♥ விஜய் தமிழன்டா! ♥
"காமெடியில ரெண்டு பயலுகளும் என்னை மிஞ்சிடுவாங்கிய போல இருக்கே..."
ராகுல் காந்தி என்ற ஒரு கோமாளி!
தமிழீழத்தில் ஒரு இலட்சம் தமிழர்களுக்கு மேல் கொல்லப்பட்டு, தமிழகமே எழவு வீடாக அமைதியாக கிடக்கிறது. அந்த நேரத்தில் டெல்லியிலிருந்து ஒரு கோமாளி தமிழ்நாட்டுக்கு வந்து இல்லாத கட்சிக்கு ஆள் எடுக்க வந்தால் எப்படி இருக்கும்...?
கற்பனை எல்லாம் செய்ய வேண்டாம்!
அதுவும் அய்ந்தடுக்கு பாதுகாப்போடு வந்த, அந்த காமெடியன் பெயர் ராகுல்காந்தி!
அந்த வருகைக்கு செலவு கோடிகளை தாண்டுகிறது என்கிறது ஒரு செய்திக் குறிப்பு.
அத்தனையும் மக்கள் வரிப்பணம்!
அந்த பயணம் வறுமையை ஒழிப்பது போன்ற நாட்டை முன்னேற்றும் பயணமில்லையாம்.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவாம்.
அந்த மகாத்மாவோடு பேசி கட்சியில் சேர ஆசைப்பட்டாராம். நம்ம அழகிய தமிழ்மகன் விஜய்.
ராகுல்காந்தி சொன்னாராம், நம்ம இளைய தலைவலி விஜய் கிட்ட, "நான் டிவியில சேனல் மாத்தும்போது மட்டும் நீங்க நடனம் ஆடுற அழகை அடிக்கடி பாக்கிறது உண்டு" அப்படின்னு.
காங்கிரஸ் கட்சியில் சேர இந்த ஒத்த தகுதி போதாததா..?
நம்ம விஜய்யும் அடுத்த முதல்வர் என்ற ஆசை வெறியோடு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு, நம்ம காமெடி தம்பி ராகுலிடம் உலக நன்மைக்கான பேச்சு வார்த்தை எல்லாம் நடத்தினாராம்.
35 வயத்திற்குள் இருப்பவர்களை மட்டுமே அதுவும் அதற்கான ஆதாரம் கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே, காங்கிரஸ் உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும் என்றாராம், நம்ம காமெடியன்.
ஆளே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு என்னாவொரு தெனாவெட்டு!
திரைப்படத்தில கதாநாயகனாவும், நிஜவாழ்க்கையில காமெடியனாக போன நம்ம விஜய் நடிக்கிற பத்து படத்தில எப்படியும் எட்டுப் படம் வேற்றுமொழியில இருந்து அப்படியே இறக்குமதியாகும்..
அப்படி வெளிவருகிற படத்துக்கு இவர் வைக்கிற பேரு...
அழகிய தமிழ்மகன்,
தமிழன்...!
இந்த நடிக்கத் தெரியாத நடிப்பு வியாபாரியை பார்த்து ," உங்களுக்கு வயசு 35 க்கு மேல தாண்டியிருச்சு , அதனால உங்கள எங்க கட்சியில சேக்க முடியாது என்றாராம்",ராகுல் காந்தி!
இப்படி காமெடி பண்ணுற நம்ம காமெடியன் ராகுல் காந்திக்கு வயசு எவ்வளவு தெரியுமா?
"39" !
யாரு,யாரை வந்து,எங்க வந்து, எங்கள வேணான்னு சொல்றது...?
என்னங்கடா நடக்குது, தமிழ்நாட்டுல?
ஆள் வளந்த அளவுக்கு அறிவு வளரலன்னாலும், விஜய் தமிழன்டா!
50 ஆண்டுகளுக்கு மேலாக ராகுலின் தாத்தா,பாட்டி,அப்பா ஆட்சி செய்து கிழி கிழியென்று கிழியில், இந்தியாவில் 9 பெரிய முதலாளிகளின் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்து நிற்கிறது!
அதில் இந்திய மண்ணைக்கூட அந்நிய நாட்டுக்கு விற்று சொத்து சேர்த்த அம்பானிகளும் அடக்கம்
சுமார் 300 கேடி கோடீஸ்வர (MP) உறுப்பினர்கள் நாடாளு மன்றம் உள்ளே புகுந்திருக்கின்றன.
உங்களுக்கு தெரியுமா?
ஒரு டீ 5 ரூபாய்க்கு விற்கிற நம் இந்தியாவில் 77 சதவீதம் பேர்கள் சராசரியாக வெறும் ரூ 20 மட்டுமே சம்பளமாக பெறுகிறார்கள். அவர்களில் பெரும்பாலோனர்களுக்கு நிரந்தரமான வேலை கூட கிடையாது!
ஆகவே, இந்த பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டிகளிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்...!
-மனிதன்.
ராகுல் காந்தி பற்றி விமர்சனம் “மலை மலை” படத்தை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சென்னை, செப். 19-
நடிகர் அருண்விஜய், பிரபு இணைந்து நடித்துள்ள படம் மலை மலை. திரைக்கு வந்து 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. சென்னையில் சில தியேட்டர்களில் பகல் காட்சியாக மட்டும் ஓடிக்கொண்டிருந்தது.
இந்த படத்தில் ஒரு காட்சியில் ராகுல் காந்தியை அவமதிப்பதாக கூறி இந்த படத்துக்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வட சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் இன்று தியேட்டர்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
மாவட்ட பொது செயலாளர் ராஜாசங்கர், 5-வது சர்க்கிள் தலைவர் லூயிஸ்ராஜா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் எழும்பூர் தியேட்டர் முன்பு முற்றுகையிட திரண்டனர்.
ஆனால் தற்போது மலை மலை படம் திரையிடப்படவில்லை என்று தியேட்டர் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் முன்பு முற்றுகையிட முடிவு செய்தனர். அங்கும் இன்று முதல் அந்த படம் திரையிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
உடனே எழும்பூரில் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு கலைந்து சென்றனர்.
இதுபற்றி ராஜாசங்கர் கூறியதாவது:-
ராகுல் காந்தி இளைஞர்களின் மனம் கவர்ந்த தலைவர். அவரைப் பற்றி “மலை மலை” படத்தில் கிண்டல் செய்வது போலவும் எட்டி உதைப்பது போலவும் காட்சி அமைத்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
எங்கள் போராட்டத்தை அறிந்து படத்தை உடனே தூக்கிவிட்டனர். எந்த தியேட்டரில் திரையிட்டாலும் முற்றுகையிடுவோம்.
http://www.maalaimalar.com/2009/09/19152850/vlr050190909.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com