தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, July 17, 2009

♥சிங்கள முப்படைகளிலும் இருந்து 65 ஆயிரம் பேர் தப்பி ஓட்டம் ♥

இலங்கையில் முப்படைகளிலும் இருந்து 65 ஆயிரம் பேர் தப்பிச்சென்றுள்ளனர்

http://static.howstuffworks.com/gif/army-1.jpg


இலங்கையில் முப்படைகளிலும் இருந்து 65 ஆயிரம் பேர் தப்பி சென்றுள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் செயலாளர் சுகந்த கம்லத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இவர்களில் 2 ஆயிரம் பேர் வரை, தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இராணுவத்தில் தமது சேவையை வழங்க மறுப்புத் தெரிவித்த ஆயிரத்து 506 பேர் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் வீ ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார்.

http://tamilwin.com/view.php?2a26QVH4b3dD9Eq34d0SWnL3b02R7GGb4d3aYpD4e0dLZLukce0cg2h32ccelj0U2e


http://www.blindart.net/site/media/images/1201_R1116_VictoriaCank_EscapeFr.jpg

பிரபாகரன் என்னும் மந்திரச்சொல்!

பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல் / பெயர் ஒவ்வொரு தமிழனுக்கும் , சிங்களனுக்கும் , இந்திய அதிகார வர்க்கத்திற்கும் ஏற்படுத்தும் அதிர்வுகள் விதவிதமானவை.

தமிழனுக்கு அந்தப் பெயர் தனது உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தின் உந்து கோல்.

சிங்களனுக்கோ தனது வெற்றியென்பதே பிரபாகரனின் மரணத்தில் தான் உள்ளதென்று புலம்புகிற அளவிற்கு பயவுணர்ச்சி மேலிடும் சொல்.

இந்திய அதிகார வர்க்கத்திற்கோ , இலங்கையில் தம்து மேலாதிக்கத்தை நிறுவிட இருக்கும் தடைக்கல் பிரபாகரன் என்ற சொல்.

சிங்களனும் , இந்திய அதிகார வர்க்கமும் , பிரபாகரன் அழிந்து விட்டார்என்று நிருப்பிப்பதன் மூலம் ஈழத்தில் இருக்கும் தமிழர்களை அடக்கியாள்வது எளிதாகும். புலம் பெயர் தமிழர்களின் போராட்டத்தின் குரல்வளையை நெருக்கிட உதவும்.

ஆனால் , தமிழனுக்கு...?

பிரபாகரனின் மரணம் என்பது அவனது ஆத்துமாவின் மரணம். மானசீக கடவுளாகவே மாறிப் போய்விட்ட தனது தலைவனின் பெயர் உள்ளத்திற்கு உரமேற்றும் மந்திரப் பெயர்.

அதனால் தான் அந்த மனிதனின் மரணமோ அல்லது தலைமறைவோ இப்படி பேசுபொருளாகி விட்டது. அன்று நேதாஜியின் தலைமறைவோ / மரணமோ இதே காந்தியின் வழித் தோன்றல்களாகிய காங்கிரஸ் பேரியக்கத்தார்களால்தான் விவாதப் பொருளாக்கப்பட்டது. இன்றும் அவர்களாலேயே.

பிரபாகரன் இறந்திருந்தாலும் சரி , கரும்புலிப் படையால் காடுகளுக்குள் பாதுகாப்பாக தலைமறைவாகி இருந்தாலும் சரி , அந்தப் பெயர் அவர்களுக்கு கில்யூட்டத்தான் போகிறது.

சகோதர யுத்தம் / புலிப்பாசிசம் இவைகளெல்லாம் என்ன ஆயிற்று?


ஒருசில தினங்களுக்கு முன்பு கருணா அவர்கள் பிரபாகரனின் பிளாஸ்டிக் சர்ஜரி பிணத்தை அடையாளம் காட்ட வன்னி சென்றிருந்தார். அம்மாவீரன் வழிநடத்திய விடுதலைப் போரின் முடிவிற்கு காரணமாகி அழியாப் புகழ் பெற்ற கருணா சொன்ன இந்த வாக்கியம் " அது பிரபாகரன் தான்..." பிரபாகரன் தீர்க்க தரிசி என்பதை விளக்கிற்று.

துரோகிகளையும் , சிங்களனுக்கு துணை போனவனையும் அவ்வப்போதே கொன்று கணக்கை தீர்த்து வைத்தது வரை புலிகளின் போராட்டம் உயிர்ப்புடனும், வெற்றியுடனும் இருந்து வந்தது. இந்தக் கருணா போன்ற இனத்துரோகிகளை கொன்றொழிக்காமல் விட்டது பிரபாகரனின் தவறுதானே ? அப்படி துரோகியான கருணாவைக் கொன்றிருந்தால் அதையும் சகோதர யுத்தம் என்றுதானே சொல்லியிருப்பார்கள் ?

புலிப்பாசிசம் , சகோதர யுத்தம் பேசுபவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அத்தகைய சிந்தனைகள் புலிகள் பற்றிய பார்வையை மாற்ற உதவும். சரியான பார்வை , தமிழர்களின் போராட்டத்தின் திசையை நிர்மாணிக்க உதவும்.

http://www.mathibala.com/2009/05/blog-post_21.html

Share/Save/Bookmark

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!