பிரான்ஸில் "தமிழீழ மக்கள் பேரவை" அமைப்பு உருவாக்கம்
பிரான்ஸில் "தமிழீழ மக்கள் பேரவை" எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக அவ்வமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கை பின்வருமாறு:
தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு விடுக்கும் அறிவித்தல்
எமது தாயகம் தமிழீழம் தொடர்பாக பிரான்சில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழரின் அரசியல், பொருளாதாரம், மனிதாபிமானம், கல்வி, சமூகநலம், போன்றவற்றை முன்னெடுக்கும் செயற்பாட்டிற்கும் செயற்படுவதற்குமான அமைப்பொன்றை உருவாக்க பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் எடுத்துக்கொண்ட ஆலோசனையின் பேரில் தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு என்கின்ற பெயரில் அமைப்பு ஒன்றினை உருவாக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இம்முயற்சியில் மக்கள் அனைவரின் ( பிரெஞ்சு, தமிழ்) கருத்துக்களையும் உள்வாங்கி ஐனநாயக விழுமியங்களின் அடிப்படையில் நாடு தழுவிய யாப்பொன்றையும் கட்டமைப்பினையும் உருவாக்கி அதன் ஊடாக தாயகத்தில் துன்பத்தின் விளிம்பில் இருக்கும் எமது மக்களுக்கு உதவுமுகமாகவும், இந்த அமைப்பின் ஏனைய செயற்பாடுகள் , நிலைப்பாடுகள் பற்றி விளக்குமுகமாகவும் ஓர் ஒன்றுகூடலும் நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடலில் பிரான்சுவாழ் தமிழ்மக்கள் புத்திஜீவிகள், கல்விமான்கள், அரசியல், அரசியல் விஞ்ஞானம் கற்போர், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூகசேவையாளர்கள், தொண்டர்கள், தமிழர் அமைப்பு பிரதிநிதிகள், அரச அரசசார்பற்ற செயற்பாட்டாளர்கள் இன்னும் எமது தேசியத்தின் இருப்புக்கும் பணியாற்ற விரும்பும் அனைவரையும் இதில் கலந்து கொண்டு உங்கள் ஆலோசனைகளையும், ஆக்கபூர்வமான கருத்துக்களையும் தந்து தமிழீழ மக்கள் பேரவையின் செயற்பாட்டுக்கு அனைத்து வழிகளிலான ஒத்துழைப்பையும் தந்துதவுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
ஒன்றுகூடல் நடைபெறும் இடம்:
Salle de Conférence- Mairie de Bagnolet
Place Salvador Allende
Metro : Gallieni
காலம் 19.07.2009 ஞாயிற்றுக்கிழமை
நேரம் பி.பகல் 17.00 மணிக்கு
தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com