முன்பெல்லாம்போரென்றால் சண்டைக்களத்தில்தான் சாவுகள் நடக்கும். பொதுமக்கள் -குறிப்பாக குழந்தைகள், பெண்களின் மரணம் என்பது அபூர்வமானது. இரண்டாம் உலகப் போர்வரை அப்படித்தான் பொதுவில் இருந்தது. மனிதகுலமாய் நாம் மிகவும் நாகரிகமடைந்துவிட்டோம் என்று சொல்லிக்கொள்ளும் இக்காலத்தில்தான் போர்கள் அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்து நடக்கின்றன. தயக்கங்கள் எதுவுமின்றி அனைத்துலக ஆதரவுடன் நிராயுதபாணிகளான மக்கள் மீது நடத்தப்பட்ட முழுவீச்சிலான முதற்போர் தமிழ்ஈழ மக்கள் மீது சிங்களப்பேரினவாதம் நடத்திய இன அழித்தல் போர்தான்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின், உள்ளபடியே போர்களில்லா உலகினை உருவாக்க வேண்டுமென்ற உளமார்ந்த அக்கறை உலகின் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பலருக்கும் இருந்தது. ஐக்கியநாடுகள் அவை மலர்ந்தது போர்களில்லா உலகுகாணும் இத்தகையோரது கனவிலும், உறுதியிலும், உழைப்பிலும்தான். போரின் கொடுமை அதனூடே வாழ்ந்து அனுபவித்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அவ் வகையில் ஐ.நா. அவை தொடங் கப்பட்டபோது அதனை நிரப்பிய தலைவர்களும் அதிகாரிகளும் மானுடத்தை நேசித்தவர்களாய் இருந்தார்கள். உலக அமைதியின் ஆர்வலர் களாய் இருந்தார் கள்.
இன்று அவ் வாறில்லை. மிகப்பெரு வாரியாக ஐ.நா. அமைப்புகளை நிரப்பியிருப்பவர்கள் உறுப்பு நாடுகளின் அரசுகளால் அனுப்பப்படு கிறவர்களென்பதைவிட உறுப்பு நாடுகளது உளவுத் துறைகளால் தெரிவு செய்யப்படுகிறவர்கள். ஐ.நா. அவையை இன்று உண்மையில் இயக்குவது உலக நாடுகளின் அரசியற் தலைமைகளென்பதைவிட உளவு அமைப்புகளென்பதே உண்மை.
எனவேதான் உறுதியான அரசியல் ஏற் பாடுகளுக்கான உத்தரவாதம் ஏதுமின்றி நார்வே நாடு கொடுத்த வாய்ச்சொல் நம்பிக்கையின் அடிப்படை யில் மட்டுமே விடுதலைப்புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குச் சென்றபோது மிகவும் அச்சமாக இருந்தது. ஏற்கனவே பாலஸ்தீன மக்களின் போராட்டப் பின்னடைவுக்கு நார்வே நாட்டின் இடைப்பாட்டில் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளும் ஒரு காரணம் என்ற கருத்தும் எனக்கிருந்தது. சிங்கம்போல் ஒரு காலத்தில் நிமிர்ந்து நடந்த யாசர் அராபத் டேய்டன் நீண்ட பேச்சு வார்த்தைகள் தோற்றபோது கழுத்துச் சுருக்கிடப்பட்ட பரிதாபமான நாய்க்குட்டிபோல் ஆகியிருந்தார். அந்நிலை தமிழீழ விடுதலைப் போராட் டத்திற்கும் நடந்துவிடுமோ என்ற நிஜமான அங்கலாய்ப்பு இருந்தது.
போரைப்போல் கொடுமையும் குற்றமும் பாவமும் வேறொன்றில்லை. ஆயினும் யதார்த்தம் என்ன வென்றால் "வலுநிலைச் சமநிலை'தான் இன்று உலகில் பல பெரும் யுத்தங்களை தவிர்த்து வருகிறது. ரஷ்யாவிடமும் அணு ஆயுதங்கள் உள்ளிட்ட பெரும் அழிவாயுதங்கள் இருப்பதால்தான் அமெரிக்கா அந்நாட்டுடன் நேரடியான போருக்குப் போகவில்லை, போகாது. சீனா விஷ யத்திலும் இதுதான் உண்மை.
மிதவாதத் தலைவர்களை கொன்ற ழித்தது, சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொண்டது என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல்வேறு தவறுகள், குறைகளுக்கும் அப்பால் அவர்களை நாம் ஏற்றுக்கொண்டமைக்குக் காரணம் அவர்களது ராணுவ பலம் மட்டுமே ஈவிரக்கமில்லா சிங்களப் பேரின வாத அரசியலுக் கெதிரான தமி ழரின் அரசியற் பாதுகாப்பு அரண் என்ற கருத்து நிலைப்பாடே. அந்த சாதக நிலையை, உண்மையில் தமிழருக்கான ஒரே பாதுகாப்பு மிச்சமிருப்பை பேச்சு வார்த்தைகளினூடாக விடுதலைப்புலிகள் இழந்துவிடுவார் களோவென்ற அச்சம் நிஜமானதாயிருந்தது. பகிரங்கக் கடிதமெழுதத் தலைப்பட இதுவே முக்கிய காரணம்.
இன்னொன்று உலக அரங்கில் சட்ட பூர்வமான ஓர் அரசுக்கு இருக்கக்கூடிய அரசியற்பலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்குதானும் ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்களுக்கு இல்லை. அமெரிக்கா -ரஷ்யா -இந்தியா போன்ற ஏதேனும் பெரிய நாடுகள் புரவலராய் அவர்களை சுவீகரித்துக்கொண்டாலொழிய, அப்படியான வசந்தநிலை விடுதலைப்புலிகளுக்கோ, தமி ழருக்கோ இருக்கவில்லை. விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தி அழிக்க வேண்டுமென்பதில் இந்திய வெளியுறவு- பாதுகாப்புக்கொள்கை தெளிவாயிருந்தது. இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் தனது மேலாண்மை திட்டங்களின்படி அமெரிக்காவும் புலிகளை பலவீனப்படுத்தவேண்டுமென்பதை கொள்கை யாகக் கொண்டிருந்தது. 2002-வாக்கில் புலிகளின் அபார ராணுவ வெற்றிகளை மதிப்பீடு செய்து, ""புலிகளையும் உள்ளடக்கிய தீர்வொன்று காணவேண்டும்'' என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா பரிசீலிக்கத் தொடங்கியது. ஆயினும் புலிகளை அரசியல்-ராணுவ ரீதியாக பலவீனப்படுத்தவேண்டுமென்ற கொள்கையில் பெரிய மாற்றம் நிகழவில்லை. நார்வே கள மிறக்கப்பட்டது இந்நிலைப்பாட்டின் பின்னணி யில்தான்.
ஆதலால்தான் அனைத்துலக கண்காணிப் பாளர்களை புலிகள் தமது ஆளுகைப் பரப்பில் அனுமதித்தபோது மிகவும் அச்சமாக இருந்தது. முப்பது ஆண்டுகள் இலங்கை நேரடி யுத்தமும், இந்தியா-அமெரிக்க நாடுகள் மறைமுக யுத்தமும் நடத்தி சாதிக்க முடியாத ராணுவ அனுகூலங்களை பேச்சு வார்த்தை காலத்தில் "கத்தி யின்றி-ரத்தமின்றி'ப் பெற் றுக்கொள்வார்கள் என கடந்த இதழ் கட்டுரை யில் குறிப்பிட்டிருந்தது இதனையொட்டிதான். இரண்டு விஷயங்கள் இத்திசையில் நடக்குமென அஞ்சி னோம்.
அதிநவீன உளவுக் கண்காணிப்பு ஏற்பாடுகளை உலக சக்திகள் புலிகளின் நிலப்பரப்பில் எளிதாக விதைக்குமென்ற அச்சம் முதலானது -அதுபோல இயக்கத்திற்குள் பிளவுகளையும் ஏற்படுத்துவார்கள் என்ற அச்சம் இரண்டாவது. இதனையே எனது பகிரங்கக் கடிதத்திலும் எழுதினேன்.
இதனைச் செய்தது நிச்சயம் போரை விரும்பியும், பேச்சுவார்த்தைகளை நிராகரித்துமல்ல. தமிழ் இனத்தை நேசிக்கும் ஓர் அரசியல் விஞ்ஞான மாணவனாய் மட்டுமே எழுதினேன். யார்தான் போரையும் அதன் ஈவிரக்கமில்லா கொடுமைகளையும் விரும்ப முடியும்?
தொடர்ந்தும் எழுதினேன் :
* போர்க்களத்தில் நிற்கும்வரை சிறு சிறு சச்சரவுகளும், தனிநபர் ஈகோ மோதல்களும் பெரிதாக வராது. ஆனால் சண்டையில்லா காலத் தில், உரிய அரசியற் கல்வி இல்லையென்றால் இவையெல்லாம் பெரிதாக மாறும்.
* போருக்கு முகம் கொடுத்து வாழப் பழகிவிட்ட மக்களுக்கு சண்டை நிறுத்தம் மிகப் பெரிய ஆறுதலே. அதேவேளை மீண்டுமொரு யுத்தத்திற்கு மக்களை ஆயத்தம் செய்வது சவால் நிறைந்ததாயிருக்கும்.
* இயக்க உறுப்பினர்கள் சண்டை நிறுத்த காலத்தில் தங்கள் குடும்ப உறவுகளை இயல்பாகவே புதுப்பிப்பார்கள். மீண்டும் யுத்தம் வருமேயானால் முந்தைய கால அர்ப்பண அளவினை இது குறைக்க வாய்ப்புண்டு. மூத்த தளபதிகள் தங்கள் குடும்பம், பிள்ளைகள் என்று உணர்வுரீதியாக நெருக்கமாவார்கள்.
* ஒருவரையொருவர் குறை கூறி வசைபாடி வாழும் பண்பினை மரபணுவில் கொண்ட இனம் தமிழ் இனம். வெளிநாடுகளில் விடுதலைப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒருவரையொருவர் குறைகள் கூற வருவார்கள். அவை சார்ந்து நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் கட்டுக்கோப்பை குலைக்கும் -காட்டிக்கொடுக்கும் வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
* சண்டை நிறுத்த காலத்தில் வெளி நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தேசம் காண வருவார்கள். ரேபான் கண்ணாடி, பெர்முடாஸ், சாக்லேட் பைகள், விஸ்கி போத்தல்களென மேற்குலகின் மினுக்கங்களோடு வருவார்கள். அதேகாலத்தில் தன் உறவுகளைக் காண ஊருக்குப் போகும் போராளியின் வீட்டில் அதே வறுமையும் இயலாமைகளும்தான் தொடர்ச்சி யாய் இருக்கும். அவனது மனதிற்குள் என் னென்ன உணர்வுகள் எழுமென்பது யூகிக்க முடியாததல்ல.
* எந்த மேற்குலக நாடும் இந்தியாவைக் கடந்து ஓர் அளவுக்கு மேல் தமிழர் பிரச்சனையில் இயங்காது. இது யதார்த்த உண்மை. பேச்சு வார்த்தை விருப்பங்களை யும், வியூகங்களையும் நார்வே வந்து சொல் வதற்குப் பதில் விடுதலைப் புலிகள் இயக்கமே இந்தியாவுக்கு இரண் டாம் வழிகள் மூலம் சொல்லி நல்லுறவு தேடியிருக்கலாம்.
* பேச்சுவார்த்தை களுக்குப் போயிருக்கக்கூடாது. போன பின்பு அதனை செவ்வனே கையாண்டிருக்க வேண்டும். உலகத் தமிழரிடையே அளவின்றிக் கிடக்கும் அரசியல், சட்ட, ராஜதந்திர வளங்களை ஒருமுகப்படுத்தி இலங்கையை- உலகை எதிர் கொண்டிருக்க வேண்டும். அது நடக்க வில்லையென்பதும், உணர்ச்சிவசப்படும் இளவயதுக் காரர்களைப்போல் பேச்சுவார்த்தைகளை அணுகியதும் மிகப்பெரிய தவறாகும். உலகின் நல்லெண்ணெத்தை வீணடித்துவிட்டதாகவே தெரிகிறது.
இவற்றோடு இன்னும் சிலவற்றை அக்கடிதத்தில் எழுதியிருந்தேன். இத்தருணத் தில் இதனை எழுதக்காரணம் இரண்டு. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின் னடைவுக்குக் காரணங்களென வேலுப்பிள்ளை பிரபாகரன் முல்லைத்தீவில் நின்றுகொண்டு கூறியதாகச் சொல்லப்படுவனவற்றில் முத லாவது -""பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துக் கொண்டு களத்தின் ராணுவச் சாதக நிலையை இழந்தது. ஏனைய நான்கு காரணங்கள் என்ன?
(நினைவுகள் சுழலும்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16974
முல்லைத்தீவுகடற்புறத்தே நின்றுகொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாரியபின்னடைவுக்கு முதற்காரணமாய் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறிப்பிட்டது.
"2001-ம்ஆண்டு தன்னிச்சையான சண்டை நிறுத்தம் அறிவித்து அனைத்துலக வழிநடத்துதலில்2002-ம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துக் கொண்டமையினைத்தான். சமாதானப் பேச்சுவார்த்தைகள் துரோகத் தனம் போர்த்தஅரசியல்-ராணுவப்பொறி என்பதை கணித்தறிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்தவறியதெப்படி என்ற கேள்வி இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது.
நான்மிகவும் மதிக்கும் உலகத் தமிழர்களில் ஒருவர் தங்கவேலு. அப்பழுக்கில்லாதமிழ் ஈழ ஆர்வலர். கனடா நாட்டு டொராண்டோ நகரில் இப்போது வாழ்ந்து வரும்இவர் கூர்த்த மதியுடையவர், அடர்த்தியான எழுத்தாளர். நக்கீரன் என்றபுனைப்பெயரில் நீண்ட காலமாய் எழுதி வருகிறார். இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் "ஓஸ்லோ' நகரில் நிறைவுற்ற நாளில் மின் அஞ்சல் கட்டுரையூடாகஇவர் குறிப்பிட்டிருந்தார். ""முப்பது ஆண்டுகளாய் வேலுப்பிள்ளைபிரபாகரனும், அவரது போராளிகளும் சாதித்த யாவும் இரண்டே மாதத்தில்பேச்சுவார்த்தைகளூடாய் இழக்கப்பட்டு விட்டன'' என்று. மறக்க முடியாத இந்தவரிகள் அவரது வலி மட்டுமல்ல, பலரது மனக்குமுறலாயும் இருந்தது.
அதேகாலகட்டத்தில் சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் வன்முறையற்ற வழியில்சிக்கலான தேசிய-இனப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது குறித்த கருத்தமர்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ்,எரித்ரேயா, ருவாண்டா போன்ற நாடுகளிலிருந்து கருத்துரையாளர்கள்வந்திருந்தார்கள். நானும் பங்கேற்றுக் கலந்து கொண்டேன். இரவுஉணவுக்குப்பின் ஓர் தனித்த உரையாடலின் போது எரித்ரேயா நாட்டிலிருந்துவந்திருந்தவர் -பெயர் மறந்து விட்டேன், அவர் சொன்னார்: ""என்னகாரணங்களுக்காக விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துக் கொண்டார்களென்று தெரியவில்லை. பலமான நிலையில் நின்று கொண்டு தேடப்படும் சமாதானம்என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் இன்றைய உலக ஒழுங்கு அதற்குச்சாதகமானதாயில்லை. பேச்சுவார்த்தையூடாக அவர்கள் வீழ்த்தப் படுவார்களென்றேநான் நினைக்கிறேன், அஞ்சுகிறேன்'' என்றார்.
அந்தஎரித்ரேய நாட்டுக்காரர் இன்னொன்றையும் அன்று குறிப்பிட்டார். அன்று அவர்கூறியபோது அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று நடந்துவிட்டவற்றை மீளாய்வு செய்கையில் தமிழர்களாகிய நமது ஆய்ந்தறியும்குறைபாடுகள் நிறையவே புலப்படுகின்றன. அந்த மனிதர் சொன்னார்: ""மரபுரீதியான போர் அணிகளை விடுதலைப்புலிகள் உருவாக்கியிருக்கிறார்கள். அதுமிகப்பெரிய சாதனைதான். இந்த போர் அணிகள்தான் அவர்களது இப்போதையபெருவெற்றிகளை சாத்தியப்படுத்தியுள்ளன. ஆனால் உலகம் அதிநவீனபோர்க்கருவிகளை இலங்கை அரசுக்கு வழங்க முன்வரும் பட்சத்தில் இதே மரபுப்போரணிகள் விடுதலைப்புலிகளுக்கு சுமையாக மாறும்.
ஆதலால்என்னைப் பொறுத்தவரை அவர்கள் ஓர் திறமான கொரில்லா சக்தியாகவே தொடரவேண்டும். சமாதான காலத்திலும் கூட அவர்கள் கொரில்லா வாழ்க்கையே வாழவேண்டும். குறைந்தபட்சம் மரபுப் போரணி கள் மிகக்குறுகிய கால அளவில்மீண்டும் கொரில்லா அணிகளாக மாறுவதெப்படியென்ற உத்திகளையேனும் அவர்கள்திட்டமிட்டு, பயிற்றுவித்து எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.இல்லையென்றால் உலகம் சதி செய்யும் நாளில் அவர்கள் பேரழிவைசந்திப்பார்கள்'' என்றார்.
எத்தியோப்பியாவுடன்நீண்ட போர் நடத்தி விடுதலை பெற்ற நாடு எரித்ரேயா. தமிழ் ஈழ விடுதலைப்போராட்டத்திற்கு இணையாக பிறிதொன்றை ஒப்பீடு செய்ய முடியுமென்றால் அதுஎரித்ரேய விடுதலைப் போராட்டம்தான். இன்றும் ஐ.நா. அவையில் தமிழீழமக்களுக்கான குரல்களில் ஒன்றாக தம்மை எப்போதும் முன்வந்து அளிக்கும் இந்தநாட்டின் மக்கள் மகத்தானவர்கள். ஆயுத பலத்தை மானுட உணர்வுகளின் ஆற்றல்முறியடிக்குமென்பதை தமிழீழ மக்களுக்கு முன்னதாகவே நிரூபித்தவர்கள். அந்தநாட்டின் மனிதர் அக்கறையுடன் கூறிய மேலே நான் சொன்ன கருத்து அப்போதுஎனக்கு உரைக்கவில்லை. ஆனால் அவரது கூற்று அச்சொட்டான தீர்க்கதரிசனம்என்பதை நடந்துவிட்ட யாவும் நமக்குக் காட்டி நிற்கின்றன. கிளிநொச்சிவிழுவதற்கு முன்னரேயே விடுதலைப் புலிகள் பேராயுதங்களை தாரை வார்த்துவிட்டுகொரில்லா அணிகளாய் வன்னிக் காடுகளுக்குள் பரவியிருந்தால் போராட்டம்பாதுகாக்கப்பட்டிருக்குமே என்றெல்லாம் இன்று எண்ணம் அங்கலாய்த்துக்களைப்புறுகிறது.
போராட்டப்பின்னடைவுக்கு இரண்டாவது காரணமாக பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டது தளபதிபால்ராஜ் அவர்களின் இழப்பு. தமிழீழ வரலாற்றின் மகத்தான இம்மாவீரனை மனம்சிலிர்த்து முன்பேயே நான் பதிவு செய்துவிட்டதை வாசகர்கள் அறிவீர்கள்.""பாக்ஸ் சண்டை'' என அறியப்படும் எதிரியின் அணிகளை ஊடறுத்து அவர்களுக்குப்பின்புறமாய் நின்று கொண்டு சண்டையிடும் வித்தகத்தில் பால்ராஜ் கில்லாடி.""பால்ராஜ் இருந்திருந்தால் அன்று தாளையடி-செம்பியன்பற்று கடற்கரையில்தரையிறங்கி வதிரையனில் நின்று பாக்ஸ் சண்டை பிடித்து ஆனையிறவை வீழ்த்த வழிசெய்ததுபோல் இப்போது ஆழ்கடல் வழியாக "சாலை' கரையில் தரையிறங்கி வள்ளிபுனம்ஆற்றங்கரையோரமாய் ஊடறுத்து புதுக் குடியிருப்பு இரனைப்பாலை பகுதிகளில்நின்றிருந்த பத்தாயிரத்திற்கும் மேலான ராணுவத்தினரின் கதையைமுடித்திருப்பான். பால்ராஜை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆமிக்காரன்ஓடியிருப்பான்'' என்று பிரபாகரன் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. களத்தின்இறுக்கமான தருணத்தில் கூட தன்னிலும் மேலானதோர் தளபதி இருந்தான் -அவன்பால்ராஜ் -அவன் இருந்திருந் தால் முல்லைத்தீவு பேரழிவு நடக்காதபடி சண்டையிட்டிருப்பான்'' என்று சொல்ல முடிந்தமை பால்ராஜின் தனித்துவத்தையும்அதனிலும் மேலாய் பிரபாகரனின் உயர்வையும் வெளிப்படுத்தியதாகவே பதிவு செய்யவேண்டியுள்ளது.
விடுதலைப்போராட்டத்தின் பின்னடைவுக்கு மூன் றாவது காரணமாய் வேலுப்பிள்ளை பிரபாகரன்உரைத்தது கருணம்மானின் துரோகம். கருணம்மானின் துரோகம் இரு பெரும்தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. ஒன்று போர் நடத்தும் ஆளணிகள் விடுதலைப்புலிகளுக்கு வெகுவாகக் குறைந்தது, இரண்டு இயக்கம், அதன் போர் உத்திகள்,முக்கிய நபர்கள், தொடர்பான முக்கிய தகவல்களை இலங்கை ராணுவத்திற்குக்கொடுத்து உதவியதால் விடுதலைப்புலிகளை களத்தில் எதிர்கொள்வது இலங்கைராணுவத்திற்கு மிகவும் எளிதாயிற்று. பதினெட்டு ஆண்டுகளாய் அடி வாங்கிமட்டுமே பழகி திருப்பித் தாக்குதல் நடத்த தடுமாறிக் கொண்டிருந்த இலங்கைராணுவத்திற்கு விடுதலைப் போராட்டத்தை திருப்பிடியத்துத் தாக்கியழிக்கும்முக்கியமான உள்ளீடுகளைத் தந்ததும், காடுகள் வழி புலிகளின் பகுதிகளைஊடுருவிச் செல்லும் உத்திகளை, ஆளணிகளைத் தந்ததும் கருணம் மான்தான்.
உண்மையில்கருணம்மானை எப்படியேனும் சரி செய்து போராட்டத்திற்காய் வைத்திருக்க வேண்டுமென்றே இறுதிவரை பிரபாகரன் விரும்பியிருக் கிறார். தன்னுடன் வந்துவன்னியில் நிற்கும்படி பலமுறை அழைத்திருக்கிறார். ""என்னோட நின்டாசரியாயிடுவான். எதென்டாலும் கதைத்து சரியாக்கிடலாம்'' என்று தான் மூத்ததளபதிகளிடம் கருணாவுக்காய் பேசியிருக்கிறார். ஆனால் பிரபாகரன் கருணாவைநம்பிய அளவுக்கு கருணா தன்னை வளர்த்து உயர்த்திய தலைவனை நம்பவில்லை.தமிழர்கள் வரலாற்றில் ஒருபோதும் வீரமின்மையால் வீழ்ந்ததில்லை-துரோகத்தால்தான் வீழ்ந்து வருகிறார்களென்பதற்கு கருணா மீண்டுமொரு உதாரணமானான். அதேவேளை கருணம்மான் தலைவனோடு களத்தில் நின்றிருந்தால் தமிழீழவிடுதலை வரலாறு வேறு மாதிரியாய் இருந்திருக்கும்.
விடுதலைப்போராட் டத்திற்கு பின்னடைவு தந்ததாய் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறிப்பிட்டது 2004-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் கரையோரப் பகுதிகளை ஊழித்தாண்டவமாடித் தாக்கிய சுனாமி. விடுதலைப்புலிகளது போர்க்கள ஆற்றலின் முதுகெலும்பாக நின்றது கடற்புலிகள் பிரிவு. கடற்புலிகளின் வளங்கள் பெருவாரியாககடற்கரை சார்ந்தே நிறுத்தப்பட்டிருந்தன.
நீண்டகாலமாய் சிறுகச் சிறுக கடற்புலிகள் கட்டியெழுப்பிய வளங்கள், பணிமனைகள்,ஆய்வுக்கூடங்கள் என கணிசமானவை சுனாமியால் விழுங்கப்பட்டன. சுனாமி விளைத்தஇழப்புகளின் விபரம் அப்போது புலிகளால் வெளியிடப்படவில்லை. ஆனால் போராட்டவலு குறைந்ததில் சுனாமிக்கு உள்ள பங்கை போரின் உச்ச நாட்களில் பிரபாகரன்அவர்கள் குறிப்பிட்டதை முக்கியமானதாகவே கருதுகிறேன்.
ஐந்தாவதாகபிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டது எல்லோரும் மிகப்பெரும் வசதியென்றும்துணையென்றும் கருதிய "அலைபேசி', "கை பேசி' -மொபைல் தொலைபேசிக் கலாச்சாரம்.கடந்த பத்து ஆண்டுகளில் கை பேசி அடிமைகளாய் களத்தில் நின்ற பலரும்ஆகிவிட்டிருந்தனர். அதன் எதிர்விளைவுகளை எவரும் சரிவர மதிப்பீடுசெய்யவில்லை. 2002-ம் ஆண்டுக்குப் பின், குறிப்பாக இந்தியாவும்உலகநாடுகளும் இலங்கை ராணுவத்திற்கு உயர் தொழில்நுட்ப உள்ளீடுகள் வழங்கத்தொடங்கியபின் புலிகள் -அவர் தம் தளபதிகள் -ஆயுதக் கொள்வனவுகள்- கொழும்புஉள்ளிட்ட பிற பகுதிகளிலுள்ள அவர்களது வளங்கள் -போர்க்களத் திட்டங்கள் எனஅனைத்து தகவல்களையும் இலங்கை ராணுவத்தால் புலிகளின் கைபேசிகளைஇடைமறித்துச் சேகரிக்க முடிந்தது.
வேலுப்பிள்ளைபிரபாகரன் அவர்கள் பதிவு செய்த மேலும் இரண்டு காரணங்களை இப்போதைக்கு இங்குநான் மறு பதிவு செய்ய விரும்பவில்லை. காலம் வருகையில் அவற்றை நிச்சயம்வரலாற்றிற்காய் எழுதுவேன். இவையெல்லாம் பேசி முடித்தபின் நிறைவாக அவர்கூறியது புதியதோர் போர் முழக்கம். பண்டார வன்னியனின் வாளை தமிழரின்விடுதலைக் குறியீடாக்கி அவர் நிகழ்த்திய மறக்க முடியாத -மறக்கக் கூடாதஅந்த பேருரை.
(நினைவுகள் சுழலும்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17256
எங்களை செதுக்கிய சிற்பிகள் பெரியாரும் பிரபாகரனும்தான்:சீமான் பேச்சு
கோயம்புத்தூரை அடுத்த சூலூரில் பெரியாரின் 131-வது பிறந்தநாள் விழா நடந்தது. விழாவில் பெரியார் சங்க தலைவர் குளத்தூர் மணி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சீமான் கலந்து கொண்டு பேசினார்.
''எத்தனைமுறை எங்களை சிறைப்பிடித்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. ஏன் என்றால் எங்களை செதுக்கிய சிற்பிகள் பெரியாரும் எங்கள் தம்பி பிரபாகரனும்தான்.
தமிழகத்தில் 1 கிலோ அரிசி 1 ரூபாய் விற்கப்படுகிறது. ஆனால் இலங்கையில் 1 கிலோ அரிசி 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒருவேளை சாப்பாட்டுக்கு 1000 ரூபாய் வரை தேவைப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் போர் நிறுத்தம் மட்டும் அங்கு இல்லை.
சிங்கள ராணுவம் தமிழக மீனவர்களை சுட்டு கொல்லும்போது ஏன் இந்திய ராணுவம் பாதுகாக்கவில்லை என்று தெரியவில்லை''என்று பேசினார்.
தனி ஈழம் குறித்து கருத்து கணிப்பு நடத்த இந்தியா மற்றும் இலங்கை அரசு தயாரா? சீமான் ஆவேசம்!
தனி ஈழம் குறித்து கருத்து கணிப்பு நடத்த இந்தியா மற்றும் இலங்கை அரசு தயாரா என்று திரைப்பட இயக்குநர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை சூலூரில் நடைபெற்ற ஈ.வே.ரா. பிறந்த நாள் விழாவில் பேசிய சீமான்,
உலக நாடுகள் பலவும் பிரிந்தபோது, அதற்கு எந்த எதிர்ப்பும் ஏற்படவில்லை. இலங்கையில் தனி ஈழம் என்றால் மட்டும் எதிர்க்கின்றனர்.
பாகிஸ்தான், வங்கதேசம் என, இன மற்றும் மொழி வாரியாக நாடுகள் பிரிந்தன. பாலஸ்தீன விடுதலைக்கு குரல் கொடுக்கும் மத்தி அரசு ஏன் இலங்கையில் மட்டும் பாரபட்சம் காட்டுகிறது.
விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட போது, தமிழர் மத்தியில் கருத்து கேட்கப்பட்டதா? தனி ஈழம் குறித்து கருத்து கணிப்பு நடத்த இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் தயாரா?
இலங்கையில், தமிழர் மீதான பொருளாதாரத் தடை மற்றும் போர் குறித்து யாரும் கவலைப்படவில்லை. இலங்கை ராணுவத்தை கண்டிக்கவில்லை. மாறாக அவர்களுக்கு உதவிதான் செய்யப்படுகிறது.
ஒன்றரை கோடி சீக்கியர்களுக்கு அளிக்கும் மதிப்பை, ஏழு கோடி தமிழர்களுக்கு காங்கிரஸ் தரவில்லை. உலகத் தமிழ் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் இலங்கையில் தமிழினம் அழிவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இலங்கை ராணுவம், 20 நாடுகளின் உதவியோடு விடுதலைப்புலிகளை அழித்ததாக அறிவிக்கிறது. அப்படியானால், அந்த அளவுக்கு விடுதலைப்புலிகளின் பலம் இருந்திருக்கும். இலங்கை ராணுவத்துக்கும், தமிழர்களுக்கும் இடையே நடக்கும்போர், தமிழனத்துக்கும், உலக நாடுகளுக்கும் இடையிலான போராக மாறும் என்றார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17192காங்கிரஸ் தலைவர்கள் படம் எரிப்பு:திருச்சி பெண் கைது
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில், போட்டியிட 'சீட்' கிடைக்காத ஆத்திரத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் படம் மற்றும் கட்சிக் கொடியை, தீயிட்டு கொளுத்திய பெண் நிர்வாகி, கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாநகராட்சி மேயராக இருந்த சாருபாலா தொண்டைமான், மக்களவை தேர்தலில் போட்டியிட்டதால், கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, 44வது வார்டுக்கான இடைத்தேர்தல், அக்., 7ம் தேதி நடக்கிறது. காங்கிரஸ் கட்சி சார்பில், 6 பேர் விருப்பமனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், ஹேமா என்பவருக்கு சீட் வழங்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த சாருபாலா தொண்டைமானின் ஆதரவாளரான கல்யாணி என்பவர், தன் வீட்டின் முன், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் படம் மற்றும் கட்சிக்கொடி, கட்சி கரையுடன் கூடிய சேலைகளை, தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
தகவலறிந்த போலீசார், பெண் நிர்வாகி கல்யாணியை கைது செய்தனர்.
உலக தமிழ்மாநாடு நடக்கும் போது ஆர்ப்பாட்டம்: இல.கணேசன்
வேலூர் பாகாயத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர் இல. கணேசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
இலங்கை செல்லும் எம்பிக்கள் குழுவில் காங்கிரஸ். திமுக எம்பிக்கள் மட்டுமன்றி தமிழகத்தின் பிற கட்சி எம்பிக்களும் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையின்போது அரசு வேலை அளிப்பதாகவும் வங்கி கடன் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறுகின்றனர்.
வேளாண் சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
நதிகளை இணைப்பது, கச்சத் தீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை பெற்றுவது, முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை சொந்த ஊர்களில் குடியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 29ம் தேதி தஞ்சையிலும், அக்டோபர் 6ம் தேதி ராமேஸ்வரத்திலும், 8ம் தேதி சேலத்திலும், 9ம் தேதி சென்னையிலும் பி.ஜே.பி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இலங்கை முகாம்களில் 2 லட்சம் தமிழர்கள் அவதிப்படும் நிலையில் கோவையில் உலகத் தமிழர் மாநாடு நடத்துவது தேவையில்லை. இதை கண்டித்து மாநாட்டு பந்தல் முன் பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17226
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com