எங்களுக்கு உடனே அள்ளிக் கொடு !

(கடவுள்: உங்களுக்கு எல்லாம் இதே வேலையா போச்சு. ரத்தம் சூடா இருக்க வரைக்கும் ஆட வேண்டியது, அதுக்கு அப்புறம் ஆன்மீகம் பக்கம் ஓடி வர வேண்டியது. சரி வாங்க...வந்து பஞ்சாமிர்தம் சாப்பிடுங்க..! )

விஜய டி.ஆர் : வேலாயுதா, லட்சிய திமுக ஆரம்பிச்சு கிட்ட தட்ட 5 வருஷம் ஆகப் போகுது, ஆனா, போன தேர்தல்ல என் பையன் கூட என் கட்சிக்கு ஓட்டு போடல. என் குடும்பத்துல இருக்கவங்க மட்டுமாவது எனக்கு ஓட்டு போட வச்சுடு. டண்டனக்கா...டனக்கனக்கா....

அழகிரி : எப்படியோ தேர்தலில் தோற்ற பி.சிதம்பரத்தை, அவங்கள மிரட்டி, இவங்கள மிரட்டி ரிசல்டையே மாத்திட்டேன். இதுக்கெல்லாம் உன்னோட தயவு தான் காரணம். இனிமேல் எந்த கேஸ்லியும் சிபிஐ என் பக்கம் வராம பண்ணதுக்கு ரொம்ப நன்றிப்பா ஆண்டவா...கடைசியா ஒண்ணே ஒண்ணு, எப்படியாச்சும் மதுரையை அமெரிக்க தலைநகரமா மாத்திடு பா...வெள்ளை மாளிகையை மாட்டுத் தாவணி பஸ்டாண்ட் பக்கத்துல கொண்டு வந்துடு ஆண்டவா...

மன்மோகன் சிங் : My God, People of India, Love you . Ho, GOD, Inflation, GDP, Consumer Price Index, Fiscal deficit, 123 Agreement..........



( கடவுள்: ஹலோ மன்மோகன், ஜனங்களுக்கு புரியுற மாதிரி பேசலைன்னா கூட பரவாயில்லை....எனக்கு புரியுற மாதிரியாவது














http://localtamilan.blogspot.com/2009/09/blog-post.html


விஜய் ஜோக்ஸ்




டைரக்டர்:படத்துக்கு வடிவேல் போடலாமா?
அல்லது விவேக் போடலாமா?

dr.விஜய்:சார் கவலைய விடுங்க நானே காமெடி ரோலும் பண்ணிடறேன்.....
டைரக்டர்:காமெடி ரோல் நீங்க தான் பண்ணுறீங்க , நான் படத்துக்கு ஹீரோ வா யார போடலாம்னு கேட்டேன்....

*********************************


சினிமா தியேட்டரில் விஜய் படம் பார்க்க வந்தவர்களுக்கு ஏன் இஞ்சி மிட்டாய் கொடுக்கிறார்கள் தெரியமா?


கதையை ஜீரணிக்க முடியாததால்.

*********************************


villu film record:


இந்த வார விற்பனை:
அமுர்தாஞ்சன் 30000
அனாசின் 20000
poison:10000
அனைத்து மருந்து கடைகாரர்களும் பாராட்டு விழா நடத்தியதாக கேள்வி....


*********************************

எங்கே கொஞ்சம் சிரிங்க....
கொஞ்சம்...
வேணாம் சொன்னா கேளுங்க ...
சிரிக்க வச்சுடுவேன்....
இப்ப சிரிக்க போறீங்க .....
இதோ வந்துடுச்சு....
"DR.விஜய்"
(ஹி ஹி ஹி)

(dr.விஜய் rocks)


**************************************

அதோ போறாரே அர் வில்லு படத்தை தொடர்ந்து 100 தடவையா பார்த்துக்கிட்டிருக்கார்.

அவ்வளவு தீவிர விஜய் ரசிகரா...?

ம்ஹும் அவரு தியேட்டர் ஆப்ரேட்டர்...!

*************************************

விஜய் படம் வெளியிட்டிருக்கிற தியேட்டரில் மட்டும் நாற்காலியின் உள்பகுதியை வெட்டி இருக்கீங்களே ஏன்?


அப்பத்தானே மக்கள் மத்தியில் சீட் நுனியில் உட்கார்ந்து படம் பார்த்தாகள்னு சொல்லலாம்.


*************************************

விஜய் யோட முகத்தை அடிக்கடி க்ளோஸ் அப்ல காட்ட வேணாம்னு சொன்னேனே...! கேட்டீங்களா?

ஏன்யா...! என்னாச்சு?

பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க

*************************************

கணவன்: ஏண்டி! பிச்சகாரன நடு வீட்ல வச்சி சோறு போட்டுட்டு டி.வீ பார்க்க விட்ருக்க...?

மனைவி: விடுங்க... பார்த்துட்டு போகட்டும்.. அந்த காலத்தில அவர் எடுத்த விஜய் படம் தானாம் அது....

http://tamiljokes4u.blogspot.com/





நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)





வி.பி. 42 ஆம் ஆண்டு. அதாங்க, கி.பி. 2016. எல்லோரும் எதிர்ப்பார்த்தப்படி முதல்வராக விஜய். இது நடக்கும்ன்னு தெரிஞ்சு, பல கட்சிகளை கலைச்சிட்டாங்க. விஜய் முதல்வர் ஆனவுடன் 'கௌரவ முதல்வர்' என்றொரு புது பொறுப்பு உருவாக்கப்பட்டு அதில் எஸ்.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு உள்ளார்.

முதல் பிரஸ் மீட்.

"சார்... எதுக்கு இந்த புது பதவி? இதுக்கு சட்டசபையில் விவாதித்து, கவர்னர் ஒப்புதல் வாங்கி இருக்கீங்களா?"

"தம்பி, நான் ஒரு முடிவு எடுத்துட்டேனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன். இதுல, சட்டசபை உறுப்பினர்கள், கவர்னர் பேச்ச எங்க கேட்குறது?"

"என்ன சார்... ஒரு முதல்வரா இருந்துக்கிட்டு, கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பேசுறீங்க?"

எஸ்.ஏ. விடம் விஜய், "அப்பா, வந்திருக்க எல்லாரோட பேரையும், அட்ரஸையும் குறிச்சு வச்சிருக்கீங்களா?"

அந்த நிருபர் மறைகிறார்.

இனி, அடுத்த நிருபர், "முதல்ல, எந்த கோப்புல கையெழுத்து போட போறீங்க?"

"இந்தியாவோட கடன், பல ஆயிரம் கோடிகள். அத அடைக்க வழி செய்ய போறேன்."

"சார். தமிழக முதல்வரா, அத எப்படி நீங்க அடைப்பீங்க?"

"ஓ! அப்படியா? சரி. தமிழகத்தோட கடனை அடைக்க வழி செய்வேன்."

"அது எப்படி?"

"என்னோட முத மாச சம்பள பணத்தை (ஒரு ரூபா) இதுக்காக கொடுக்குறேன். நீங்களும் கொடுங்க. உங்களுக்கு எதுக்கு சிரமம்? நாங்களே எடுத்துக்குறோம்?"

"ஐய்யயோ! மக்கள்கிட்ட இதுக்கு எதிர்ப்பு வருமே? என்ன பண்ணுவீங்க"

"மக்களுக்கு பிடிக்கலைங்கறதால நான் என்ன நடிக்காமலா இருந்தேன்? நடிச்சேன்ல. அது மாதிரிதான்"

"ஆனா, அடுத்த தேர்தல்ல ஓட்டு விழாம போச்சுனா?"

விஜய் வாயை இறுக்க மூடி கொண்டு அப்பாவை பார்க்கிறார். அவர் விஜய் காதில் ஏதோ சொல்கிறார்.

"அதுக்கு நாங்க இன்னொரு வழி வச்சிருக்கோம்."

"என்ன?"

"மலேஷியாவுக்கு கலை நிகழ்ச்சி போயி பணம் திரட்டுவோம்."

"நீங்க நாலு படத்துக்கு மூணு ப்ளாப் கொடுப்பீங்களே? அந்த ப்ளாப் பட தயாரிப்பாளர்களோட கடன்களுக்கு ஏதாவது திட்டம் இருக்கா?" கேள்வி கேட்டு விட்டு அதற்கு பதிலாக வரும் முறைப்பை கண்டு அந்த நிருபரும் எஸ்ஸாகிறார்.

நெக்ஸ்ட்.

"மாநிலத்தொட உள் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கு என்ன பண்ண போறீங்க?"

"அதான் ஏற்கனவே, சொல்லி ஆரம்பிச்சிருக்கோமே? மாவட்டம் தோறும் கல்யாண மண்டபம் கட்டுறோம். கல்யாணம் இலவசமா பண்ணிக்கலாம். ஆனா, வாடகை உண்டு!."

"வறுமை கோட்டுக்கு கீழே இருக்குற மக்களுக்கு என்ன பண்ண போறீங்க?"

"பிரியாணி பண்ண போறோம்."

"என்ன?"

"ஆமாம். டெய்லி இலவசமா பிரியாணி போட போறோம்"

எஸ்.ஏ.எஸ். வந்து காதை கடிக்கிறார். "மகனே, பிரியாணி போடுறதுக்கு அவுங்க என்ன நாம நடத்துற உண்ணாவிரதத்துக்கு வந்தவுங்களா?"

"சரி, சட்ட ஒழுங்கு மேம்பட என்ன திட்டங்கள் வச்சிருக்கீங்க?"

"அது எங்க அப்பா செக்‌ஷன். அவர் சொல்லுவார்?"

எஸ்.ஏ.எஸ் - "சட்டம் ஒரு இருட்டறை. நல்ல லைட்டா வாங்கி மாட்ட போறோம். சட்டத்துல இருக்குற ஓட்டைகளை அடைக்க, ஒரு வெளிநாட்டு கட்டுமான நிறுவனத்தோடு பேசிட்டு இருக்கோம்."

"ஸ்ஸ்ஸ்... எப்பா! போதும்."

கேட்ட நிருபர் முணுமுணுத்த படி, "முதல்ல உங்க படத்துல வருற பாத்ரூம்ல இருக்குற ஓட்டையை அடைங்க"

"என்ன சத்தம்?"

"இல்ல சார், சைலன்ஸ் சைலண்டா தான் இருக்கோம். நீங்க தான் பேசிட்டு இருக்கீங்கல்ல?"

"வெளிநாட்டு முதலீடுகளை நம்ம மாநிலத்துக்கு கொண்டு வர, என்ன பண்ண போறீங்க?"

"அத பத்தி ஏற்கனவே பேசிருக்கோம், ஒரு லண்டன் நிறுவனத்துடன். அக்ரிமெண்ட் போட்டு ஆரம்பிச்சுட வேண்டியது தான்."

"என்ன அக்ரிமெண்ட்?"

"ஒன் இயர் அக்ரிமெண்ட். பிடிச்சிருந்தா வச்சிருப்போம். இல்லாட்டி திருப்பி அனுப்பிடுவோம்."

"அது சரி. நீங்க ஆறேழு வருசத்துக்கு முன்னாடி எம்.ஜி.ஆர். பட பேரு, எம்.ஜி.ஆர். பாட்டு அப்படின்னு இருந்தீங்க. இப்பல்லாம் அப்படி இல்லாம, பெரியார், பெரியார்ன்னு பேசுறீங்களே? ஏன்?"

"பேசிக்கலா, பெரியாருக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு."

"என்னன்ன?"

"பெரியார் அப்பா, ஈரோட்டுல ஒரு மளிகை கடை வச்சிருந்தாரு. அந்த கடைக்கு தன்னோட பையன் வரணும்ன்னு ஆசைப்பட்டாரு. ஆசைப்பட்ட மாதிரியே, பெரியாரும் கடைக்கு வந்து பிஸினஸ்ல இறங்கினாரு. அது மட்டுமில்லாம, அவுங்க அப்பாவை விட பெரிய நிலைக்கு வந்தாரு"

என்று சொல்லிய படி, திரும்பி அப்பாவை பார்க்கிறார். அப்பா பெருமையில் கண்ணீர் விட்டு, அதை துடைத்து விட, இது தான் சாக்கு என்று எஞ்சியிருந்த நிருபர் கூட்டம், சும்மா 'கில்லி' மாதிரி எஸ்ஸாகிறார்கள்.


http://tamiljokes4u.blogspot.com/2009/09/blog-post_4053.html

விஜய் பற்றிய இன்னொரு ஜோக்


நிருபர் / மிஸ்டர் விஜய் நீங்க உங்க ஒவ்வொறு படம் முடிஞ்ச மறுநாள்
காலையில என்ன செய்விங்க...


நடிகர் விஜய்/ நேரா சர்ச்சுக்கு போய் பாவ மன்னிப்பு கேட்பேன்.


***************************************************

நிருபர் / சமீபத்தில் நீங்கள் உங்களுக்கு உள்ளே அல்லது மனசுக்குள்
சிரிச்ச சம்பவம்னு எதை சொல்லுவிங்க...


நடிகர் விஜய்/ சத்தியம் தியேட்டர் வாசல்ல குருவி படத்தோடபேனர்ல
வெற்றிகரமான 175வது நாள் போட்டு இருந்தது .எனக்கே சிரிப்ப அடக்க
முடியலைன்னா பார்த்து கோங்கன்னா....

***************************************************

கவுண்டமணி: ச்சே.. போன எடுத்தா நச்சு நச்சுன்னுராங்கப்பா.. ஏதோ வில்லுன்னு விஜய் படமாம்.. அத விஜய் ரசிகங்களாலேயே பார்க்க முடியலையாம்.. என்ன பாக்க சொல்றாங்க.. அட இது பரவா இல்ல.. சோசியல் மேட்டர், பண்ணிக்கலாம்.. ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் என்ன ஆட சொல்றாங்கப்பா.. நான் என்ன விஜய் மாதிரி ஆடுகாலியா இல்ல பரதேசியா? ஒரே குஷ்டமப்பா.. ச்சீ... கஷ்டமப்பா..

விஜய்: ங்கண்ணா.. போன் வயரு பிஞ்சு ஒரு வாரம் ஆகுதுங்கன்னா..
கவுண்டமணி: ஹே ஹே.. ஹெய்ஹெய்.. டே டப்சா தலையா.. இது செல்போன்டா.. உன்னயல்லாம் ஹீரோவா போட்டு படம் எடுக்குறான் பாரு அவன சொல்லணும்..

விஜய்: போங்கண்ணா.. உங்களுக்கு ஒரே குறும்பு.. கம்பெனி சீக்ரட் எல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு.. சரி சரி.. இப்போ நம்ம பாட்ட கேளுங்க..
"ஹே ராமா ராமா ராமன்கிட்ட வில்ல கேட்டேன்
பீமா பீமா பீமன்கிட்ட கதைய கேட்டேன்
முருகு முருகு முருகன்கிட்ட மயில கேட்டேன்..
ஈசன் ஈசன் ஈசன் கிட்ட மலைய கேட்டேன்"

கவுண்டமணி:நிறுத்துடா ஆப்பிரிக்கா வாயா.. இவ்வளவு கேட்டியே.. பிரபுதேவாகிட்ட கதை என்னன்னு கேட்டியா?

விஜய்:??!!!


http://tamiljokes4u.blogspot.com/2009/09/blog-post_6211.html


"சன்" என்ற ஆக்டோபஸ் - ஒரு பார்வை

தொலைக்காட்சி மீடியா திரையுலகம் என்று அனைத்தையும் ஒரு சேர கலக்கிக்கொண்டு இருப்பது என்றால் அனைவருக்கும் தெரியும் அது சன் தொலைகாட்சி தான் என்பது. அரசியல் பலமும் திறமையும் ஒரே சேர இருந்தால் எப்படி அனைத்திலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு இவர்களே சிறந்த உதாரணம்.

தூர்தர்சனை மட்டுமே வறட்சியாக பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கு மத்தியில் வண்ணமயமாக சன் தொலைக்காட்சியை தொடங்கிய போது சந்தோசப்படாதவர்களே இல்லை எனலாம்.

வாரம் ஒரு முறை ஒளியும் ஒலியும், வயலும் வாழ்வும், சித்ரகார், ஞாயிற்று கிழமை ஒரு ஆதி காலத்து படம், மனைமாட்சி, ஞாயிறு மாலை ஸ்பைடர் மேன், எதிரொலி, சித்ரமாலா, ரங்கோலி என்று பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கு சாதா சாப்பாடே எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு ஸ்பெஷல் சாப்பாடு அதுவும் விதவிதமாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அந்த நிலை சன் தொலைக்காட்சி வந்த போது ஏற்பட்டது.

சன் தொலைக்காட்சி ஆரம்பமே அதகளமாக இருந்தது மக்களை கவர திரைப்படம் தான் முக்கிய காரணி என்பதை சரியாக உணர்ந்து அது சம்பந்தமாக அதிக நிகழ்ச்சிகளை வைத்தார்கள் (இருந்தாலும் தற்போது உள்ள அளவு இல்லை) முதலில் மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பு துவங்கும், அப்போது கூறியது தான் சன் தொலைக்காட்சியின் தமிழ்மாலை (மீதி நேரங்களில் திரை பாடல்கள் ஒலிபரப்பாகும்) மக்களின் தாறுமாறான வரவேற்பால் விரைவிலேயே 24 மணி நேரமாக்கினார்கள்.

கலாநிதி மாறன் மிகச்சிறந்த மார்கெட்டிங் நபர், மக்கள் எப்படி கூறினால் எதை கூறினால் ரசிப்பார்கள் என்பதை விரல் நுனியில் வைத்து இருப்பவர். இதனால் அடுத்தடுத்து பல புதிய வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுத்தார்கள் இதில் அப்போது ஜோடி பொருத்தம், பெப்சி உங்கள் சாய்ஸ் அரட்டை அரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. தூர்தர்சனின் வறட்சியான செய்திகளையே பார்த்து இருந்தவர்களுக்கு சன் தொலைக்காட்சி யின் செய்திகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெற்றி பெற்றதற்கு இன்னொமொரு முக்கிய காரணம் அவர்களுக்கு கிடைத்த தொகுப்பாளர்கள் MJ ரெகோ, பெப்சி உமா உட்பட பலர். இவ்வாறு தொகுப்பாளர்கள் தேர்விலும் அவர்களை தங்கள் வளர்ச்சிக்கு தகுந்த மாதிரி அவர்களின் முழு திறமையையும் பயன்படுத்திக்கொண்டார்கள். இது குறிப்பிடத்தக்க ஒன்று.

சிறந்த நடிகராக இருந்தாலும் இயக்குனர் சரி இல்லை என்றால் அவரது திறமைகள் முழுவதும் வீணடிக்கப்பட்டு விடும் என்பது போல இவர்களிடம் இருந்து மற்ற இடத்திற்கு சென்ற போது அவர்களால் அந்த அளவு ஜொலிக்க முடியவில்லை என்பதும் உண்மை. ஒருவரிடம் உள்ள திறமையை முழுவதும் பயன்படுத்துவதில் கலாநிதி மாறன் ஒரு சிறந்த நிர்வாகி. கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகள் பொதுமக்களை அதிகளவில் ஈர்த்தது, பெரும்பாலான வீடுகளில் சன் தொலைக்காட்சி முதல் சேனலாக தான் இருக்கும், கவனித்து பார்ப்பவர்களுக்கு தெரியும்.

தங்கள் தொழிலை சன் தொலைக்காட்சி யுடன் நிறுத்திக்கொள்ளாமல் பல சேனல்களை துவங்கினார்கள், இதில் அடுத்த மாநில சேனல்களும் அடங்கும். கலைஞர் ஆட்சியில் இருந்த போது அதிகார பலமும் உடன் இருந்ததால் அவர்களால் இன்னும் பல விஷயங்கள் எளிதாக சாதித்துக்கொள்ள முடிந்தது. மற்ற தொலைக்காட்சிகளுக்கு நெருக்கடி தரப்பட்டன. சிறப்பாக செயல்பட்ட விஜய் தொலைக்காட்சி செய்திகள் இதனால் நிறுத்தப்பட்டது, அந்த சமயத்தில் பலரால் விரும்பப்பட்ட ஒரு நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி செய்தி.

அரசியல் பலம் மட்டுமே ஒருத்தரை உயர்த்தி விட்டு விடாது என்பதற்கும் இவர்களே உதாரணம், காரணம் ஜெ ஆட்சிக்கு வந்த பிறகு என்ன முயற்சித்தும் சன் தொலைக்காட்சியை ஒன்றும் செய்ய முடியவில்லை, நெருக்கடி கொடுத்தாலும் அவர்கள் அதை வேறு மாதிரி சமாளித்து தடையை தாண்டி கொண்டே இருந்தார்கள். பலம் இருந்தும் ஜெயா தொலைக்காட்சியால் சன் தொலைக்காட்சியை மிஞ்ச முடியவில்லை.

திரைப்படங்கள் மட்டும் பத்தாது பெண்களை கவர சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார்கள், அது பெரிய வெற்றி பெற்றது. பெண்கள் பெருமளவில் அதற்கு ஆதரவு கொடுத்தனர். முன்பு இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் சீரியல் வரும் பின் அது அதிகமாகி காலை மாலை என்று பெரும்பாலான நேரங்களை ஆக்கிரமித்து விட்டது. வெறும் சீரியல் மட்டுமே இருந்தால் மற்ற பார்வையாளர்களை இழந்து விடுவோம் என்று அவர்கள் துவங்கியது தான் சன் மூவீஸ் (தற்போது இல்லை, அது K தொலைக்காட்சி யாக மறு அவதாரம் எடுத்து இருக்கிறது), சன் மியூசிக். இதில் சுமங்கலி கேபிள் விஷனும் அடங்கும்.

கடந்த முறை தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பதவி ஏற்ற போது அவர்கள் ஆதிக்கம் ரொம்ப அதிகரித்தது. தாங்கள் வளர்ச்சி பெற அரசியல் பலத்தை அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். விஜய் தொலைக்காட்சி நமக்கு எதுக்கு வம்பு என்று முற்றிலும் ஒதுங்கி விட்டார்கள். ராஜ் தொலைக்காட்சி மண்டை காய்ந்து விட்டது.

தொழில் துறையில் பல சாதனைகளை புரிந்த டாட்டா அவர்களையே மிரட்டியதாகவும் தயாநிதி மாறன் மீது குற்ற சாட்டு உண்டு. தயாநிதி மாறனும் அண்ணனுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல, தொழில் நுட்ப துறை மட்டுமல்ல எந்த துறை கொடுத்தாலும் அதில் தனித்து தெரிவார் என்பதற்கு தற்போது ஜவுளி துறையையே எடுத்துக்காட்டாக கூறலாம். இப்படி ஒரு துறை இருப்பதையே பலர் தற்போது தான் அறிவார்கள் என்று நினைக்கிறேன்.

இவர்கள், பலரை தங்கள் அதிகாரத்தால் அடக்கியது பலருக்கு தெரியும், மார்க்கெட்டிங்கில் இவர்களை யாரும் மிஞ்ச முடியவில்லை. எடுத்துக்காட்டாக 1996 சட்டசபை தேர்தலில் கலைஞர் அரசு பெரும் வெற்றி பெற இவர்கள் சன் தொலைக்காட்சி ஒரு காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை. சன் தொலைக்காட்சி பிரச்சாரம் மக்களை எளிதாக கவர்ந்தது, ஜெயா தொலைக்காட்சிக்கு அந்தளவு மக்களை கவரும் படி செய்தியை சொல்ல தெரியவில்லை.

இந்நிலையில் தினகரன் கருத்துக்கணிப்பு!!! ஒன்று நடத்தி அழகிரியை கடுப்படிக்க தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டது. இது இரு குடும்பத்திற்கும் பெரிய சண்டையை ஏற்படுத்தி விட்டது. இதனால் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சந்தோசப்பட்டார்கள், நீண்ட வருடங்களுக்கு பிறகு நடு நிலையான சன் செய்தியை பார்த்தார்கள். ஜெ வைகோ விஜயகாந்த் செய்திகளும் அடிக்கடி காட்டப்பட்டன.

இடைப்பட்ட காலத்தில் கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது, சன் தொலைக்காட்சி அலுவலகம் அறிவாலயத்தில் இருந்து மாற்றப்பட்டது. சன் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்கள் கலைஞர் தொலைக்காட்சிக்கு இழுக்கப்பட்டார்கள், சன் தொலைக்காட்சிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. சன் தொலைக்காட்சி தான் அனைத்து புது படங்களையும் வாங்கி கொண்டு இருந்தது, தற்போது கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதால் அனைத்து பட உரிமையும் கலைஞர் தொலைக்காட்சிக்கு போனது குசேலன் தசாவதாரம் மற்றும் பல படங்களை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியது. இந்த கடுப்பில் குசேலனை சன் தொலைக்காட்சி ஒரு வழி ஆக்கியது தனிக்கதை.

சன் தொலைக்காட்சிக்கு படங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் மேலும் கடுப்பானது, இவர்களின் முக்கிய பலமே படங்கள் என்பதால் அடி மடியிலே கை வைத்ததால் இதை தாண்ட அவர்கள் எடுத்த அடுத்த முயற்சி தான் படங்களை வாங்குவது. இதை கலைஞர் அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் முதன் முதலில் வாங்கி வெளியிட்ட "காதலில் விழுந்தேன்" படம் இவர்கள் செய்த விளம்பரத்தால் வெற்றி பெற விநியோகஸ்தர்கள் திரை அரங்கு உரிமையாளர்கள் மிகவும் சந்தோசப்பட்டனர். இதன் பின்னர் இவர்கள் வாங்கும் படத்தின் அளவு அதிகரித்தது, தயாரிப்பாளர்களும் தங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வரை சரி என்று விற்று விட ஆரம்பித்து விட்டார்கள். நாம் எல்லாம் இப்போது இவர்கள் செய்யும் பட விளம்பரத்தால் நொந்து நூடுல்ஸ் ஆவதற்கு முக்கிய காரணம் கலைஞர் தொலைக்காட்சி தான் :-))))

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல இவர்கள் ராஜ் தொலைக்காட்சிக்கு செய்த பிரச்சனை எப்படியோ அது போல சன் தொலைக்காட்சி தெரியாமல் இருக்க செய்யப்பட்டது. இது செய்திகளில் முக்கிய விவாதமாக வந்தது. இவர்களுடைய சுமங்கலி கேபிள் விஷனுக்கு நெருக்கடி கொடுக்க அரசு கேபிள் கொண்டு வரப்பட்டது. இதை சமாளிக்க இவர்கள் கொண்டு வந்தது தான் சன் DTH அதுவும் இவர்கள் மார்க்கெட்டிங் தந்திரத்தால் வெற்றி பெற்றது.

நான் இங்கே ஒன்றை கூற விரும்புகிறேன்... எனக்கு சன் தொலைக்காட்சி மீது வேறுபட்ட கருத்துக்கள் உண்டு அதே போல இவர்கள் செய்யும் அதிகார துஸ்பிரயோகம் ஏற்று கொள்ள முடியாத ஒன்று, ஆனால் இவர்கள் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தங்களுக்கு வந்த ஒவ்வொரு தடைக்கல்லையும் சோர்ந்து போகாமல் படிக்கல்லாக மாற்றிக்காட்டியது எனக்கு ஒரு முன்மாதிரி மற்றும் மிக ஆச்சர்யம்.

பிறகு சன் தொலைக்காட்சி தன் முழு பலத்தை உபயோகித்து கலைஞர் அரசு செய்திகளை எந்த ஒளிவு மறைவில்லாமல் காண்பித்தது, இவை எல்லாவற்றையும் விட ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டியது. தேர்தல் வேறு வந்ததால் வேறு வழி இல்லாமல் மேலும் பிரச்சனை வளர்க்க விரும்பாமல் கலைஞர் இரு குடும்பத்தையும் சேர்த்து வைத்து தான் அரசியல் சாணக்கியர் என்பதை நிரூபித்தார்.

தற்போது தங்களை நிலை நிறுத்த மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள் விளம்பரத்தில் நடுநிலையான விமர்சனம் என்று கூறுகிறார்கள் இவர்கள் படமே எப்போதும் முதல் இரண்டாம் இடங்களை பிடிக்கிறது அது மொக்கையாக இருந்தாலும். செய்திகளில் கூட தங்கள் பட விளம்பரத்தை முக்கிய செய்தியாக கூறுவது, மீடியா முழுவதும் இவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருப்பது செய்திகளில் (தினகரன் குங்குமம் தமிழ் முரசு வானொலி) இவர்களே வியாபித்து இருக்கிறார்கள். இதனால் மக்கள் இவர்கள் சொல்வதே செய்திகள் என்கிற நிலைமைக்கு வந்து விட்டார்கள். இது தவறான போக்கு. ஒருவர் கையிலே அதி முக்கியமான மீடியா இருப்பது எவருக்கும் நல்லதல்ல.

சன் குழுமம் தற்போது தாங்கள் தான் எல்லாமும் நம்மை அசைக்க முடியாது என்று நினைத்துக்கொண்டு இருந்தாலும் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை அவர்கள் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை. உலகத்தையே தன் விண்டோஸ் மென்பொருளால் கட்டுப்படுத்தி வைத்து இருந்த ஆனானப்பட்ட பில் கேட்ஸ் அவர்களே ஆடி போய் இருப்பதே இதற்க்கு சரியான உதாரணம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு.

http://www.giriblog.com/2009/09/blog-post_17.html

மனோரமா ஆச்சி, ஆண்களைப் பாதுகாக்க எப்போது இயக்கம் தொடங்கப் போறீங்க?

ஆண்மைக்குறைவுள்ள ஆண்களிடம் இருந்தும், `எய்ட்ஸ்' நோய் உள்ள ஆண்களிடம் இருந்தும் பெண்களை காப்பாற்றுவதற்காக, புதிய இயக்கம் தொடங்கப்போவதாக நடிகை மனோரமா கூறியுள்ளார்.

இது செய்தி.

சரி. பெண்மைக் குறையுள்ள, பெண்மையே இல்லாத மற்றும் "எயிட்ஸ்" நோய் உள்ள பெண்களிடமிருந்து அப்பாவி ஆண்களைக் காப்பாற்றுவதற்கு அந்த மனோரமா அம்மையார் ஏன் ஒரு இயக்கம் தொடங்கக் கூடாது? ஏன் இந்த ஓரவஞ்சனை, அதுவும் ஒரு ஆணைப் பெற்ற தாயாக இருந்தும்?

ஆண்கள் மட்டும்தான் நோயுள்ளவர்களாக இருப்பார்களா? பெண்களுக்கு நோய்களே இருக்காதா? அவற்றை மறைத்து திருமணங்களே நடப்பதில்லையா? திருமணத்திற்கப்புறம் நோயாளி மனைவிகளை வைத்துக் கொண்டு அல்லாடும் கணவன்மார்கள் எத்தனை பேர்!

இல்லற வாழ்வு மீதும், ஆணுடனான கலவை மீதும் இயல்பாகவே வெறுப்புணர்வு கொண்ட பெண்கள் (frigidity), ஓரினச் சேர்க்கையில் நாட்டம் கொண்ட பெண்கள் (lesbians), மாதவிடாய் நேரங்களில் பயங்கர வன்முறையுணர்வுடன் தாக்கத்தொடங்கும் நோய் (ENDOMETRIOSIS) கொண்ட பெண்கள், வெள்ளை வெட்டை போன்ற பெண்ணுறுப்பு சம்பந்தமான சீக்குகளுடன் உள்ள பெண்கள், டிப்ரஷன், ஹிஸ்டீரியா போன்ற மனோவியாதி கொண்ட பெண்கள் - இவர்கள் போன்றவர்களுடைய அனைத்து நோய்களையும் மறைத்து பட்டுப் புடவை, சல்வார் சூட் போட்டு அலங்கரித்து ஆண்களிடம் கட்டிக் கொடுத்து விடுகிறார்களே, அந்த ஆண்களை யார் காப்பாற்றுவது?

தமிழ்நாட்டில், கள்ளக்காதல் கொலைகள் பெருகுவதற்கு, ஆண்மைக்குறைவு என்ற குறைபாடுதான் முக்கிய காரணமாம், இந்த மனோரமா அம்மையார் கண்டுபிடித்திருக்கிறார். இதற்கு அவருக்கு நோபெல் பரிசு கொடுக்கவேண்டும்!

பள்ளி நாட்களிலேயே கள்ள உறவு கொண்டு பின் அதை அப்படியே மறைத்துவிட்டு, குனிந்த தலை நிமிராத கன்னிப் பெண்போல் நடித்து, அதை நம்பிய ஒரு அப்பாவி ஆணுடன் திருமணம் செய்து கொண்ட பின்னும் அந்தப் பழைய கள்ள உறவு விடாமல் தொடரும் கேசுகள் எத்தனை எத்தனை? என்னதான் கணவன் படுக்கையறையில் திருப்தி செய்தாலும், ஆசை அடங்காமல் அலைபாயும் மனம் கொண்ட பெண்கள் எத்தனை பேர்! அத்தகைய செக்ஸ் வெறியால் அவர்கள் தங்கள் குழந்தைகளையே கொல்லத் துணியும் கேசுகள் எத்தனை!

தன் மனைவியின் பாலியல் தொடர்பான நடத்தைகளையும் குறைபாடுகளையும் ஆண்மகன் வெளியில் சொல்வதில்லை. ஆனால் ஒரு ஆணை அவன் ஆண்மைக் குறைவுள்ளவன் என்று எளிதாகக் கூறிவிடுகின்றனர்.

சமீபத்தில் கர்நாடகாவில் அரசு சார்ந்த அமைப்பு ஒன்று சுயம்வரம் நிகழ்த்தியது. அப்போது பெண்களின் கன்னித்தன்மையை சோதனை செய்தார்கள் என்றும், அது பெண்களுக்கு எதிரான செயல் என்றும் "ஐயகோ, பெண்ணினத்தையே கேவலப்படுத்திவிட்டார்களே" என்று கூக்குரலிட்டனர் பல பெண்ணிய வியாதிகளும் சில ஜொள்ளு பெட்டைக் கிழவர்களும். ஆனால் அந்த சோதனைகளில் சில பெண்மணிகள் கர்ப்பமாக இருந்ததைக் கண்டு பிடித்தனர். அதனால் தப்பித்தனர் ஆண்கள்!

ஆனால் இப்போது மனோரமா ஒட்டுமொத்த ஆணினத்தையே கேவலப் படுத்திப் பேசியிருக்கிறார். அதை எதிர்த்து ஒரு குரலும் இல்லை. வெட்கக்கெடு!

பெண்கள் திருமணத்திற்கு முன் பெண்கள் பாலுறவு கொண்டிருக்காமல் கன்னித்தன்மை உள்ளவர்களா, திருமணத்திற்கு முந்தைய உல்லாசங்கள் மூலம் அபார்ஷன் செய்து கொள்ளாதவர்களா, அல்லது குறைந்த பட்சம் கர்ப்பிணியாகவாவது இல்லாமல் இருக்கிறார்களா எனபதைக் கண்டறிவது முக்கியம் என்று "வீர மறத்தி" மனோரமா அவர்கள் பாடுபடவேண்டும். செய்வார்களா!

http://tamil498a.blogspot.com/2009/09/blog-post_693.html


நடிகர் விஜய்யின் பேட்டியின் போது நடந்த சுவாரஸ்யங்கள்

Monday, September 14, 2009

டந்த ஞாயிறு மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் விஜய் பேட்டியின் போது நடந்த சில நிகழ்வுகள்...

* சரியாக ஒரு மணிக்கு பேட்டி கொடுப்பார் என்று சொல்லப்பட்டது,சரியாக பேட்டி ஒரு மணி இருபது நிமிடம் அளவில் ஆரம்பமானது.


* கல்யாண மண்டபத்தின் வாசலில் ஏழெட்டு போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தார்கள்.


* விஜய் பேட்டி கொடுக்கும் மேஜையின் மீது இருபதுக்கும் மேற்பட்ட டி.வி மற்றும் இணைய தளங்களின் மைக்குகள் இருந்தன,சேனல்களுக்கிடையில் அவர்களுடைய லோகோக்களை காட்டுவதற்காக ஒரு சேனல்காரர் மைக்கை தூக்கி வைப்பதும்,மற்றொரு சேனல்காரர் அதை இறக்கி வைத்து தன்னுடைய சேனலுடைய மைக்கை மேலே தூக்குவதுமாக சேனல்காரர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.


* வசந்த் டி.வி சேனல் சார்பில் மேஜையில் இரண்டு லோகோ பொருத்தப்பட்ட மைக்குகள் வைக்கப்பட்டன, இதற்கு மற்ற சேனல்காரர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்கள்.ஆனால் வசந்த் டி.வி நிருபர் அதை அகற்றவில்லை, இதை பார்த்த கலைஜர் டி.வி நிருபர் தன்னுடைய டி .வி சார்பிலும் இரண்டு மைக்குகளை மேஜையில் வைத்தார்.


* விஜய் மேடைக்கருகே வந்தவுடன் போட்டோகிராபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு வெகு நேரம் புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.இதனால் பின்னால் இருந்த சேனல்கார்கள் கத்தி கூப்பாடு போட சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.


* ஒவ்வொருவராக கேள்விகளை கேட்காமல் ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கும் போது மற்றொருவர் இடையில் புகுந்து கேள்வியை கேட்டார், இதனால் விஜய் எந்த கேள்விக்கும் முழுமையான பதிலை தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது, இதை கவனித்து கடுப்பான ஒரு நிருபர் தயவு செய்து பதிலை முழுமையாக சொல்லியவுடன் அடுத்த கேள்வியை கேட்கும்படி சக நிருபர்களிடம் குறைபட்டுக் கொண்டார்.

* கேட்கின்ற பெரும்பாலான கேள்விகளுக்கு விஜய் தெளிவான பதில்களை தரவில்லை, சில கேள்விகளுக்கு நடக்கலாம்,இருக்கலாம்,வரலாம் என்று ஒற்றை சொல்லை பதிலாக தர பல நிருபர்கள் கடுப்பானார்கள்.

* குறிப்பாக ராகுல்காந்தியின் சந்திப்பு பற்றி அதிகமாக கேள்விகள் கேட்கப்பட்டது, எல்லாவற்றுக்கும் நிதானமாக யோசித்து தான் பதில்களை சொன்னார்.

* சரியாக இருபது நிமிடங்கள் தான் விஜய் பேட்டியளித்தார். நிருபர்களிடமிருந்து தொடர்ந்து ராகுல்காந்தி, இலங்கை தமிழர்கள் சம்பந்தமான கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டது,இதை கவனித்த விஜய் அப்பா சந்திரசேகர் எங்கே சிக்கலில் மாட்டி விடுவார்களோ? என்று பயந்து விஜய்யை வேகமாக அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினார்.

* பேட்டி முடிந்ததும் பத்திரிகையாளர்களுக்கு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,ஆனால் விஜய் ரசிகர்களும் அங்கு வந்திருந்ததால் சாப்பாடு இல்லாமல் பல நிருபர்கள் அங்கிருத்து வெளியேறி பக்கத்தில் உள்ள வசந்த பவன் ஹோட்டலில் அவர்களுடைய சொந்த செலவில் சாப்பிட்டு சென்றார்கள்

http://www.sakthipages.com/2009/09/blog-post_6629.html


No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!