கருணாநிதியையும் கனிமொழியையும் நம்பி இனிமேலும் புலம்பெயர் தமிழர்கள் ஏமாறக்கூடாது
ஈழத்தமிழர்கள் கடந்த பல தசாப்தங்களாக கலைஞர் கருணாநிதி மீது நம்பிக்கை வைத்து நடந்தார்கள். தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவர்தான் காவலர் என்றெல்லாம் நம்பியிருந்தார்கள். தங்களுக்கு ஆபத்து ஏற்படுகின்ற வேளையில் கலைஞர் வந்து தங்களைக் காப்பாற்றுவார் என்றெல்லாம் காத்திருந்தார்கள்.
எனவே கலைஞர் கருணாநிதியும் அவரது புதல்வி கனிமொழியும் அடிக்கடி விடும் பத்திரிகை அறிக்கைகளைப் பார்த்து புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் ஏமாந்து விடக் கூடாது. மாறாக அவர்களிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்க வேண்டும். கடந்த சில வருடங்களாக இலங்கையின் வடபகுதியில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைகளை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?
கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதியளவில் இந்திய மத்திய பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஒரே நாளில் வன்னி மண்ணில் படுகொலை செய்யப்பட்ட இருபத்தையாயிரம் அப்பாவி மக்களின் படுகொலைகளைப் பற்றி ஏற்கனவே நன்கு அறிந்திருந்தும் ஏன் அதை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்தீர்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்க வேண்டும்' இவ்வாறு தமிழக அண்ணா தி.க தலைவி செல்வி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவின் கணவரும் "புதிய பார்வை'' சஞ்சிகையின் பிரதம ஆசியரும், தமிழ்நாடு ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் நெடுமாறனோடு தோளோடு தோள் நின்று செயற்படுபவருமாகிய நடராஜன் தெவித்தார்.
கனடாவில் தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் மார்க்கம் என்னும் நகரில் நடைபெற்ற ஒரு நிதி சேகப்பு வைபவத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவே நடராஜன் கனடாவிற்கு வருகை தந்திருந்தார். மார்க்கம் நகர சபையின் மேயர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட மேற்படி நிதி சேகரிப்பு வைபவத்தில் சேகக்கப்பட்ட நிதி உலகில் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியன் நலன்களுக்காக பயன்படுத்தப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மார்க்கம் நகர சபையின் ஒரே ஒரு தமிழ் பேசும் அங்கத்தவரான லோகன் கணபதியும் அங்கு கலந்து கொண்டார் அமெரிக்காவின் அட்லான்ரா மாநகல் நடைபெறவுள்ள வட அமெக்க தமிழர் சம்மேளனத்தின் மூன்று நாள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா பயணமாவதற்கு முன்னர் நடராஜன் கனடா உதயன் பத்திகையின் ஆசிரிய பீடத்திற்கு நேர்காணல் வழங்கியிருந்தார்.
மேற்படி நேர்காணலின் ஆரம்பத்தில் கனேடிய தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் (அது கனடா உதயன் அல்ல) பிரசுக்கப்பட்டிருந்த ஒரு செய்தி தொடர்பான தனது ஆதங்கத்தை தெரிவித்தபடி தனது கருத்துகளை கூற ஆரம்பித்தார். அவருக்கு ஆத்திமூரட்டிய அந்த செய்தி என்ன வெனில், கலைஞர் கருணாநிதியின் புதல்வியும், இந்திய மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அண்மையில் விடுத்த பத்திரிகை அறிக்கை ஒன்றுதான்.
அதில் இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதைத் தடுத்து நிறுத்தத் தனது தந்தை கலைஞர் கருணாநிதி முயற்சி எடுத்தபோது தமிழகத்தின் சில சுயநலமிக்க அரசியல்வாதிகளின் செயற்பாடுகளே அதைச் செய்யவிடாமல் தடுத்து விட்டன என்று கனிமொழி அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த அறிக்கை பற்றிய தனது ஆட்சேபனையையும் மறுப்பையும் தெரிவித்தபடி கனடா உதயன் ஆசிய பீடத்தின் கேள்விகளுக்கு நடராஜன் தனது பதில்களை கூற ஆரம்பித்தார்.
" தனது பத்திரிகை அறிக்கையில் கனிமொழி குறிப்பிட்டுள்ள அந்தச் சுயநலம்மிக்க தமிழ் அரசியல்வாதிகள் யார் என்பதை உடனடியாக தெவிக்க வேண்டும் என்று புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கனிமொழியிடம் கேள்விகளைக் கேட்கவேண்டும். மக்களை ஏமாற்ற நினைக்கும் கனிமொழிக்கு தாங்கள் முட்டாள்கள் அல்ல என்பதை தமிழ் மக்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும். அதை விடுத்து அந்த ஏமாற்றுக்கார தந்தையும் மகளும் விடும் புழுகுகளை உங்கள் பத்திரிகையில் பிரசுத்து அவர்களின் பொய்யான அரசியலுக்கு துணை போக வேண்டாம்'' என்று நடராஜன் கேட்டுக் கொண்டார்.
மேற்படி கனடா உதயன் நேர்காணலின்போது நடராஜன் சற்று உணர்ச்சி வசப்பட்டவராகக் காணப்பட்டார். விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு நடத்திய போருக்கு இந்திய அரசு அளவுக்கு அதிகமான உதவிகளை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னமே வழங்கத் தொடங்கிவிட்டது. இவையெல்லாம் கலைஞர் கருணாநிதிக்கும் அவரது புதல்விக்கும் ஏற்கெனவே நன்கு தெரியும் என்று கூறிய நடராஜன் இருவருமே தாங்கள் தமிழக மக்களுக்கு சொல்லவேண்டிய பல உண்மைகளை மறைத்து விட்டார்கள்.
இதன் மூலம் தங்கள் சொந்த மக்களையே அவர்கள் ஏமாற்றி விட்டார்கள்' என்றும் தெவித்தார். நடந்து முடிந்த தேர்தலுக்கும் வன்னி மண்ணில் நடந்த இனப்படுகொலைகளுக்கும் என்ன தொடர்பை நீங்கள் காண்கின்றீர்கள்? என்ற கனடா உதயனின் கேள்விக்கு நடராஜன் மிகவும் விளக்கமான பதிலை அளித்தார். திகதிவாரியாக அவர் தெரிவித்த விவரங்கள் தெளிவானவையாகத் தென்பட்டன. கடந்த பல வருடங்களாகவே இந்திய அரசு இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை செய்யத் தொடங்கிவிட்டது.
விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்று நினைத்த இந்தியாவின் எண்ணத்தை நன்கு புரிந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி மஹிந்தவும் மிகவும் வேகமாகச் செயற்பட்டார். முதலில் இலங்கை இராணுவவீரர்கள் ஆயிரம் பேருக்கு தீவிரமான பயிற்சி வட இந்தியாவில் வழங்கப்பட்டது. ஆரம்ப போருக்கு தேவையான நிதி உதவியாக ஆயிரம் கோடி ரூபா வழங்கப்பட்டது. இவையெல்லாம் கலைஞர் கருணாநிதிக்கு நன்கு தெந்திருந்தும் அதை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டார்.
அதை விட விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களைக் கண்டு பிடிக்கக் கூடிய அதிசக்தி வாய்ந்த ராடர் கருவிகளையும் அதை இயக்க வல்ல தொழில்நுட்ப அதிகாரிகளையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தது. நான் இங்கே மிகவும் முக்கியமான விடயம் ஒன்றை தெரிவிக்க விரும்புகின்றேன். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் தமிழ்நாட்டுச் சிறையில் ராஜிவ்காந்தி கொலைக் குற்றவாளி நளினியை சோனியாவின் புதல்வி பியங்கா சந்தித்து சதித்திட்டம் தீட்டிய விபரங்கள் அனைத்தும் கலைஞருக்கு தெரியும்.
நளினியிடமிருந்து என்னென்ன விடயங்கள் பெற முயற்சி எடுக்கப்பட்டன என்பதும் கலைஞருக்கு தெரியும் அதை அவர் மறைத்திருக்கின்றார். ஆனாலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அவர்கள் போர் செய்து அழிக்க எண்ணியதை நான் விமர்சிக்கவில்லை. நேர்மையான முறையில் யுத்தம் நடைபெற்றிருந்தால் விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என்பதையும் நான் நன்கு அறிவேன். விடுதலைப் புலிகளை கலைஞர் கருணாநிதியும் அவரது புதல்வி கனிமொழியும் காப்பாற்றியிருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை.
வன்னியில் வாழ்ந்து வந்த அப்பாவிப் பொதுமக்கள் முப்பதாயிரம் பேர்வரையில் கொடிய யுத்தத்தால் கொல்லப்பட்டதை அவரால் தடுத்து நிறுத்த முயலவில்லை. அவர் மனம் வைத்திருந்தால் அதைச் செய்திருக்கலாம். ஆனால் எல்லாம் முடிந்த பின்னர் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு தமிழகத்து மக்களையும் இலங்கைத்தமிழ் மக்களையும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களையும் ஏமாற்றப்பார்க்கின்றார்.
ஜூன் மாதம் 16ஆம் திகதி இந்திய மத்திய அரசின் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. நானும் ஐயா நெடுமாறனும் வன்னியில் இருந்த நடேசனோடு 15ஆம் திகதி இரவு பேசுகின்றோம். ஆனால் காங்கிரஸ் கட்சியும் தி.கவும் வெற்றி பெற்றுவிட்டன என்ற செய்தி இலங்கை அரசுக்கும் ஜனாதிபதி மஹிந்தவிற்கும் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அநியாயமாக அப்பாவிப் பொதுமக்கள் இருபத்தையாயிரம் பேர்வரை குண்டுகளாலும் எறிகணைகளாலும் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். அதுவும் ஒரே நாளில்.
இவ்வாறு பெருந்தொகையான மக்களை இந்திய பொதுத்தேர்தல் முடிவுகளைப் பார்த்து அதன் பின்னர் அழிக்க வேண்டும் என்ற இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதித்திட்டம் பற்றி நன்கு அறிந்திருந்த கலைஞர் கருணாநிதி அதை தனது சொந்த மக்களான தமிழ் நாட்டு மக்களுக்கு சொல்லியிருக்க வேண்டும். அதைச் செய்ய அவர் தவறிவிட்டார். அதை மறைக்க தற்போது அவரது புதல்வி கனிமொழி கபட நாடகம் ஆடுகின்றார். புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மேலும் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும்.
ஜூன் மாதம் 18ஆம் திகதியளவில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், அமையப்போகும் புதிய அரசில் தனது குடும்பத்தைச் சேர்ந்த அழகிரி, கனிமொழி மற்றும் மருமகன் கலாநிதிமாறன் ஆகியோருக்கு மந்திரிப் பதவி பெறுவது அதுவும் மிகவும் வருமானம் தரக் கூடிய அமைச்சுகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக கலைஞர் சக்கர நாற்காலியில் அமர்ந்து புதுடில்லி செல்கின்றார். அங்கு அவரது கோரிக்கைகள் நிறைவேறாத காரணத்தால் அவர் தனது குழுவினரோடு திரும்பி வருகின்றார்.
ஆனால் சில நாட்கள் கழித்து ஜனாதிபதி மஹிந்தவை இந்தியாவின் மத்திய அரசு சார்பில் பாராட்ட இலங்கை சென்ற நாராயணன் இந்தியா திரும்பும் வழியில் சென்னையில் கலைஞர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்திக்கின்றார். அப்போது அவர்கள் உரையாடிய விடயங்கள் தமிழ் நாட்டு பொது மக்கள் பற்றியோ அன்றி பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்கள் பற்றியோ அல்ல. மாறாக நடந்து முடிந்த போரில் யார் யார் கொல்லப்பட்டார்கள்?. என்னென்ன விடயங்கள் இனிமேல் இலங்கை இந்திய அரசுகளின் நகர்வுகளில் நடக்கப் போகின்றன? மத்திய அரசு ஆகக்குறைந்தது எத்தனை அமைச்சர் பதவிகளை தி.க உறுப்பினர்களுக்கு தரப்போகின்றது? அதுவும் என்னென்ன அமைச்சுகள்? இவை பற்றித்தான் கலைஞர் கருணாநிதியுடன் சென்னையில் பேசினார்கள்.
கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் பற்றி அவர்கள் பேசவில்லை. யுத்தம் டிந்ததனால் வவுனியாவில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியோ அவர்களது மீள் குடியேற்றம் பற்றியோ கதைத்திருக்க வேண்டிய ஒரு தேவை அப்போது இருந்தது. ஆனால் கலைஞர் கருணாநிதியோ அவை பற்றியெல்லாம் கதைக்காமல் தமது குடும்ப நலன் பற்றிக் கதைத்துள்ளார்.
மத்திய அரசின் வெளியுறவுப் பிரிவு உயர் ஆலோசகர் நாராயணன் தனது வீட்டுக்கு வந்தும் கூட அவரிடம் வன்னி மண்ணில் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் தொடர்பாக அக்கறையாக எதுவும் பேசவில்லை. அவருக்கு தமிழ் நாட்டு மக்கள் மீதோ அன்றி வவுனியாவில் வதை முகாம்களிலுள்ள மூன்று இலட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் பற்றியோ கவலையில்லை. இவற்றைப் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
இனிவரும் காலங்களில் அவர்கள் வெளியிடும் அறிக்கைகளைப் புறக்கணிக்க வேண்டும். இலங்கையில் நடந்து முடிந்துள்ள தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் பற்றியெல்லாம் நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு நாடகமாடிய கலைஞரது முகத்திரையை கிழிக்க ஒன்றுபட வேண்டும். இதுவே எனது வேண்டுகோள்' இவ்வாறு நடராஜன் தனது நேர்காணலை நிறைவு செய்து கொண்டார்.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com