தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, July 17, 2009

♥ பிரபாகரன் பத்தாண்டுகளுக்கு முன்னரே பெரியாரின் கொள்கைகளை ஆழமாகப் படிப்பதாக சொன்னார்கள்....! ♥

"பிரபாகரன் பத்தாண்டுகளுக்கு முன்னரே பெரியாரின் கொள்கைகளை ஆழமாகப் படிப்பதாக சொன்னார்கள்.

விளைவு சீமான் போன்ற பகுத்தறிவு வாதிகள் அவருக்காக சிறை சென்றார்கள்.
"


http://2.bp.blogspot.com/_JIXtPYzDuAY/SNGSW1jrEfI/AAAAAAAAAJM/n2zTdmk6_eE/s320/pl0224023.jpg http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXcNLBh_PxI/AAAAAAAAAvo/sV_ezPMKWTA/s320/periyar7.jpg

பில்லி சூனியமா ? பிரபாகரனா ?

pira-pillyசிங்களப் பேரினவாத ஆட்சியாளர் சென்றவாரம் மந்திரவாதி ஒருவரை பிடித்து நாலாவது மாடியில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி உலகத்தின் பல பாகங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிரபாகரனை பில்லி சூனியம் வைத்து கொன்றது தானே என்றும், வரும் செப்டெம்பரில் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி இல்லாமல் போகும் என்றும் இந்த மந்திரவாதி கூறியிருந்தார். என்ன அடிப்படையில் இவ்வாறு கூறினார் என்பதை அறிய அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக சிங்கள போலீசார் கூறியிருக்கிறார்கள்.

இதற்கு என்ன அடிப்படை இருக்கப்போகிறது, சுத்தமான கடைந்தெடுத்த மூட நம்பிக்கை என்பதை இயல்பாகவே அறிய முடியாமல், நாலாம் மாடிக்குக் கொண்டுபோய் சித்திரவதை செய்து அறிய முற்பட்டிருக்கிறது அரசு. இந்தக் கட்டுரையை எழுதும்வரை மந்திரவாதி விடுதலையாகவில்லை.

இது…

சிரிப்பிற்கிடமான செய்தியா ?

இல்லை..

சிந்திக்க வேண்டிய செய்தியா ?

இரண்டுமே கிடையாது, கண்ணீர் விட்டு அழ வேண்டிய செய்தி !

காரணம்.. சிங்களப் பேரினவாதம் எவ்வளவு மூட நம்பிக்கைகளால் கட்டப்பட்ட ஒன்று என்பதற்காக அழ வேண்டியதில்லை. அதை அறியமல் அல்லல் பட்ட நம்மை நினைத்தும் அழ வேண்டிய செய்தியாகும்.

மகிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல சிங்கள ஆட்சியின் அதிபர்களாக இருந்த அனைவருமே மந்திர தந்திரங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்தார்கள், இருக்கிறார்கள்.

பிரேமதாசா லலித் அத்துலத் முதலி இருவருக்கும் இடையில் நடைபெற்ற அரசியல் மோதலில் பிரேமதாச ஆட்சியை நீடிப்பதற்காக நடாத்திய மந்திரதந்திரங்கள், பூஜைகள், அவற்றிற்காக நடைபெற்ற பல அபத்தமான நிகழ்வுகள் குறித்த செய்திகள் வெளியாகியிருந்தன படித்து அதிர்ந்தோம்.

பிரேமதாச மட்டுமல்ல மற்றய பல சிங்களத் தலைவர்களும் கூட இரத்தினபுரி, அம்பாந்தோட்டைப் பகுதிகளில் இருக்கும் மாய மந்திhPகம், பில்லி, சூனியம் போன்றவற்றை செய்யும் மந்திரவாதிகளே தமது ஆட்சியை காப்பதாக நம்புகிறார்கள் இதற்கு பல கதைகள் உண்டு.

இந்த மந்திரவாதிகளின் கதைகளைக் கேட்டுத்தான் சிங்கள அரசு ஓர் இனப்போரை கட்டவிழ்த்து விட்டிருந்தால், இந்த ஆட்சிகளை காப்பதற்கான நரபலிகளாக பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்களா என்ற கேள்வியும் மனதில் வரும்..

முன்னர் ஒரு தடவை இனப்பிரச்சனை தொடர்பாக பௌத்த பிக்குகளை சந்திக்கச் சென்ற பல மாற்று தமிழ் இயக்கங்களின் தலைவர்களுக்கு விகாரையில் இருந்த பிக்குகள் பச்சைத் தண்ணீரும் கொடுக்க மாட்டோம் என்று கூறிய செய்தியை சிலர் அறிந்திருப்பார்கள். தமிழர்களான அவர்களை பிக்குகள் ஜாதியில் குறைந்தவர்கள் என்று கருதி தாகத்திற்கு தண்ணீரும் கொடுக்க மறுத்திருந்தார்கள்.

புத்தர் ஆடு மேய்க்கும் இடையனிடம் பாலை வேண்டிக்குடித்து, ஜாதிகள் இல்லை என்று சொன்னதை இந்தப் பிக்குகள் விளங்காமல்தான் புத்தமதத்தை நடாத்துகிறார்கள் என்பது கண்ணீர் வரவழைக்கும் உண்மையாகும். ஜாதியில் இருந்து மந்திரம் வரை புத்தமதத்தின் அடிப்படை என்பதற்கு இது ஒரு சாட்சியம்.

இவ்வாறாக புத்த மதத்துடன் இணைந்துள்ள இந்த மந்திர நம்பிக்கைகள் சிங்கள மக்களிடம் நிரம்பி வழிவதை, சிங்கள கிராமங்களுக்கு சென்று நேரடியாக பார்த்தால், அல்லது அவர்களுடன் வாழ்ந்து பார்த்தால்தான் சரியாகப் புரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு சிங்களக் கிராமங்களும், அமைதியில் உறைந்து போயிருக்க நள்ளிரவு முழுவதும் நடைபெறும் இந்த பில்லி, சூனிய ஆட்டங்களை பார்த்தால், உலகத்தின் அறிவியல் வளர்ச்சிக்கும், புத்த ஜாதக, மாந்திhPக கேடுகளுக்கும் உள்ள இடைவெளியை இலகுவாக அறியலாம்.

சிங்கள இராணுவத்தின் இன அழிப்பிற்கு எதிரான போருக்காக ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களில் எத்தனைபேருக்கு இந்த மந்திர ஆட்டங்களும், சிங்கள சமுதாயமும் என்ற விடயம்பற்றி தெரியும் என்று ஆராய்ந்தால், சிங்களவருக்கு எதிராக நாம் வகுத்த வியூகங்களின் போதாமையை உணரலாம்.

எரிக் சொல்கெய்ம், பான் கி மூன், பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுண், பராக் ஒபாமா என்று வீண் காலம் செலவிட்டதைவிட, இந்த சிங்கள மந்திரவாதிகளில் நாலுபேரை பிடித்து, ஒரு யாகம் நடத்தியிருந்தாலே இராணுவத்தை மாவிலாற்றிலேயே தடுத்திருக்கலாமே என்ற உண்மையையும் எண்ணி சிரித்திருக்க முடியும்.

பில்லி, சூனியத்தால் பிரபாகரனை கொன்றதாகக் கூறும் சிங்கள மந்திரவாத கொள்கைகளுக்கும், அதை முறியடிக்க பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுணுக்கு மகஜர் கொடுத்த புலம் பெயர் தமிழர் கொள்கைகளுக்கும் உள்ள இடைவெளியின் யதார்த்தங்களையும் அறிந்;திருக்க முடியும்.

மேலும் மகிந்த அரசு மட்டுமல்ல, ரணில் விக்கிரமசிங்க, அனுரா பண்டாரநாயக்கா, ஜே.ஆர்.ஜெயவர்தனா போன்ற சிங்களத் தலைவர்கள் அடிக்கடி இந்தியா செல்வதும், பிரபல இந்திய சாமியார்களை சந்திப்பதும் ஏன் என்றும் நாம் ஆழமாக சிந்தித்திருக்க வேண்டும்..

உண்மையாகவே சிங்கள தலைவர்கள் எரிக் சோல்கெய்மைவிட, பான் கீ மூனைவிட இந்த மந்திரச் சாமியார்களின் பலம் பெரிது என்பதை அறிந்திருந்தார்கள். அதனால்தான் பருவம் தவறாமல் இந்திய சாமியார்களுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, அரசியலை நகர்த்தினார்கள். இந்த இடத்தில் இந்து மதத்தின் அவலம் இருக்கிறது.

காரணம் பெரும்பாலான இந்திய அரசியல் வாதிகளும் தம்மைப்;போலவே இந்த மந்திரச் சாமியார்களின் ஆட்டங்களை நம்பித்தான் ஆட்சி நடாத்துகிறார்கள் என்பது மந்திரவாதிகளின் கால்களில் கிடக்கும் சிங்களவர்களுக்கு தெரியும். பாம்பின் கால் பாம்பறியும் என்பது பழமொழியாகும். சிங்கள ஆட்சியாளர் மீதான இந்திய கரிசனையை ஏற்படுத்த மந்திரச் சாமியார்களின் பங்களிப்பே பெரியது என்ற உண்மையை நாம் அலட்சியப்படுத்தினோம்.

கடிகாரம், பூ போன்ற பல மந்திரப் பொருட்களை எடுத்துக் கொடுக்கும் பல இந்திய சாமியார்களை வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களும் கொண்டாடுகிறார்கள். வன்னியில் நடைபெற்ற அவலங்களை இந்த மந்திரச் சாமியார்கள் ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பாமல் பூஜைகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

தமிழகத்தில் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் மந்திர தந்திரங்களுக்கு எதிரான பகுத்தறிவு போராட்டங்களை நடாத்தினார்கள். அதன் மூலமாக மதவாத நம்பிக்கைகள் கொண்ட காங்கிரஸ் ஆட்சியை தெற்கில் தோற்கடித்தார்கள்.

அதுபோல வட இந்தியாவில் இருந்த காங்கிரசை தோற்கடிக்க ஒரு பகுத்தறிவு கொள்கை வரவில்லை, அதைவிட மோசமான மூட நம்பிக்கைகள் கொண்ட, பாபர் மசூதியை இடித்த பா.ஜ.க தான் வரமுடிந்தது.

தமிழகத்தில் உண்டான பகுத்தறிவு அதிகாரமற்ற மாநில ஆட்சியை பிடித்தது !

வட இந்தியாவில் அத்வானியும், நரேந்திரமோடியும் வளர்த்த மூடநம்பிக்கைகள் நிறைந்த அரசியல் வட இந்திய ஆட்சியை பிடித்தது ! இதுவே இந்தியாவில் நடந்த முரண்பாடு.

இதை அறிந்த சிங்களத் தலைவர்கள் அதிகாரமற்ற தென்னிந்திய பகுத்தறிவாளரிடம் போகாமல் இந்திய சாமியார்களிடம் போனார்கள், தமது எண்ணங்களை அவர்கள் மூலம் நிறைவேற்றினார்கள்.

பிரபாகரன் பத்தாண்டுகளுக்கு முன்னரே பெரியாரின் கொள்கைகளை ஆழமாகப் படிப்பதாக சொன்னார்கள்.

விளைவு சீமான் போன்ற பகுத்தறிவு வாதிகள் அவருக்காக சிறை சென்றார்கள்.

புகுத்தறிவு சிங்கம் கலைஞர் தனது கறுப்புச் சட்டையை கழற்றி வீசி, மங்கள கரமான மஞ்சள் சால்வை அணிந்து, பா.ஜ.கவுடன் இணைந்ததையும், அவர் பேரன் அதன் பின்னால் உலகத்தின் 59 வது பணக்காரராக வந்ததையும் பலர் அறிவார்கள்.

கடைசிவரை பகுத்தறிவு கொள்கையாளராக இருந்த அறிஞர் அண்ணா ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையைத் தந்தாலும், தனது இனிய குடும்பத்திற்கு வறுமையை மட்டுமே தந்ததையும் நாம் அறிவோம். இந்த அவலத்தைப் பார்த்து அண்ணாவின் மகன் டாக்டர் பரிமளம் சில வருடங்களுக்கு முன் விரக்தியால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததை ஒரு கொள்கைக்காகக் கூட ஈழத் தமிழர் பேசவில்லை.
இப்படியாக ஒரு சிங்கள மந்திரவாதியின் கைது நமது உள்ளத்தில் உருவாக்கும் எண்ண அலைகளே மேலே சொல்லப்பட்ட விடயங்கள்.

உலகத்தில் இதுவரை நடைபெற்ற போர்களெல்லாம் மந்திரவாதிகளால் பூவா, தலையா போட்டுப் பார்த்த பின் செய்யப்பட்ட போர்களே .. என்பது புகழ் பெற்ற மேலைத்தேய பழமொழியாகும்.

இப்போது பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பதுகூட மந்திர தந்திர மூட நம்பிக்கைகளுக்குள்தான் சிக்குப்பட்டுத் தவிக்கிறது. பிரபாகரன் 80 வயது வரை உயிருடன் இருப்பார் என்ற தமிழகத்தில் ஜோதிடர் ஒருவர் கூறியிருக்கும் கருத்தை நமது புலம் பெயர் தமிழரில் பலர் இப்போது வேகமாக பேசி வருகிறார்கள். கனடாவில் இருக்கும் ஒருவர் பிரபாகரனை 80 வருடங்கள் அசைக்க முடியாது என்று இந்த ஜோதிடரை ஆதாரம் காட்டி கூறிவருகிறார்.

சிங்கள மந்திரவாத கதையை கேட்டு அழும் நாம், பிரபாகரன் காலத்தால் அழியாத புகழ், வெறும் 80 வருடங்கள் அல்ல அவரது புகழ் வாழ்வு என்று கூட சிந்திக்க முடியாதளவிற்கு நமது மூளைகளை ஜோதிடத்திடம் அடகு வைத்துவிட்டு நிற்பதையும் கொஞ்சம் சிந்தித்தால் நாமும் பெரிய பகுத்தறிவுவாதிகள் அல்ல என்ற கசப்பான உண்மை வெளிப்படும்.

இஸ்லாமிய மூடத்தனங்களில் பின்லாடனும்..

கிறீத்தவ மூடத்தனங்களில் ஜோர்ஜ் புஸ்சும் ..

சிக்குண்ட கதைகளையும் இவற்றோடு கொஞ்சம் இணைத்தால் நமக்கு மேலும் பல உண்மைகள் தெரியவரும்.

முள்ளை முள்ளால்தான் எடுக்கலாம்..

மந்திரத்திரத்தால் மாங்காய் விழுத்தப் புறப்பட்டுள்ள ஆட்சியாளரை இந்த மந்திரவாதிகளையும் சாமியார்களையும் வைத்துத்தான் விளங்கவும் முடியும். கி.செ.துரை


http://nimban.files.wordpress.com/2009/06/britain-tamils.jpg


http://www.nerudal.com/nerudal.9314.html
No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!